அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
பஞ்சப்படி முடக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாள் --01.02.2021 மாலை 6 மணி
இடம் --பாளையங் கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு
தலைமை --தோழர்கள் T .அழகுமுத்து கோட்டத்தலைவர் P 3
A .சீனிவாச சொக்கலிங்கம் கோட்டத்தலைவர் P 4
அன்பார்ந்த தோழர்களே!!
தொடர்ந்து மூன்று பஞ்சபடிகளை முடக்கி வைத்திருக்கும் மத்திய அரசு --வருகிற ஜூலையில் கூட முடக்கப்பட்ட பஞ்சபடியை கொடுக்குமா என்ற உறுதியற்ற நிலை இந்தநிலையில் முக்கிய கோரிக்கைகளான , 2016இல் மத்திய அமைச்சர்கள் கொடுத்த ஏழாவது ஊதிய குழு சம்பந்தமான உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும், ஊழியர்களை கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பும் சட்டங்களை(56J) ரத்து செய்ய வேண்டும் , தொழிலாளர் நல சட்டங்களில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. ஜனவரி மூன்றாவது வாரத்தில் மத்திய அமைச்சரவை செயலரை சந்தித்த NJCM கன்வீனர் தோழர் சிவகோபால் மிஸ்ரா அவர்களிடம் மீண்டும் நிதி நிலையை காரணம் காட்டி கோரிக்கைகளை ஏற்க அரசு மறுத்து வருகிறது.
எனவே மத்திய அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசினை ஊழியர் விரோத போக்கினை கண்டித்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினமான 01.02.2021 அன்று நாடு முழுவதும் எதிர்ப்பு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறைகூவல் விடுத்துள்ளது. இந்த அறைகூவலை ஏற்று நமது கோட்டத்தில் இன்று (01.02.2021) நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்
ஆர்ப்பாட்ட வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment