...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, January 2, 2019

 அன்பார்ந்த தோழர்களே !
                               தொழிலாளி உழைப்பதே ஊதியத்திற்காகத்தான் -ஆனால் CSI அமுலாக்கத்தினை தொடர்ந்து மாதாமாதம் ஊதியத்தை பெறுவதற்கு ஊழியர்கள் படும்பாடு சொல்லிமாளாது .மாத இறுதியின் கடைசிநாளில் அலுவலகத்திற்கு நுழைந்தவுடன் முதன்முதலாக சம்பளத்தை பெற்றுக்கொண்டுதான் மறுவேலை என்ற நிலைமாறி இன்று எப்பொழுது சம்பளம் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர் .இதன் அடிப்படைக்கோளாறு எங்கே என கண்டறிந்து நிர்வாகம் சீர்செய்யவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு .
                                            கோளாறு எங்கே ? 
பிரச்சனை TCS யிடமா ? Sify யிடமா ? என்பதியேயே நிர்வாகத்திற்கு தெளிவு இல்லை.
Sify ஒப்பந்தம் வரும் மார்ச் மாதம் காலாவதியாகிறது என்று தகவல். அப்படி இருப்பின் அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் வேறு ஒரு தகுதியான நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்வது நலம் பயக்கும்.இது குறித்து பல்வேறு கோட்ட செயலர்களின் பதிவுகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன 
சம்பளம் 2 மணி என்றார்கள் பிறகு 4 மணி என்கிறார்கள். “வரும் ஆனால் வராது” என்ற வடிவேலு பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.  தொழிலின் வளர்ச்சிக்கு தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.தொழிலின் வீழ்ச்சிக்கு யாராவது தொழில் நுட்பத்தை பயன்படுத்துவார்களா? என கேள்வி கேட்டால் அதிகாரிகளுக்கு கோபம் வந்து விடுகிறது
வங்கிகளில் இருப்பது போல் ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே (20 -ம் தேதி) ஊழியர்களின் கணக்கில் செலுத்த வழி வகை செய்ய வேண்டும்.(தூத்துக்குடி )
-----------------------------------------------------------------------------------------------------------------
Division wise credits are being made now at Anna Road HPO one by one for more than 20000 officials. 
Pl wait. All will be credited within one hour.(மாநில சங்க பதிவு )
---------------------------------------------------------------------------------------------------------------------
GPF என்ற மூன்றேழுத்தில் தான் பலரது மூச்சிருக்கிறது என்பதை சொல்லியா தெரிய வேண்டும் தோழர்களே
  உரிய நேரத்தில் GPF கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் பல தோழர்களின் அன்றாட வாழக்கையே பிரச்சனைகுள்ளாகும்.  

1. Employee Portal திறப்பதே பிரச்சனை என்னும் போது அனைத்து நாட்களும் தபால்கார தோழர்களோ, MTS தோழர்களோ அன்றாடம் Employee Portalல் Login செய்யாமல் இருப்பதால் password expiry ஆகிவிடுகிறது.  
2. Password Reset செய்ய கோட்ட அலுவலகத்திலேயே பல நேரம் இணைய இணைப்பு கிடைக்காமல் பல அலுவலகங்கள் Password Reset Request pendingல் உள்ளது.
3. மின்னஞ்சல் அனுப்புங்கள் என்கிறார்கள், பல நேரங்களில் கோட்ட அலுவலக Inbox நிரம்பிவிடுவதால் மின்னஞ்சல் Bounceஆகி திரும்ப வந்துவிடுகிறது. 
4. பல நேரங்களில் அலுவலக மின்னஞ்சல் இணையதளம் (indiapost email) open ஆவதே கிடையாது.
மொத்தத்தில் நம் நிதியாதாரங்களிலேயே தொழில்நுட்பம் விளையாட ஆரம்பித்துவிட்ட்து.   நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து நம் NFPE COCயை கூட்டி பலமான ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டும்.  
Employee portal, Sify bandwidth, Indiapost email சரிசெய்யப்படவில்லையென்றால் நிச்சயம் தமிழக அஞ்சல் வட்டம் அமைதியாக இருக்காது என்று ஒரு பலமான எச்சரிக்கையை நிர்வாகத்திற்கு கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்  (சென்னை வடகோட்டம் )
                இதுதான் மாநிலம் முழுவதும் உள்ள பிரச்சினை ..கோளாறுகள் எங்கே என கண்டறிந்து ஊழியர்களின் மண உளைச்சல்களை போக்க வேண்டுகிறோம் .
நோய்நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல் 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:

Post a Comment