...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 13, 2017

                                                          போனஸ் 
தசரா பண்டிகைகளை கொண்டாட நாடு இப்பொழுதே தயாராகிக்கொண்டிருக்கிறது .தசரா என்றவுடன் நமக்கு நினைவில் வருவது போனஸ் .ஒரு காலத்தில் மிக பெரிய விவாதப்பொருளாக இருந்த ஒன்றுதான் இந்த ஆண்டு எத்தனை நாள் போனஸ் கிடைக்கும் ? சீலிங் மாற்றப்படுமா ? போனஸ் கணக்கீடும் பார்முலா மாற்றப்படுமா என்பதுதான் .ஆனால் சமீப ஆண்டுகளாக போனஸ் உத்தரவு வந்த பிறகுதான் மேல் மட்ட தலைவர்களுக்கு கூட தெரிய வருகிறது .
  1979 ஜனதா அரசாங்கம் இரண்டாக பிளவுற்று திரு .சரண்சிங் பிரதம மந்திரியாகவும் -திரு பகுகுணா நிதியமைச்சராகவும் இருந்த காலத்தில் தான் போனஸ் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது .9.11.1979 அன்று அன்றைய நிதியமைச்சர் அவர்களுடன் NFPTE சம்மேளனம் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி இரண்டுகட்ட பதவியுயர்வு -போனஸ் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்க வைத்தது .இருப்பினும் 13.11.1979 அன்று ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் போனஸ் அறிவிப்பு வந்து -அன்றைய P&T ஊழியர்களை விட்டுவிட்டது .இந்த பாரபட்சத்தை எதிர்த்து தலமட்டத்தில் ஊழியர்கள் தானாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர் .அதன் விளைவாக 16.11.1979 அன்று நடந்த JCM கூட்டத்தில் P&T ஊழியர்களுக்கும் PLB வழங்க ஒத்துக்கொள்ளப்பட்டது .இதற்கிடையில் சரண்சிங் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்ததால் -காபந்து சர்க்காரால்  போனஸ் அறிவிப்பை உத்தரவாக அமுல்படுத்தமுடியவில்லை .அதன் பின் நடந்த தேர்தலில் திருமதி .இந்திராகாந்தி அம்மையார் வெற்றிபெற்று பிரதமராகவும் CM .ஸ்டிபன் நமக்கு அமைச்சராகவும் பொறுப்பேற்ற பின்னர் அஞ்சல் வாரியத்துடன் 14.03.1980 அன்று சஞ்சார பவனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் நமக்கும் போனஸ் உண்டு என்ற வரலாற்று சிறப்புமிக்க உடன்பாடு கையெழுத்தானது .அன்று வந்த அதே பார்முலா அதிகபட்ச போனசாக 8.33 சதம் வழங்கப்படுகிறது .இருந்தாலும் டெலிகாம் ஊழியர்களுக்கும் -தபால் ஊழியர்களுக்கும் போனஸ் பெறும் நாட்கள் 74 மற்றும் 44 நாட்கள் என்ற பாரபட்சம் தொடர்ந்தது .
        போனஸ் குறித்து ஒரு  மூத்த தோழர் சொன்ன செய்தி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது .அந்த காலங்களில் தசரா நாட்கள் நெருங்க நெருங்க நாங்கள் வானொலி பெ ட்டி அருகில் இருந்து கொண்டு காலை  மற்றும் மாலை ஆகாசவாணி செய்திகளை கேட்டுத்தான் தெரிந்துகொள்வோம் .முதலாவதாக ரயில்வே ஊழியர்களுக்குத்தான் போனஸ் அறிவிப்பு வரும் .அதனை தொடர்ந்து ஓரிரு நாட்கள் கழித்துதான் நமக்கு போனஸ் அறிவிக்கப்படும் .நாங்கள் குடும்பமாக வானொலி பெட்டிக்கு அருகில் இருந்து செய்திகளை கேட்க இருப்பதுண்டு .நமக்கு இத்தனைநாள் போனஸ் என்றவுடன் உற்சாக மிகுதியால் கைதட்டி மகிழ்ந்திருக்கிறேன் . அதன் பிறகு அகிலஇந்திய தலைமைக்கு டெலிபோன் EXCHANGE தோழர்கள் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து கொண்டு இருந்தார்கள் .பிறகு STD வசதிகள் வந்தபிறகு நிர்வாகிகள் தொலைபேசியில்நேரிடையாகவே  பேசி அந்த 
தகவல்களை நமது சங்க நோட்டீஸ் போர்டில்  எழுதி வைப்பார்கள் .அதை ஆர்வமோடு உறுப்பினர்கள்  பார்ப்பார்கள் .ஒவ்வொரு கிளை செயலர்களும் அதை ஒரு பெரிய சாதனையாகவே எழுதி வைப்பார்கள் .இந்த பின்னணியில் தான் இன்றும் நாம் அதே பார்முலா --அதே 60 நாள் என போனஸ் பெற்று வருகிறோம் .
போனஸ் சலுகை அல்ல --போனஸ் பிச்சையும் அல்ல --போனஸ் கொடுபடாத ஊதியம் -என்ற மாபெரும் தலைவர்களின் உணர்ச்சி உரை இன்னும் என் காதுகளில் ரீ ங்காரமிடுகிறது .ஆம் போனஸ்  உச்சவர ம்பின்றி பெற்றுக்கொள்ளும் காலம் வருமா ? 
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment