...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, January 12, 2019

                                           முக்கிய செய்திகள் 
                                        மாநில கவுன்சில் கூட்டம் 
நமது மாநில செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் வருகிற 31.01.2019 அன்று பணி ஓய்வு பெறுவதை ஒட்டி புதிய மாநிலசெயலரை தேர்ந்தெடுப்பதற்காக மாநில கவுன்சில் கூட்டம் 03.02.2019 ஞாயிறு அன்று சென்னை World University Service Centre,  Mayor Ramanathan Salai,Near Presidency Girls Higher Secondary School, Chet pet, Chennai600031.நடைபெறுகிறது .நமது கோட்டத்தின் சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் மற்றும் சங்கர் கவுன்சில் உறுப்பினர்களாக கலந்துகொள்கின்றனர் .அதனை தொடர்ந்து அன்று மாலையே மாநிலசெயலருக்கு பணிஓய்வு பாராட்டு விழா நடைபெறுகிறது 
                                அஞ்சல் மூன்றின் முன்னாள் உதவி பொதுச்செயலர் தோழர் பன்னீர் செல்வம் பணி நிறைவு விழா 
             அண்ணாசாலை முன்னாள் செயலரும் முன்னாள் அகிலஇந்திய உதவி பொதுச்செயலருமான தோழர் பன்னீர் செல்வம் அவர்களின் பணிநிறைவு விழா 02.02.2019 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூர் நக்கீரன் அரங்கில் நடைபெறுகிறது .
31.01.2019 அன்று பணிஓய்வு பெறும் முன்னணி தலைவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
                                                   மாதாந்திர பேட்டி 
இந்த மாதத்திற்கான மாதாந்திர பேட்டி வருகிற 17.01.2019 அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் மகிளா கமிட்டி உறுப்பினர் திருமதி ஹைருனிசா பேகம் அம்பை சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொள்கின்றனர் .
                                      OAP -அறிமுகமும் -ஆபத்தும் 
OAP மணியார்டர் இனி 80 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு மீண்டும் அஞ்சல் துறைமூலம் வழங்க கடந்த 31.12.2018 அன்று தமிழகஅரசு முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது .அதன்படி நமது CPMG அலுவலகமும் 01.07.2019 அன்று வழிகாட்டுதல் உத்தரவை பிறப்பித்துள்ளது .OAP வழங்கும்பொழுது ஏதாவது புகார் வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு REMOVAL என்கிற அளவிற்கு தண்டனை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது .ஆகவே நமது தோழர்கள் மிக கவனமாக செயல்படும்படி அறிவுறுத்த படுகிறார்கள் .
 நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, January 11, 2019


                          அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
      LSG பதவியுயர்வு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது .தமிழகத்தில் 1282 பேருக்கும் நமது கோட்டத்தில் சுமார் 63 பேருக்கும் LSG பதவி உயர்வு பெறுகின்றனர் .நமது கோட்டத்தில் 5 தோழர்களுக்கு ஏற்கனவே DECLINE செய்த தோழர்களும் இதில் இடம்பெறுகிறார்கள் .மேலும் ஏற்கனவே தன் விருப்ப ஓய்வில் சென்றவர்களும் இந்த மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெருகிறவர்களும் இருக்கிறார்கள் .ACCOUNTANT களுக்கு தனி LSG பட்டியல் 09.11.1992 முதல் 15.10.1997 வரை உள்ளவர்கள் இடம் பெறுகிறார்கள்   .பல கோட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பதவிகள் சென்னை பெருநகருக்கு மாற்றப்பட்டுள்ளன .நமது தென் மண்டலத்தில் இருந்து எத்தனை பதவிகள் கட த்தப்பட்டுள்ளன என்ற விவரங்கள் கிடைக்கவில்லை .அதுபோல ஏற்கனவே ஒத்துக்கொண்ட அடிப்படையில் தொலைதூர அலுவலகங்களுக்கு பதிலாக நகர் பகுதிகளில் உள்ள அதிக வேலைப்பளுவுள்ள அலுவலகங்களுக்கு கூடுதலாக LSG பதவிகளை மறு அடையாளம் காட்டவேண்டும் என்பதும்  வருங்காலத்தில் கணக்கில் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும் .
1.மண்டல ஒதுக்கீடு வரை ஒரே உத்தரவில் எல்லாம் வந்துவிட்டது .இனி மண்டல நிர்வாகம் இவர்களுக்கு இடமாறுதல் உத்தரவை பிறப்பிக்கும் .கடந்த முறை போலவே ஊழியர்களிடம் விருப்பமனுக்கள் பெற்று இடமாறுதல் வழங்கப்படும் .இதற்கிடையே கோட்ட அலுவலகமும் LSG பதவிகள் எவையெல்லாம் காலியாக இருக்கிறதோ அதை முதலில் ஊழியர்களுக்கு தெரிவிக்கவேண்டும் .இரண்டாவதாக ஏற்கனவே LSG TREASURER  பதவிகள் அனைத்தும் TS பதவிகள் ஆனாதல் ஏற்கனவே LSG TREASURER களுக்கு புதிதாக IDENTIFY செய்யப்பட்ட அதே அலுவலகங்களுக்கு LSG PA ஆக இடமாறுதல் கொடுக்கவேண்டும் .
2.இடமாறுதல் கிடைத்தபிறகு கூட பதவி உயர்வை மறுக்கலாம் .
3.பதவி உயர்வு பெறுகின்ற எந்த ஊழியர்களுக்கும் எந்த FIXATION கிடையாது(2800 GP பெருகிறவர்கள் ) என்பது தான் கூடுதல் தகவல் .
              மற்றவை கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடன் சிறப்பு சந்திப்பு முடிந்த பின் தெரிவிக்கப்படும் .
                       பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் NELLAI NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
 SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
                                           

           

Thursday, January 10, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
       இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் .
                                       நெருங்குகிறது கேடர் சீரமைப்பு -2 
நேற்று நடைபெற்ற CPMG அவர்களுடனான கூட்டத்தில் கிடைத்த தகவல்கள் .தமிழகத்தில் புதிதாக 693 LSG பதவிகள் 72 அக்கௌன்டன்ட் பதவிகள் LSG ஆகின்றன .
அதன்படி நெல்லை கோட்டத்தில் புதிதாக20 LSG பதவிகளுக்கும் 2 LSG அக்கௌன்டன்ட் பதவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன .LSG TR என்பது TS TREASURER ஆக மாற்றப்பட்டுள்ளது .அதன்படி புதிய LSG பதவிகளில் அந்தந்த அலுவலக காசாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் அதற்கான உத்தரவுகள் நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளன
                  காசாளர் பதவிகள் LSG PA பதவிகளாக மாறுபவைகள் --20
திருநெல்வேலி -அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி -கடையம் -கல்லிடைக்குறிச்சி -VK புரம் -வீரவநல்லூர் -ஏர்வாடி -களக்காடு -நான்குனேரி -திசையன்விளை -வள்ளியூர் -மஹாராஜநகர் -மேலப்பாளையம் -பெருமாள்புரம் -கலெக்ட்ரேட் -பேட்டை -டவுண் -வண்ணாரப்பேட்டை -சங்கர்நகர் .அக்கௌன்டன்ட் பதவியை பொறுத்தவரை நெல்லை கோட்ட அலுவலகம் மற்றும் பாளையம்கோட்டை HO தலா ஒரு LSG பதவிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன .
மேலும் P.A.  Final seniority list மற்றும் கடந்த ஆண்டு LSG decline செய்த ஊழியர்களுக்கும்  முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வுப் பட்டியல் வெளி வர உள்ளது.இதனை ஒட்டி Rule 38 இடமாற்றங்களும் வழங்கிட உறுதியளிக்கப்பட்டது.  
                               இந்த மாத மாதாந்திர பேட்டி 17.01.2019 அன்று நடைபெறுகிறது .பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால் இன்று மதியத்திற்குள் தெரியப்படுத்தவும் .
நன்றி .அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை