அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .
LSG பதவிஉயர்வு /இடமாறுதலுக்கான அறிவிப்புகள் கோட்ட அலுவகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளன .முதலில் பதவி உயர்விற்க்கெல்லாம் VACANCY NOTIFY பண்ணமுடியாது விருப்ப விண்ணப்பங்கள் கோரிடமுடியாது என்ற நிலையில் இருந்த நிர்வாகத்தை நம்முடைய வலியுறுத்தல்கள் மூலமாக இன்று மிகத்தெளிவான அறிவிப்பினை கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது .அதற்காக நமது SSP மற்றும் ASP(HOS ) ஆகியோர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .விருப்பமனுக்களை இன்று 22.09.2020 பிற்பகல் 2 மணிக்குள் கோட்ட நிர்வாகத்திற்கு இமெயில் அனுப்பிட கேட்டுக்கொள்கிறோம் .அனேகமாக இன்றுமாலை DPC கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது .பழைய HSG II இடங்களை தேர்வுசெய்கின்ற ஊழியர்கள் தங்கள் ஐயங்களை கலைந்திட நமது கோட்ட செயலரை தொடர்புகொண்டிட கேட்டுக்கொள்கிறோம் .பதவி உயர்வு பெறுகின்ற 44 ஊழியர்களில் கிட்டத்தட்ட 37 ஊழியர்கள் மாநகராட்சி பகுதிகளில் பணியாற்றுகிறவர்கள் .ஆனால் மாநகராட்சி பகுதிக்குள் இருக்கும் VACANCY 7 மட்டுமே .LSG PA VACANCY என்றால் களக்காடு நாங்குநேரி வள்ளியூர் .பதவியுயர்வினை ஏற்றுக்கொள்வதில் என்ன லாபம் ?ஏற்றுக்கொள்ளாவிட்டால் எத்தகைய இழப்புகள் என்பதனை சிந்தித்து முடிவெடுப்பீர் .நேற்றைய உத்தரவில் இடமாறுதல் பெற்றுள்ள தோழர்கள் S.ஆனந்தகோமதி (மாநில மகிளா கமிட்டிஉறுப்பினர் )A.ஜான் தேவதாஸ் GR .துளசிராமன் மற்றும் நம்முடைய நிதிச்செயலர் பிராபகர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
NDC பார்சல் பிரிவிற்கு GDS ஊழியர்களை OFFICIATING பார்க்க அனுமதிக்கலாம் என்ற உத்தரவை நேற்று பெற்றுத்தந்த அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் புஷ்பாகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .இதைதான் அன்றுமுதல் வலியுறுத்திவந்தோம் .மேலும் கூடுதலாக டெலிவரி ஆட்களை நியமிக்கும் பணியும் மிக துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது .
நமது கோட்ட சங்க அலுவகத்திற்கு நன்கொடையாக தோழர் மோகன் பணிஓய்வு தேனி கோட்டம் அவர்கள் ரூபாய் 1000 வழங்கியுள்ளார்கள் .அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.நன்றி
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment