...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 13, 2017

                                    தென் மண்டல செய்திகள் 
கடந்த BI MONTHLY மீட்டிங் க்கு பிறகு நமது இயக்குனர் அவர்களை சந்திக்க மாநிலசெயலர் அவர்கள் நமக்கு சொல்லியிருந்தார்கள் .ஆனால் பாராளுமன்ற குழு வந்து சென்றபின் சந்தித்தால் சிறப்பாக இருக்கும் என்ற அ டிப்படையில் நாம் காத்திருந்தோம் .இந்த பின்னணியில் பாராளுமன்ற குழு தனது ஆய்வை நேற்றோடு முடித்துக்கொண்டதை நமது மாநிலசெயலர் அவர்களுக்கு தெரிவித்துள்ளோம் .மண்டல நிர்வாகத்தில் முன் அனுமதிபெற்று -அனுமதி கிடைத்தவுடன் நாளை அல்லது நாளை மறுநாள் மதுரை RO செல்வோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 

                                                          போனஸ் 
தசரா பண்டிகைகளை கொண்டாட நாடு இப்பொழுதே தயாராகிக்கொண்டிருக்கிறது .தசரா என்றவுடன் நமக்கு நினைவில் வருவது போனஸ் .ஒரு காலத்தில் மிக பெரிய விவாதப்பொருளாக இருந்த ஒன்றுதான் இந்த ஆண்டு எத்தனை நாள் போனஸ் கிடைக்கும் ? சீலிங் மாற்றப்படுமா ? போனஸ் கணக்கீடும் பார்முலா மாற்றப்படுமா என்பதுதான் .ஆனால் சமீப ஆண்டுகளாக போனஸ் உத்தரவு வந்த பிறகுதான் மேல் மட்ட தலைவர்களுக்கு கூட தெரிய வருகிறது .
  1979 ஜனதா அரசாங்கம் இரண்டாக பிளவுற்று திரு .சரண்சிங் பிரதம மந்திரியாகவும் -திரு பகுகுணா நிதியமைச்சராகவும் இருந்த காலத்தில் தான் போனஸ் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது .9.11.1979 அன்று அன்றைய நிதியமைச்சர் அவர்களுடன் NFPTE சம்மேளனம் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி இரண்டுகட்ட பதவியுயர்வு -போனஸ் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்க வைத்தது .இருப்பினும் 13.11.1979 அன்று ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் போனஸ் அறிவிப்பு வந்து -அன்றைய P&T ஊழியர்களை விட்டுவிட்டது .இந்த பாரபட்சத்தை எதிர்த்து தலமட்டத்தில் ஊழியர்கள் தானாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர் .அதன் விளைவாக 16.11.1979 அன்று நடந்த JCM கூட்டத்தில் P&T ஊழியர்களுக்கும் PLB வழங்க ஒத்துக்கொள்ளப்பட்டது .இதற்கிடையில் சரண்சிங் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்ததால் -காபந்து சர்க்காரால்  போனஸ் அறிவிப்பை உத்தரவாக அமுல்படுத்தமுடியவில்லை .அதன் பின் நடந்த தேர்தலில் திருமதி .இந்திராகாந்தி அம்மையார் வெற்றிபெற்று பிரதமராகவும் CM .ஸ்டிபன் நமக்கு அமைச்சராகவும் பொறுப்பேற்ற பின்னர் அஞ்சல் வாரியத்துடன் 14.03.1980 அன்று சஞ்சார பவனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நமக்கும் போனஸ் உண்டு என்ற வரலாற்று சிறப்புமிக்க உடன்பாடு கையெழுத்தானது .அன்று வந்த அதே பார்முலா அதிகபட்ச போனசாக 8.33 சதம் வழங்கப்படுகிறது .இருந்தாலும் டெலிகாம் ஊழியர்களுக்கும் -தபால் ஊழியர்களுக்கும் போனஸ் பெறும் நாட்கள் 74 மற்றும் 44 நாட்கள் என்ற பாரபட்சம் தொடர்ந்தது .
        போனஸ் குறித்து ஒரு  மூத்த தோழர் சொன்ன செய்தி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது .அந்த காலங்களில் தசரா நாட்கள் நெருங்க நெருங்க நாங்கள் வானொலி பெ ட்டி அருகில் இருந்து கொண்டு காலை  மற்றும் மாலை ஆகாசவாணி செய்திகளை கேட்டுத்தான் தெரிந்துகொள்வோம் .முதலாவதாக ரயில்வே ஊழியர்களுக்குத்தான் போனஸ் அறிவிப்பு வரும் .அதனை தொடர்ந்து ஓரிரு நாட்கள் கழித்துதான் நமக்கு போனஸ் அறிவிக்கப்படும் .நாங்கள் குடும்பமாக வானொலி பெட்டிக்கு அருகில் இருந்து செய்திகளை கேட்க இருப்பதுண்டு .நமக்கு இத்தனைநாள் போனஸ் என்றவுடன் உற்சாக மிகுதியால் கைதட்டி மகிழ்ந்திருக்கிறேன் . அதன் பிறகு அகிலஇந்திய தலைமைக்கு டெலிபோன் EXCHANGE தோழர்கள் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து கொண்டு இருந்தார்கள் .பிறகு STD வசதிகள் வந்தபிறகு நிர்வாகிகள் தொலைபேசியில்நேரிடையாகவே  பேசி அந்த 
தகவல்களை நமது சங்க நோட்டீஸ் போர்டில்  எழுதி வைப்பார்கள் .அதை ஆர்வமோடு உறுப்பினர்கள்  பார்ப்பார்கள் .ஒவ்வொரு கிளை செயலர்களும் அதை ஒரு பெரிய சாதனையாகவே எழுதி வைப்பார்கள் .இந்த பின்னணியில் தான் இன்றும் நாம் அதே பார்முலா --அதே 60 நாள் என போனஸ் பெற்று வருகிறோம் .
போனஸ் சலுகை அல்ல --போனஸ் பிச்சையும் அல்ல --போனஸ் கொடுபடாத ஊதியம் -என்ற மாபெரும் தலைவர்களின் உணர்ச்சி உரை இன்னும் என் காதுகளில் ரீ ங்காரமிடுகிறது .ஆம் போனஸ்  உச்சவர ம்பின்றி பெற்றுக்கொள்ளும் காலம் வருமா ? 
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, September 9, 2017

                                                    முக்கிய செய்திகள் 
                             சீருடை அலவன்ஸ் 5000
தபால்காரர் மற்றும் MTS ஊழியர்களுக்கான டிரஸ்  அலவன்ஸ் ரூபாய் 5000 நேற்று திருநெல்வேலி HO வில் பட்டுவாடா ஆனது .இன்று மற்றவர்களுக்கு   கிடைக்கும் .விரைந்து செயல்பட்ட திருநெல்வலி கணக்கு பிரிவு ஊழியர்களுக்கு நெல்லை NFPE நன்றிதனை தெரிவித்துக்கொள்கிறது .
                மாநில மாநாடு -வரவேற்பு குழு அமைக்கும் கூட்டம் 
நமது மாநில மாநாடு எதிர்வரும் நவம்பர் 25 முதல் 27 வரை செங்கல்பட்டில் நடைபெறுவதை தாங்கள் அறிவீர்கள் .மாநில மாநாட்டிற்க்கான வரவேற்புக்குழு அமைக்கும் கூட்டம் 10.09.2017 அன்று செங்கல்பட்டு HO வில் நடைபெறுகிறது .
                                  திருமண வரவேற்புவிழா 
நமது கண்காணிப்பாளர் திரு .VP சந்திரசேகர் அவர்களின் இல்ல திருமண வரவேற்புவிழா 10.09.2017 ஞாயிறு அன்று வேலூரில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து வேன் வசதி செய்யப்பட்டுள்ளது .பெயர் கொடுத்தவர்கள் இன்று 09.09.2017 இரவு  8 மணிக்கு சரியாக திருநெல்வேலி HO விற்கு வரும்படி கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .
                         தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை