...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, February 6, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                        RT 2021 - நோட்டிபிகேஷன் வெளியீடு 

இந்த ஆண்டிற்கான சுழல் மாறுதல் அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது .மொத்தம் 30 T/S ஊழியர்க்ளுக்கும் இரண்டு LSG ஊழியர்க்ளுக்கும் TENNURE முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

1.விருப்ப விண்ணப்பங்கள்  கோட்ட அலுவலகத்தில் சேரவேண்டிய கடைசிநாள் 16.02.2021

2.EXTENSION வேண்டுவோர் விண்ணப்பங்களை கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பவேண்டிய கடைசி நாள் 11.02.2021

3.அறிவிப்புகளில் விடுதல் /சேர்த்தல் இருந்தால் விண்ணப்பிக்கவேண்டிய கடைசிநாள் 09.02.2021

4.வெளியிடங்களுக்கு  சென்ற LSG ஊழியர்கள் TENNURE முடிக்கவில்லை என்றாலும்  தங்களது விருப்பமனுக்களை அனுப்பலாம் .அனுப்பும் முன்பு கோட்ட சங்கத்திடம் ஆலோசனைகளை கேட்டால் VACANCY குறித்து முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம் 

            முன்னதாக LSG VACANCY யில் செப்டம்பர் 2021 வரை எழுகின்ற காலியிடங்களையும் சேர்த்து அறிவிக்கபடாமல் இருந்ததை நமது ஊழியர்களின் ஆதங்கங்களுக்கு இடையே நாம் நமது ASP(HOS) அவர்களை தொடர்புகொண்டு செப்டம்பர் 2021 வரை எழுகின்ற LSG மற்றும் TS இடங்களை சேர்த்து அறிவிக்கவேண்டும் என்று கோரினோம் . நமது கோரிக்கையை ஏற்று சுமார் 1மணி நேரத்தில் நோட்டிபிகேசன்  மாற்றி அனுப்பிய கோட்ட நிர்வாகத்திற்கு NELLAI -NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் கடந்த RT யில் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குறைகளை குறிப்பாக தோழர் நியூட்டன் அவர்களின் இடமாறுதல்களை நம்முடைய தொடர் வற்புறுத்தலுக்கிணங்க நிறைவேற்றி கொடுத்ததையும் தோழர் மகாராஜன் (விருதுநகர் ) அவர்களின் கோரிக்கையையும் பரிசீலித்த கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்க்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 



Tuesday, February 2, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                     நமது மாநில சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட காலண்டர் நேற்று கிடைத்தது .நேற்று மாலை ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் மூலம் முதற்கட்டமாக திருநெல்வேலி HO டவுண் TVLRS மஹாராஜாநகர் பெருமாள்புரம் வீரராகவபுரம் காந்திநகர் திலி தெற்கு முன்னிர் பள்ளம் சங்கர்நகர் சுத்தமல்லி பேட்டை IC பேட்டை யூனிவர்சிட்டி தச்சநல்லூர் மானுர் உக்கிரன்கோட்டை கங்கைகொண்டான்பர்கிட் மாநகரம்  ஆகிய அலுவலகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது ..மீதமுள்ள அலுவலகஙக்ளுக்கு இன்று அனுப்பிவைக்கப்படும் .மாநில சங்கத்தால் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் நாம் நமது கோட்ட சங்கத்தின் சார்பாக இலவசமாக கொடுக்கிறோம் .யாரும் பணம் அனுப்பவேண்டாம் .நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, February 1, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                    பஞ்சப்படி முடக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

நாள் --01.02.2021      மாலை 6 மணி 

இடம் --பாளையங் கோட்டை  தலைமை அஞ்சலகம் முன்பு 

தலைமை --தோழர்கள் T .அழகுமுத்து கோட்டத்தலைவர் P 3 

                                          A .சீனிவாச சொக்கலிங்கம் கோட்டத்தலைவர் P 4

அன்பார்ந்த தோழர்களே!!

தொடர்ந்து மூன்று பஞ்சபடிகளை முடக்கி வைத்திருக்கும் மத்திய அரசு --வருகிற ஜூலையில் கூட முடக்கப்பட்ட பஞ்சபடியை கொடுக்குமா என்ற உறுதியற்ற நிலை இந்தநிலையில்  முக்கிய கோரிக்கைகளான , 2016இல் மத்திய அமைச்சர்கள் கொடுத்த ஏழாவது ஊதிய குழு சம்பந்தமான உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும், ஊழியர்களை கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பும் சட்டங்களை(56J) ரத்து செய்ய வேண்டும் , தொழிலாளர் நல சட்டங்களில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. ஜனவரி மூன்றாவது வாரத்தில் மத்திய அமைச்சரவை செயலரை சந்தித்த NJCM கன்வீனர் தோழர் சிவகோபால் மிஸ்ரா அவர்களிடம் மீண்டும் நிதி நிலையை காரணம் காட்டி கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்து வருகிறது.

எனவே மத்திய அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசினை ஊழியர் விரோத போக்கினை கண்டித்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினமான 01.02.2021  அன்று நாடு முழுவதும் எதிர்ப்பு தினமாக  அறிவித்து  ஆர்ப்பாட்டம் நடத்தவும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது. இந்த அறைகூவலை ஏற்று நமது கோட்டத்தில் இன்று (01.02.2021) நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் 

                                           ஆர்ப்பாட்ட வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை