அன்பார்ந்த தோழர்களே !
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒரேஒரு கோரிக்கையினை மட்டுமே வைத்து அனைத்து அமைப்புகளும் வேலைநிறுத்த அறிவிப்புகளை வெளியிடும் நாள் நெருங்கிவருகிறது .01.01.2004 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் இன்று 15 ஆண்டுகளை தாண்டி நிற்கிறது .ஆரம்பத்தில் இந்த கோரிக்கையினை வைத்தபோதும் அதற்கான இயக்கங்களை நடத்தியபோதும் அதன் முக்கியத்துவம் அவ்வளவாக தெரியவில்லை .ஆனால் இன்று NPS திட்டத்தில் இருந்து ஓய்வு பெருகிறவர்கள் வாங்குகிற பென்ஷன் ? தொகையினை கேட்கும் பொழுது இந்த படு ஆபத்தான திட்டத்தை நீக்கிட வேண்டும் என்ற எண்ணங்கள் ஒவ்வொரு தொழிலாளியின் உள்ளத்தில் எழ தொடங்கிவிட்டன .ஆரம்பத்தில் NPS குறித்து அலட்சியமாக நடந்துகொண்ட எல்லா அரசாங்கங்களும் இன்று பெருகிவரும் எதிர்ப்பை கணக்கில் கொண்டு ஒவ்வொரு அறிவிப்பை அறிவித்துக்கொண்டிருக்கிறது .
NPS ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு பழைய 1972 ஆண்டு ஓய்வூதிய சட்டப்படி குடும்பஒய்வூதியம் பிறகு கிராஜூடி லீவு சம்பளம் குரூப் இன்சூரன்ஸ் என்று எதோ நமக்கு இலவசமாக கொடுப்பதைப்போல் அரசு அவ்வப்ப்போது அறிவித்துவருகிறது .ஆனால் நமது கோரிக்கையான அடிப்டைசம்பளத்தில் 50 சதம் ஓய்வூதியமாக கிடைக்கவேண்டும் என்பதனை குறித்து வாய்திறக்க அரசு மறுக்கிறது .இன்று பலமாநிலங்களில் டெல்லி ஆந்திரா போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர சட்டமன்றங்கள் முற்போக்கு தீர்மானங்களை எடுத்துள்ளன .தமிழகத்தில் கூட ஜெயலலிதா அரசு NPS குறித்த மறு ஆய்வு குழுவை அமைத்தது .
எப்படி 1960 1965 களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் என்ற கோரிக்கை எழுந்தபோது எள்ளிநகையாடிய சர்க்கார் 10 ஆண்டுகளுக்கு பிறகு 1978 யில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கியது .இது ஒன்றும் தானாக கிடைக்கவில்லை .மத்திய அரசு ஊழியர்களின் தொடர் போராட்டம்
தொழிலாளி நலன் சார்ந்த அரசாங்கம் இவைகளினால் போனஸ் பெறமுடிந்தது என்றால் நிச்சயம் NPS திட்டத்தை நீக்கிவிட்டு மீண்டும் சமூகப்பாதுகாப்பின் அடிப்படையான பழைய பென்ஷன் தொடருவதற்கு நாம் தொடர்ந்து இயக்கங்களை நடத்துவோம் .நிச்சயம் NPS ஒருநாள் நீக்கப்படும் .அதற்கான போராட்டங்களில் நாம் முழுமையாக பங்கேற்போம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை

0 comments:
Post a Comment