...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 4, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                             புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒரேஒரு கோரிக்கையினை மட்டுமே வைத்து அனைத்து அமைப்புகளும் வேலைநிறுத்த அறிவிப்புகளை வெளியிடும் நாள் நெருங்கிவருகிறது .01.01.2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் இன்று 15 ஆண்டுகளை தாண்டி நிற்கிறது .ஆரம்பத்தில் இந்த கோரிக்கையினை வைத்தபோதும் அதற்கான இயக்கங்களை நடத்தியபோதும் அதன் முக்கியத்துவம் அவ்வளவாக தெரியவில்லை .ஆனால் இன்று NPS திட்டத்தில் இருந்து ஓய்வு பெருகிறவர்கள் வாங்குகிற பென்ஷன் ? தொகையினை கேட்கும் பொழுது இந்த படு ஆபத்தான திட்டத்தை நீக்கிட வேண்டும் என்ற எண்ணங்கள் ஒவ்வொரு தொழிலாளியின் உள்ளத்தில் எழ தொடங்கிவிட்டன .ஆரம்பத்தில் NPS குறித்து அலட்சியமாக நடந்துகொண்ட எல்லா அரசாங்கங்களும் இன்று பெருகிவரும் எதிர்ப்பை கணக்கில் கொண்டு ஒவ்வொரு அறிவிப்பை அறிவித்துக்கொண்டிருக்கிறது .
 NPS ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு பழைய 1972 ஆண்டு ஓய்வூதிய சட்டப்படி குடும்பஒய்வூதியம் பிறகு கிராஜூடி லீவு சம்பளம் குரூப் இன்சூரன்ஸ் என்று எதோ நமக்கு இலவசமாக கொடுப்பதைப்போல் அரசு அவ்வப்ப்போது அறிவித்துவருகிறது .ஆனால் நமது கோரிக்கையான அடிப்டைசம்பளத்தில் 50 சதம் ஓய்வூதியமாக கிடைக்கவேண்டும் என்பதனை குறித்து வாய்திறக்க அரசு மறுக்கிறது .இன்று பலமாநிலங்களில் டெல்லி ஆந்திரா போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர சட்டமன்றங்கள் முற்போக்கு தீர்மானங்களை எடுத்துள்ளன .தமிழகத்தில் கூட ஜெயலலிதா அரசு NPS குறித்த மறு ஆய்வு குழுவை அமைத்தது .
                            எப்படி 1960 1965 களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் என்ற கோரிக்கை எழுந்தபோது எள்ளிநகையாடிய சர்க்கார் 10 ஆண்டுகளுக்கு பிறகு 1978 யில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கியது .இது ஒன்றும் தானாக கிடைக்கவில்லை .மத்திய அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம் 
தொழிலாளி நலன் சார்ந்த அரசாங்கம் இவைகளினால் போனஸ் பெறமுடிந்தது என்றால் நிச்சயம் NPS திட்டத்தை நீக்கிவிட்டு மீண்டும் சமூகப்பாதுகாப்பின் அடிப்படையான பழைய பென்ஷன் தொடருவதற்கு நாம் தொடர்ந்து இயக்கங்களை நடத்துவோம் .நிச்சயம் NPS ஒருநாள் நீக்கப்படும் .அதற்கான போராட்டங்களில் நாம் முழுமையாக பங்கேற்போம் .
 நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, January 3, 2019

அன்பார்ந்த தோழர்களே !
   04.01.2019 அன்று (ஜனவரி 8&9 இருநாட்கள்) வேலைநிறுத்த விளக்க கூட்டம் மாலை 6 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறுகிறது .அனைத்து தோழர்களும் விளக்க கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம் .
---------------------------------------------------------------------------------------------------------------------
மாதாந்திர பேட்டி டிசம்பர் மாதம் நடைபெறவில்லை .இருந்தாலும் வருகிற 17.01.2019 வியாழன் காலை 10 மணிக்கு மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .தோழர்கள் தங்கள் அலுவலக பிரச்சினைகள் இருந்தால் வருகிற 06.01.2019 குள் கோட்ட சங்கத்திற்கு தெரிய படுத்தவும் 
---------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவழியாக நேற்று விடுபட்ட பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு கீழுள்ள தோழர்களுக்கு மாலை சென்றமாதம் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டது .இன்னும் விடுபட்ட தோழர் கண்ணன் தபால்காரர் பேட்டை அவர்களது சம்பளம் குறித்தும் கோட்ட அலுவலக கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது .இன்றும் முடியவில்லை என்றால் கோட்ட சங்கம் மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் .
------------------------------------------------------------------------------------------------------------------
 GDS ஊழியர்களுக்கு வருடம் 5 நாள் அவரசகால விடுப்பு(EMERGENCY LEAVE)  01.01.2019 முதல் அமுலாகிறது .
1.அவசரகால விடுப்பினை ஒரு காலண்டர் ஆண்டில் 5 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
 2.ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் மட்டுமே அவசரகால விடுப்பு எடுத்துக்கொள்ள முடியும்.
3. அவசரகால   விடுப்புகளுக்கு பதிலிகள் (SUBSITUTE ) நியமிக்கப்படக் கூடாது. இரண்டு GDS ஊழியர்கள்(BPM- ABPM ) உள்ள அலுவலகங்களில் ஒருவர் விடுப்பு எடுத்தால் மற்றவருக்கு COMBINED DUTY போட வேண்டும். தனிநபர் அலுவலகம் எனில் பதிலி நியமிக்கலாம்.
 4. இதனை அடுத்த ஆண்டு அவசர விடுப்பு கணக்கில் சேர்க்கவோ(Carry Forward ) அல்லது பணமாக்கி(Encashment) கொள்ளவோ முடியாது.
 5. அவசரகால  விடுப்பினை எடுப்பதற்கு BPM ஊழியர்கள் கோட்ட அலுவலகத்தின்(DO) அனுமதியையும் BPMதவிர்த்த மற்ற GDSஊழியர்கள் உட்கோட்ட அதிகாரி/முதுநிலை அஞ்சல் அதிகாரி/அஞ்சல் அதிகாரி  அனுமதியையும் பெற வேண்டும்.
6.ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் அவசர விடுப்பின் முன்பு அல்லது  பின்பு இருப்பின் அவைகள் அவசரகால விடுப்பிலிருந்து கழிக்கப்படாது.
 7.இரண்டு நாட்களுக்கு மேல் அவசர விடுப்பு எடுக்கும் பட்சத்தில் அவர் விடுப்பு  எடுத்த நாட்கள் அவருடைய Paid leaveலிருந்து கழிக்கப்படும். Paid Leave இல்லாத பட்சத்தில் Unauthorised Absent ஆக கருதப்பட்டு அவருக்கு TRCA வழங்கப்படாது.
8.அரை நாள் அவசர கால விடுப்பு எடுக்க அனுமதி இல்லை.
9.PUT-OFF DUTY  உள்ள GDS ஊழியர்களுக்கு இந்த விடுப்பு வழங்கப்படாது.

10. அவசரகால  விடுப்பு அளிக்கும் அதிகாரிகள் அவசரகால விடுப்புகள் குறித்த தனிப்பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.
                             நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, January 2, 2019

 அன்பார்ந்த தோழர்களே !
                               தொழிலாளி உழைப்பதே ஊதியத்திற்காகத்தான் -ஆனால் CSI அமுலாக்கத்தினை தொடர்ந்து மாதாமாதம் ஊதியத்தை பெறுவதற்கு ஊழியர்கள் படும்பாடு சொல்லிமாளாது .மாத இறுதியின் கடைசிநாளில் அலுவலகத்திற்கு நுழைந்தவுடன் முதன்முதலாக சம்பளத்தை பெற்றுக்கொண்டுதான் மறுவேலை என்ற நிலைமாறி இன்று எப்பொழுது சம்பளம் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர் .இதன் அடிப்படைக்கோளாறு எங்கே என கண்டறிந்து நிர்வாகம் சீர்செய்யவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு .
                                            கோளாறு எங்கே ? 
பிரச்சனை TCS யிடமா ? Sify யிடமா ? என்பதியேயே நிர்வாகத்திற்கு தெளிவு இல்லை.
Sify ஒப்பந்தம் வரும் மார்ச் மாதம் காலாவதியாகிறது என்று தகவல். அப்படி இருப்பின் அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் வேறு ஒரு தகுதியான நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்வது நலம் பயக்கும்.இது குறித்து பல்வேறு கோட்ட செயலர்களின் பதிவுகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன 
சம்பளம் 2 மணி என்றார்கள் பிறகு 4 மணி என்கிறார்கள். “வரும் ஆனால் வராது” என்ற வடிவேலு பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.  தொழிலின் வளர்ச்சிக்கு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.தொழிலின் வீழ்ச்சிக்கு யாராவது தொழில் நுட்பத்தை பயன்படுத்துவார்களா? என கேள்வி கேட்டால் அதிகாரிகளுக்கு கோபம் வந்து விடுகிறது
வங்கிகளில் இருப்பது போல் ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே (20 -ம் தேதி) ஊழியர்களின் கணக்கில் செலுத்த வழி வகை செய்ய வேண்டும்.(தூத்துக்குடி )
-----------------------------------------------------------------------------------------------------------------
Division wise credits are being made now at Anna Road HPO one by one for more than 20000 officials. 
Pl wait. All will be credited within one hour.(மாநில சங்க பதிவு )
---------------------------------------------------------------------------------------------------------------------
GPF என்ற மூன்றேழுத்தில் தான் பலரது மூச்சிருக்கிறது என்பதை சொல்லியா தெரிய வேண்டும் தோழர்களே
  உரிய நேரத்தில் GPF கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் பல தோழர்களின் அன்றாட வாழக்கையே பிரச்சனைகுள்ளாகும்.  

1. Employee Portal திறப்பதே பிரச்சனை என்னும் போது அனைத்து நாட்களும் தபால்கார தோழர்களோ, MTS தோழர்களோ அன்றாடம் Employee Portalல் Login செய்யாமல் இருப்பதால் password expiry ஆகிவிடுகிறது.  
2. Password Reset செய்ய கோட்ட அலுவலகத்திலேயே பல நேரம் இணைய இணைப்பு கிடைக்காமல் பல அலுவலகங்கள் Password Reset Request pendingல் உள்ளது.
3. மின்னஞ்சல் அனுப்புங்கள் என்கிறார்கள், பல நேரங்களில் கோட்ட அலுவலக Inbox நிரம்பிவிடுவதால் மின்னஞ்சல் Bounceஆகி திரும்ப வந்துவிடுகிறது. 
4. பல நேரங்களில் அலுவலக மின்னஞ்சல் இணையதளம் (indiapost email) open ஆவதே கிடையாது.
மொத்தத்தில் நம் நிதியாதாரங்களிலேயே தொழில்நுட்பம் விளையாட ஆரம்பித்துவிட்ட்து.   நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நம் NFPE COCயை கூட்டி பலமான ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டும்.  
Employee portal, Sify bandwidth, Indiapost email சரிசெய்யப்படவில்லையென்றால் நிச்சயம் தமிழக அஞ்சல் வட்டம் அமைதியாக இருக்காது என்று ஒரு பலமான எச்சரிக்கையை நிர்வாகத்திற்கு கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்  (சென்னை வடகோட்டம் )
                இதுதான் மாநிலம் முழுவதும் உள்ள பிரச்சினை ..கோளாறுகள் எங்கே என கண்டறிந்து ஊழியர்களின் மண உளைச்சல்களை போக்க வேண்டுகிறோம் .
நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல் 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை