அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
RT 2021 - நோட்டிபிகேஷன் வெளியீடு
இந்த ஆண்டிற்கான சுழல் மாறுதல் அறிவிப்புகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது .மொத்தம் 30 T/S ஊழியர்க்ளுக்கும் இரண்டு LSG ஊழியர்க்ளுக்கும் TENNURE முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
1.விருப்ப விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்தில் சேரவேண்டிய கடைசிநாள் 16.02.2021
2.EXTENSION வேண்டுவோர் விண்ணப்பங்களை கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பவேண்டிய கடைசி நாள் 11.02.2021
3.அறிவிப்புகளில் விடுதல் /சேர்த்தல் இருந்தால் விண்ணப்பிக்கவேண்டிய கடைசிநாள் 09.02.2021
4.வெளியிடங்களுக்கு சென்ற LSG ஊழியர்கள் TENNURE முடிக்கவில்லை என்றாலும் தங்களது விருப்பமனுக்களை அனுப்பலாம் .அனுப்பும் முன்பு கோட்ட சங்கத்திடம் ஆலோசனைகளை கேட்டால் VACANCY குறித்து முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்
முன்னதாக LSG VACANCY யில் செப்டம்பர் 2021 வரை எழுகின்ற காலியிடங்களையும் சேர்த்து அறிவிக்கபடாமல் இருந்ததை நமது ஊழியர்களின் ஆதங்கங்களுக்கு இடையே நாம் நமது ASP(HOS) அவர்களை தொடர்புகொண்டு செப்டம்பர் 2021 வரை எழுகின்ற LSG மற்றும் TS இடங்களை சேர்த்து அறிவிக்கவேண்டும் என்று கோரினோம் . நமது கோரிக்கையை ஏற்று சுமார் 1மணி நேரத்தில் நோட்டிபிகேசன் மாற்றி அனுப்பிய கோட்ட நிர்வாகத்திற்கு NELLAI -NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் கடந்த RT யில் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குறைகளை குறிப்பாக தோழர் நியூட்டன் அவர்களின் இடமாறுதல்களை நம்முடைய தொடர் வற்புறுத்தலுக்கிணங்க நிறைவேற்றி கொடுத்ததையும் தோழர் மகாராஜன் (விருதுநகர் ) அவர்களின் கோரிக்கையையும் பரிசீலித்த கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்க்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment