NFPE PJCA FNPO
அஞ்சல் கூட்டு போராட்ட குழு --நெல்லை
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ ?நாங்கள் சாகவோ ? அழுது கொண்டிருப்போமோ ? --பாரதி
அஞ்சல் துறையில் தனியார்மய நுழைவினை எதிர்த்து உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் -- அகிலஇந்திய கூட்டு போராட்ட குழு அறைகூவல்
நாள் --22.06.2022 நேரம் மதியம் 1 மணி
இடம் ----பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு
அஞ்சல் துறை படுவேகமாக அமுல்படுத்திவரும் டாக்மித்ரா ,CSC பார்சல் புக்கிங் என எந்த திட்டத்தையும் தொழிற்சங்கங்களோடு கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுத்திவருகிறது ....எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயலாக நாம் நூறாண்டுகளுக்கு மேல்அலைந்து திரிந்து சேமித்து சேர்த்துவைத்த அஞ்சல் சேமிப்பு கணக்குகள் ,சேமிப்பு காப்பீடு பிரிவுகள் அனைத்தும் ஒரே உத்தரவில் IPPB யின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுவிட்டது ...மேலும் நெட்ஒர்க் கான்ட்ராக்ட் அனைத்தும் இனி IPPB தான் மேற்கொள்ளும் என்பதுமட்டில்லாமல் IPPB யும் அசுர வேகத்தில் தன் நெட்ஒர்க் சம்பந்தமாக டெண்டர் கோரியிருக்கிறது ..ஒரே நாளில் நமது கட்டுப்பாட்டில் இருந்த போஸ்டல் ATM IPPB க்கு கைமாறிவிட்டது ..
அஞ்சல் துறையின் இந்த தனியார்மய மோகத்திற்கு முடிவுகட்டிட நமது அஞ்சல் கூட்டு போராட்டக்குழு (NFPE --FNPO)சம்மேளனங்கள் நிர்வாகத்துடன் பலசுற்று பேசியும் --எழுதியும் இதுவரை அஞ்சல் இலாகா தனது நிலையில் இருந்து மாறிடவில்லை ...ஆகவே நமது இலாகாவின் இந்த செயல்பாட்டினை கண்டித்தும் அஞ்சல் துறையில் தனியார் நுழைவினை எதிர்த்தும் முதற்கட்டமாக அனைத்து இடங்களிலும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தை நடத்திட அறைகூவல் விடுத்துள்ளது ..
தொடர்ந்தது அஞ்சல் இலாகா நமது கோரிக்கைகளின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால் ஒரு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை செய்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது
ஆகவே நமது துறைக்கு நெருங்கிவரும் தனியார் மய ஆபத்தை தடுத்து நிறுத்திட நடைபெறும் அனைத்து இயக்கங்களிலும் தாங்கள் அனைவரும் முழுமையாக கலந்துகொள்ளும்படி கூட்டு போராட்டக்குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்
நன்றி
தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் கன்வீனர் கூட்டு போராட்டக்குழு
G.சிவகுமார் தலைவர் கூட்டு போராட்ட குழு
அஞ்சல் மூன்று --அஞ்சல் நான்கு --புறநிலை ஊழியர்கள் சங்கம் -அஞ்சல் பொருள் கிடங்கு ---மற்றும் RMS-- திருநெல்வேலி கோட்டம்
0 comments:
Post a Comment