...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 18, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நமது  கோட்டத்தில்  புதிதாக  கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள  திரு .S .கலைச்செல்வன் அவர்களை நேற்று மரியாதை  நிமித்தமாக சந்தித்து பேசினோம் .ஒரு சம்பிரதாய சந்திப்பாக இருந்தாலும் இன்றைய  முக்கிய பிரச்சினைகளான LSG  இடமாறுதல்களை எந்த அளவிற்கு ஊழியர்களுக்கு சாதகமாக பயன்படுத்திடமுடியுமோ அதை நாம் வலியுறுத்தினோம் .பதவியுயர்வுக்கு விருப்பமனுக்கள் கோரலாமா ?காலியிடங்களை அறிவிக்கவேண்டுமா என ஆரம்பத்தில் கேள்வி எழுப்பினார்கள் .இந்த புதிய கேள்விகள் நமது தென்மண்டலத்தில் உள்ள பல அதிகாரிகள் கேட்டுவருகிறார்கள் .குறிப்பாக விருதுநகர் தொடங்கி கோவில்பட்டி திருநெல்வேலி என அவர்களுக்குள் ஒரு வட்டத்தை வைத்துக்கொண்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது .அந்தந்த கோட்ட சங்கங்கள்  வலியுறுத்தியதன் விளைவாக நாகர்கோயில் தூத்துக்குடி கோவில்பட்டி  கோட்டங்களில் அறிவிக்கப்பட்ட நோட்டிபிகேஷனை இரவு அவர்களின் பார்வைக்கு அனுப்பிவைத்துள்ளோம் .கூடுமானவரை ஊழியர்களின் விருப்ப இடங்களை பெற்றுத்தருவதில் நாமும் கொடுத்துஉதவுவதில் நிர்வாகமும் ஒரே மனநிலையில் இருந்தால் நிச்சயம் நல்ல முடிவுகள் ஏற்படும் .இறுதியாக இடமாறுதலுக்கான கவுன்சிலிங் குறித்தும் அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகளை குறித்தும் வலியுறுத்தியிருக்கிறோம் .இன்று இதுகுறித்து முடிவுகள் வெளிவரும் .அதேபோல் அஞ்சல் நான்கின் சார்பாகவும் ஒரே கோரிக்கையையான பாளையம்கோட்டை நோடல் பார்சல் பிரிவிற்கு மேலும் இரண்டு GDSMD பதவிகளை பட்டுவாடாவிற்கும் ஒரு GDSMC  பதவியை MTS பதவிக்கும் ஷெலிட்டனில் இருந்து REDRAW பண்ணி வழங்கிட வேண்டும் என்றும் இந்த அதிகாரம் கோட்ட அதிகாரிக்கே இருப்பதை சுட்டிக்காட்டி நிரந்தர தீர்வை ஏற்படுத்திட வற்புறுத்தப்பட்டது .நேற்றைய சந்திப்பில் அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் உதவி செயலர்கள் ஆனந்தராஜ் சரவணன் மற்றும் குத்தாலிங்கம் ஆகியோர்களும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர் T.புஷ்பாகரன் SK .பாட்சா ஆகியோர்களும்  கலந்து கொண்டனர் .

-------------------------------------------------------------------------------------------------------------------------

நமது மண்டலத்திற்கு புதிய PMG  ஆக திரு .G.நடராஜன்  IPoS அவர்கள் பொறுப்பேற்கிறார்கள் .திரு .நடராஜன் அவர்கள் நமது கோட்டத்தில் 2007-2008 ஆம் ஆண்டுகளில் கண்காணிப்பாளராக பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .நமது புதிய PMG அவர்களை நமது கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம் .

--------------------------------------------------------------------------------------------------------------------

நமது கோட்டத்தில் கடைசியாக வெளிவந்த MACP உத்தரவிற்கான புதிய சம்பளம் நிர்ணயம் மற்றும் நிலுவை தொகைகள் இந்த மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் .

--------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment