அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ..
LSG பதவி உயர்வு இடமாறுதல்கள் சம்பந்தமாக இன்று VACANCY இடங்களும் விருப்ப மனுக்களும் கோரப்படலாம் என்று தெரிகிறது .முன்னதாக நேற்று பழைய LSG ஊழியர்களுக்கான விருப்பமனுக்களும் பரிசீலிக்கட்டுள்ளது. இது போக மீதி உள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் .நமது கோரிக்கைளின் படியே ஊழியர்களின் நலன் காக்க முனைப்புக்காட்டும் கோட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
மாதாந்திர பேட்டி --25.09.2020
நீண்ட நாட்களுக்கு பிறகு நமது கோட்டத்தில் மாதாந்திர பேட்டிக்காக அறிவிப்புகள் வந்துள்ளது .கோவிட் -19 காரணத்தை காட்டி மூன்று பேருக்கு பதிலாக 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அஞ்சல் மூன்றுக்கு காலை 10.00 மணி என்றும் அஞ்சல் நான்கிற்கு 11.00 மணியென்றும் தனித்தனியாக நடக்கிறது .பிரச்சினைகளை உடனே கோட்டசெயலருக்கு தெரிவியுங்கள் .21.09.2020 குள் நாம் அனுப்பவேண்டும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்டச் செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment