அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
LSG பதவியுயர்வு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது .தமிழகத்தில் 1282 பேருக்கும் நமது கோட்டத்தில் சுமார் 63 பேருக்கும் LSG பதவி உயர்வு பெறுகின்றனர் .நமது கோட்டத்தில் 5 தோழர்களுக்கு ஏற்கனவே DECLINE செய்த தோழர்களும் இதில் இடம்பெறுகிறார்கள் .மேலும் ஏற்கனவே தன் விருப்ப ஓய்வில் சென்றவர்களும் இந்த மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெருகிறவர்களும் இருக்கிறார்கள் .ACCOUNTANT களுக்கு தனி LSG பட்டியல் 09.11.1992 முதல் 15.10.1997 வரை உள்ளவர்கள் இடம் பெறுகிறார்கள் .பல கோட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பதவிகள் சென்னை பெருநகருக்கு மாற்றப்பட்டுள்ளன .நமது தென் மண்டலத்தில் இருந்து எத்தனை பதவிகள் கட த்தப்பட்டுள்ளன என்ற விவரங்கள் கிடைக்கவில்லை .அதுபோல ஏற்கனவே ஒத்துக்கொண்ட அடிப்படையில் தொலைதூர அலுவலகங்களுக்கு பதிலாக நகர் பகுதிகளில் உள்ள அதிக வேலைப்பளுவுள்ள அலுவலகங்களுக்கு கூடுதலாக LSG பதவிகளை மறு அடையாளம் காட்டவேண்டும் என்பதும் வருங்காலத்தில் கணக்கில் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும் .
1.மண்டல ஒதுக்கீடு வரை ஒரே உத்தரவில் எல்லாம் வந்துவிட்டது .இனி மண்டல நிர்வாகம் இவர்களுக்கு இடமாறுதல் உத்தரவை பிறப்பிக்கும் .கடந்த முறை போலவே ஊழியர்களிடம் விருப்பமனுக்கள் பெற்று இடமாறுதல் வழங்கப்படும் .இதற்கிடையே கோட்ட அலுவலகமும் LSG பதவிகள் எவையெல்லாம் காலியாக இருக்கிறதோ அதை முதலில் ஊழியர்களுக்கு தெரிவிக்கவேண்டும் .இரண்டாவதாக ஏற்கனவே LSG TREASURER பதவிகள் அனைத்தும் TS பதவிகள் ஆனாதல் ஏற்கனவே LSG TREASURER களுக்கு புதிதாக IDENTIFY செய்யப்பட்ட அதே அலுவலகங்களுக்கு LSG PA ஆக இடமாறுதல் கொடுக்கவேண்டும் .
2.இடமாறுதல் கிடைத்தபிறகு கூட பதவி உயர்வை மறுக்கலாம் .
3.பதவி உயர்வு பெறுகின்ற எந்த ஊழியர்களுக்கும் எந்த FIXATION கிடையாது(2800 GP பெருகிறவர்கள் ) என்பது தான் கூடுதல் தகவல் .
மற்றவை கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடன் சிறப்பு சந்திப்பு முடிந்த பின் தெரிவிக்கப்படும் .
பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் NELLAI NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்
0 comments:
Post a Comment