...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 27, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 
   நமது கோட்ட கண்காணிப்பாளர்களுடனான மாதாந்திரபேட்டி 10.10.2019 அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டியில் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் /கருத்துக்கள் /ஆலோசனைகள் இருந்தால் 30.09.2019 குள் கோட்ட செயலர்களுக்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
   * மாவடி SO விற்கு டெபுடேஷன் செல்ல விருப்பமுள்ள தோழர்கள் இருந்தால் தெரிவிக்கவும் .
   * சூப்பர்வைசர் அஸோஸியேஷன் அதாவது இன்றைய போஸ்ட்மாஸ்டர் கிரேடு சங்கத்திற்கான அங்கீகாரம் அஞ்சல் வாரியத்தால் 23.09.2019 அன்று ரத்துசெய்யப்பட்டுவிட்டது .ஆகவே பழைய தோழர்கள் மீண்டும் நம்மோடு இனைந்து பணியாற்ற அழைக்கிறோம் .
*மத்திய அரசு ஊழியர் எழு ஆண்டுகளுக்கு மேல் அரசு ஊழியராக பணிபுரிந்து அவர் பணியில் இருக்கும் பொழுது இறந்தால்  முதல் பத்து ஆண்டுகளுக்கு  கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணி முடித்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 9000+DA+FMA   வழங்கப்பட்டு வந்தது.   தற்போது மத்திய அரசு இதில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்து பணியில் இருக்கும் பொழுது இறந்து இருந்தால் அந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கும் குடும்ப ஓய்வூதியமாக முதல் 10 ஆண்டு காலத்துக்கு 50% வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.        இந்த உத்தரவு 01.10.2019 முதல் அமலுக்கு வருகிறது.  இதற்கு முன் ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணி முடித்த பணியில் இருக்கும் பொழுது இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு குறைவான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும்  01.10.2019 உயர்த்தி வழங்கப்படும்.
 நன்றி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

4 comments:

  1. உயர்த்த பட்ட கிராஜிவிட்டி 1-1-2016க்கு பிறகு ஓய்வு பெற்ற ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு எப்போது கிடைக்கும்.

    ReplyDelete
  2. உயர்த்த பட்ட கிராஜிவிட்டி 1-1-2016க்கு பிறகு ஓய்வு பெற்ற ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு எப்போது கிடைக்கும்.

    ReplyDelete
  3. உயர்த்த பட்ட கிராஜிவிட்டி 1-1-2016க்கு பிறகு ஓய்வு பெற்ற ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு எப்போது கிடைக்கும்.

    ReplyDelete
  4. போஸ்ட்மாஸ்டர் கிரேடு க்கு என தனி சங்கம் என்பது இதுவரையிலும் இல்லை என்பது தான் உண்மையான கருத்து.supervisor சங்கத்தில் macp 1 முதல் யார் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்பதை உண்மை.macp 1,2,3,lsg,hsg ii,hsg I என அனைவரும் supervisor சங்கத்தில் சேரலாம்.இதில் தான் போஸ்ட்மாஸ்டர் கிரேடு ஊழியர்கள் சேர்ந்து உள்ளனர்.இதுதான் உண்மை இது தெரியாமல் பல பேர் போஸ்ட்மாஸ்டர் cadre kku என தனி சங்கம் உள்ளது என நினைத்து கொண்டுள்ளீர்கள்.

    ReplyDelete