...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 22, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .

LSG  பதவிஉயர்வு /இடமாறுதலுக்கான அறிவிப்புகள் கோட்ட அலுவகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளன .முதலில் பதவி உயர்விற்க்கெல்லாம் VACANCY NOTIFY பண்ணமுடியாது விருப்ப விண்ணப்பங்கள் கோரிடமுடியாது என்ற நிலையில் இருந்த நிர்வாகத்தை நம்முடைய வலியுறுத்தல்கள் மூலமாக இன்று மிகத்தெளிவான அறிவிப்பினை கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது .அதற்காக நமது SSP மற்றும் ASP(HOS ) ஆகியோர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .விருப்பமனுக்களை இன்று 22.09.2020 பிற்பகல் 2 மணிக்குள் கோட்ட நிர்வாகத்திற்கு இமெயில் அனுப்பிட கேட்டுக்கொள்கிறோம் .அனேகமாக இன்றுமாலை DPC கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது .பழைய HSG II இடங்களை தேர்வுசெய்கின்ற ஊழியர்கள் தங்கள் ஐயங்களை கலைந்திட நமது கோட்ட செயலரை தொடர்புகொண்டிட கேட்டுக்கொள்கிறோம் .பதவி உயர்வு பெறுகின்ற 44 ஊழியர்களில் கிட்டத்தட்ட 37 ஊழியர்கள் மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றுகிறவர்கள் .ஆனால் மாநகராட்சி பகுதிக்குள் இருக்கும் VACANCY 7 மட்டுமே .LSG PA VACANCY என்றால் களக்காடு நாங்குநேரி வள்ளியூர் .பதவியுயர்வினை ஏற்றுக்கொள்வதில் என்ன லாபம் ?ஏற்றுக்கொள்ளாவிட்டால் எத்தகைய இழப்புகள் என்பதனை சிந்தித்து முடிவெடுப்பீர் .நேற்றைய உத்தரவில் இடமாறுதல் பெற்றுள்ள தோழர்கள் S.ஆனந்தகோமதி (மாநில மகிளா கமிட்டிஉறுப்பினர் )A.ஜான் தேவதாஸ் GR .துளசிராமன் மற்றும் நம்முடைய நிதிச்செயலர் பிராபகர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .

NDC பார்சல் பிரிவிற்கு GDS ஊழியர்களை OFFICIATING பார்க்க அனுமதிக்கலாம் என்ற உத்தரவை நேற்று பெற்றுத்தந்த அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் புஷ்பாகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .இதைதான் அன்றுமுதல் வலியுறுத்திவந்தோம் .மேலும் கூடுதலாக டெலிவரி ஆட்களை நியமிக்கும் பணியும் மிக துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது .

நமது கோட்ட சங்க அலுவகத்திற்கு நன்கொடையாக தோழர் மோகன் பணிஓய்வு தேனி கோட்டம் அவர்கள் ரூபாய் 1000 வழங்கியுள்ளார்கள் .அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.நன்றி 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Saturday, September 19, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ..

LSG  பதவி  உயர்வு இடமாறுதல்கள் சம்பந்தமாக இன்று VACANCY இடங்களும்  விருப்ப மனுக்களும் கோரப்படலாம் என்று தெரிகிறது .முன்னதாக நேற்று பழைய LSG ஊழியர்களுக்கான விருப்பமனுக்களும் பரிசீலிக்கட்டுள்ளது. இது போக மீதி உள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் .நமது கோரிக்கைளின் படியே ஊழியர்களின் நலன் காக்க முனைப்புக்காட்டும் கோட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

                                             மாதாந்திர பேட்டி --25.09.2020

நீண்ட நாட்களுக்கு பிறகு நமது கோட்டத்தில் மாதாந்திர பேட்டிக்காக அறிவிப்புகள் வந்துள்ளது .கோவிட் -19 காரணத்தை காட்டி மூன்று பேருக்கு பதிலாக 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அஞ்சல் மூன்றுக்கு காலை 10.00 மணி என்றும் அஞ்சல் நான்கிற்கு 11.00 மணியென்றும் தனித்தனியாக நடக்கிறது .பிரச்சினைகளை உடனே கோட்டசெயலருக்கு தெரிவியுங்கள் .21.09.2020 குள் நாம் அனுப்பவேண்டும் . 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்டச் செயலர்கள் நெல்லை  


Friday, September 18, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நமது  கோட்டத்தில்  புதிதாக  கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள  திரு .S .கலைச்செல்வன் அவர்களை நேற்று மரியாதை  நிமித்தமாக சந்தித்து பேசினோம் .ஒரு சம்பிரதாய சந்திப்பாக இருந்தாலும் இன்றைய  முக்கிய பிரச்சினைகளான LSG  இடமாறுதல்களை எந்த அளவிற்கு ஊழியர்களுக்கு சாதகமாக பயன்படுத்திடமுடியுமோ அதை நாம் வலியுறுத்தினோம் .பதவியுயர்வுக்கு விருப்பமனுக்கள் கோரலாமா ?காலியிடங்களை அறிவிக்கவேண்டுமா என ஆரம்பத்தில் கேள்வி எழுப்பினார்கள் .இந்த புதிய கேள்விகள் நமது தென்மண்டலத்தில் உள்ள பல அதிகாரிகள் கேட்டுவருகிறார்கள் .குறிப்பாக விருதுநகர் தொடங்கி கோவில்பட்டி திருநெல்வேலி என அவர்களுக்குள் ஒரு வட்டத்தை வைத்துக்கொண்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .அந்தந்த கோட்ட சங்கங்கள்  வலியுறுத்தியதன் விளைவாக நாகர்கோயில் தூத்துக்குடி கோவில்பட்டி  கோட்டங்களில் அறிவிக்கப்பட்ட நோட்டிபிகேஷனை இரவு அவர்களின் பார்வைக்கு அனுப்பிவைத்துள்ளோம் .கூடுமானவரை ஊழியர்களின் விருப்ப இடங்களை பெற்றுத்தருவதில் நாமும் கொடுத்துஉதவுவதில் நிர்வாகமும் ஒரே மனநிலையில் இருந்தால் நிச்சயம் நல்ல முடிவுகள் ஏற்படும் .இறுதியாக இடமாறுதலுக்கான கவுன்சிலிங் குறித்தும் அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகளை குறித்தும் வலியுறுத்தியிருக்கிறோம் .இன்று இதுகுறித்து முடிவுகள் வெளிவரும் .அதேபோல் அஞ்சல் நான்கின் சார்பாகவும் ஒரே கோரிக்கையையான பாளையம்கோட்டை நோடல் பார்சல் பிரிவிற்கு மேலும் இரண்டு GDSMD பதவிகளை பட்டுவாடாவிற்கும் ஒரு GDSMC  பதவியை MTS பதவிக்கும் ஷெலிட்டனில் இருந்து REDRAW பண்ணி வழங்கிட வேண்டும் என்றும் இந்த அதிகாரம் கோட்ட அதிகாரிக்கே இருப்பதை சுட்டிக்காட்டி நிரந்தர தீர்வை ஏற்படுத்திட வற்புறுத்தப்பட்டது .நேற்றைய சந்திப்பில் அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் உதவி செயலர்கள் ஆனந்தராஜ் சரவணன் மற்றும் குத்தாலிங்கம் ஆகியோர்களும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர் T.புஷ்பாகரன் SK .பாட்சா ஆகியோர்களும்  கலந்து கொண்டனர் .

-------------------------------------------------------------------------------------------------------------------------

நமது மண்டலத்திற்கு புதிய PMG  ஆக திரு .G.நடராஜன்  IPoS அவர்கள் பொறுப்பேற்கிறார்கள் .திரு .நடராஜன் அவர்கள் நமது கோட்டத்தில் 2007-2008 ஆம் ஆண்டுகளில் கண்காணிப்பாளராக பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .நமது புதிய PMG அவர்களை நமது கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம் .

--------------------------------------------------------------------------------------------------------------------

நமது கோட்டத்தில் கடைசியாக வெளிவந்த MACP உத்தரவிற்கான புதிய சம்பளம் நிர்ணயம் மற்றும் நிலுவை தொகைகள் இந்த மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் .

--------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை