...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 28, 2019

                                                  முக்கிய செய்திகள் 
*பார்சல் நெட்ஒர்க்யின் (FNOP ) அடுத்த கட்டமாக எக்ஸ்பிரஸ் பார்சல் சேவை 18.11.2019 முதல் நிறுத்தப்படுகிறது .
* GDS TO PA மற்றும் POSTMAN TO PA  தேர்ச்சிக்கான கணினி தேர்வை ரத்து செய்திடவேண்டும் என நமது மத்திய சங்கம் 27.09.2019 அன்று அஞ்சல் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது .சென்ற முறை கணினி தேர்வை அஞ்சல் வாரியம் ரத்துசெய்திருந்தது 
*கடந்த 07.20.2019 அன்று நடைபெற்ற NJCM நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினையான NPS ஊழியர்களுக்கு GPF வசதியை வழங்கிடவேண்டும் என்று மீண்டும் JCM ஊழியர்தரப்பு சார்பாக 26.09.2019 அன்று வலியுறுத்தல் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .
* அதேபோல் கருணைஅடிப்படையிலான வேலை வழங்குவதிலும் உள்ள 5 சதம் என்பதை 10 சதமாக உயர்த்திடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது .
                                               திருநெல்வேலியில் மீண்டும் கடற்கரை 
 நமது அன்பிற்குரிய தோழர் திரு .கடற்கரையாண்டி அவர்கள் போஸ்ட்மாஸ்டர் கோவில்பட்டி நேற்று கோவில்பட்டியில் இருந்து RELIEVE ஆகிவிட்டார்கள் அவர்கள் வருகிற 01.10.2019 அன்று திருநெல்வேலி HO வில் JOIN பண்ணுகிறார்கள் .அவர்களை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது 
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, September 27, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 
   நமது கோட்ட கண்காணிப்பாளர்களுடனான மாதாந்திரபேட்டி 10.10.2019 அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டியில் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் /கருத்துக்கள் /ஆலோசனைகள் இருந்தால் 30.09.2019 குள் கோட்ட செயலர்களுக்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
   * மாவடி SO விற்கு டெபுடேஷன் செல்ல விருப்பமுள்ள தோழர்கள் இருந்தால் தெரிவிக்கவும் .
   * சூப்பர்வைசர் அஸோஸியேஷன் அதாவது இன்றைய போஸ்ட்மாஸ்டர் கிரேடு சங்கத்திற்கான அங்கீகாரம் அஞ்சல் வாரியத்தால் 23.09.2019 அன்று ரத்துசெய்யப்பட்டுவிட்டது .ஆகவே பழைய தோழர்கள் மீண்டும் நம்மோடு இனைந்து பணியாற்ற அழைக்கிறோம் .
*மத்திய அரசு ஊழியர் எழு ஆண்டுகளுக்கு மேல் அரசு ஊழியராக பணிபுரிந்து அவர் பணியில் இருக்கும் பொழுது இறந்தால்  முதல் பத்து ஆண்டுகளுக்கு  கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணி முடித்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 9000+DA+FMA   வழங்கப்பட்டு வந்தது.   தற்போது மத்திய அரசு இதில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்து பணியில் இருக்கும் பொழுது இறந்து இருந்தால் அந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கும் குடும்ப ஓய்வூதியமாக முதல் 10 ஆண்டு காலத்துக்கு 50% வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.        இந்த உத்தரவு 01.10.2019 முதல் அமலுக்கு வருகிறது.  இதற்கு முன் ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணி முடித்த பணியில் இருக்கும் பொழுது இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு குறைவான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும்  01.10.2019 உயர்த்தி வழங்கப்படும்.
 நன்றி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, September 26, 2019

                                        முக்கிய செய்திகள் 
அதிகரித்துவரும் CPGRAMS புகார்கள் குறித்து அஞ்சல் வாரியம் ஆராய்ந்து அத்தகைய புகார்களை குறைக்கும் பொருட்டு அஞ்சல் ஊழியர்களுக்கு மேலும் தேவையான SOFT SKILL மற்றும் LEADERSHIP QUALITY குறித்த பயிற்சிகளை அளிக்க உத்தரவிட்டுள்ளது .
பொதுவாக வருகின்ற புகார்கள் அனைத்தும் கவுண்டரில் பணிபுரியும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் நெட் கிடைக்கவில்லை -SAP வேலைசெய்யவில்லை(என்ற உண்மையை ) என்று நிரந்தர பதில்களாக  சொல்வதாகவும் மற்றொன்று வாடிக்கையாளர்களுக்கும் அஞ்சல் கவுண்டரில் பணியாற்றும் ஊழியர்களுக்கும்  உள்ள தொடர்பு இடைவெளி ஆகும் .இறுதியாக இதுபோன்று நடக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தாக்கீது வந்துள்ளது .ஆகவே நமது தோழர்கள் கவனமாக கவுண்டர்களில் வாடிக்கையாளர்களை கையாளும்படி கேட்டுக்கொள்கிறோம் (அஞ்சல் வாரிய கடித எண் NO-13-01/2019 DTD 02.09.2019)
         மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் சார்பாக புதுடெல்லியில் நேற்று 25.09.2019 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .5 சத பஞ்சப்படி அறிவிப்பை உடனே அறிவிக்கவேண்டும் போனஸ் மாதம் ஒன்றுக்கு 7000 என்பதை ரூபாய் 18000 ஆக மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக நடைபெற்றது .(போனஸ் பார்முலாவை மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகள் நாம் மறந்து ரொம்ப நாளாச்சு )
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை