...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, February 28, 2015

                                        சிந்தனைக்கு

27.02.2015 போஸ்டல் JCA தர்ணா நாடு முழுவதும் ஊழியர்களால் சிறப்பாக நடைபெற்றது .மதுரையில் மட்டும் அதிகாரிகளால் நடத்த பட்டது? .
இது நமது உரிமையை பறிக்கும் செயலாகும் .இதற்கு யார் காரணம் என மாறி மாறி குற்றம் சுமத்தாமல் இதற்கு ஒரு தீர்வை காண வேண்டும் .விரைவில் தென் மண்டலத்தில் உள்ள அனைத்து P 3,P 4. R 3.R 4 சங்கங்களின் செயலர்களின் கூட்டத்தை கூட்டி அனைத்து மாநில சங்கத்தின் ஒப்புதலோடு சரியான பாடத்தை நிர்வாகத்திற்கு புகட்டுவோம் 

            அவர்களுக்கு கடிவாளம் தான் 
            தேவை என்றால் கயிறு வாங்க வேண்டும் 
            சாட்டை தான் தேவை என்றால் 
            பிரம்பு    கொண்டு வர வேண்டும் 
            அங்குசம் தான் வேண்டும் என்றால் 
            அதையும் வாங்கியாக வேண்டும் 
            நம் உரிமை காக்க பட வேண்டும் என்றால்  
            உணர்வு  தீயால் 
           மதுரையை மீண்டும் எரித்தாக வேண்டும் 

                                                தோழமையுடன் 
                                              SK .ஜேக்கப்ராஜ்


Thursday, February 26, 2015

           அஞ்சல் கூட்டு போராட்ட குழுவின் சார்பாக மதுரையில் தர்ணா 

                           வாரீர் !          வாரீர் ! 

நாள் 27.02.2015      நேரம் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை 
இடம் .மதுரை மண்டல அலுவலக வாளகம் 

நேற்றைய PMG அவர்களுடன் நடந்த பேட்டியின் போது ஒரே குரலாய் உரிமை குரல் கொடுத்த P 4 மண்டல செயலர் தோழர் ராஜ்மோகன் .நெல்லை கோட்ட செயலர் தோழர் பாட்சா ,R 3 தோழர்கள்  தோழர் பாண்டிய ராஜன் ,பாலமுருகன் R 4 தோழர்  செல்வராஜ்   SBCO மாநில செயலர் தோழர் கார்த்திகேயன் ,கேசவன் உள்ளிட்ட அனைத்து NFPE தோழர்களுக்கும்,மேலும் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கிய  மதுரை P 3கோட்ட செயலர் தோழர் சுந்தரமூர்த்தி அவர்களுக்கும்  எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

                  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு --
                  ஒற்றுமையே நமது பலம் --என்ன விலை                  கொடுத்தேனும் நம் 
                   ஒற்றுமை காப்போம் 

                                         வாழ்த்துக்களுடன் 
 தியாகராஜ பாண்டியன்      SK .ஜேக்கப்ராஜ் 
மண்டல செயலர்                   மாநில உதவி செயலர் 

மாநில சங்கத்தின் செய்தி கீழே !


PERMISSION GRANTED BY PMG, SR FOR CONDUCTING DHARNA AT R.O. PREMISES

அன்புத் தோழர்களுக்கு , வணக்கம் ! இன்று  இரு மாதங்களுக்கு ஒரு முறையான மதுரை மண்டல PMG அவர்களுடனான பேட்டி    நடைபெற்றது. நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் மண்டலச் செயலர் தோழர். தியாகராஜபாண்டியன் அவர்களும்  மாநில உதவிச் செயலர் தோழர். ஜேக்கப்ராஜ் அவர்களும்  கலந்துகொண்டார்கள்.  பேட்டியின் போது  நம்முடைய  மாநிலச் செயலர்  அளித்த கடித நகலை  PMG அவர்களிடம்  அளித்து முழு நாள்  தார்ணா  போராட்டத்தை  மண்டல அலுவலக வளாகத்தில் நடத்திடவும் , கோட்டங்களில்   தோழர்களுக்கு  விடுப்பு அளிக்க வேண்டியும்  பேசினர் . 

அதன் முடிவாக  உரிய விடுப்பு  கோட்டங்களில் அளிக்க அனுமதிப்பதாகவும்  மண்டல அலுவலக வளாகத்தில் தார்ணா  நடத்திட அனுமதிப்பதாகவும் PMG, SR  அவர்கள்  தெரிவித்துள்ளார்கள். இந்த செய்தியை  உடன் நம் வலைத்தளத்தில்  பிரசுரிக்குமாறு  நம்முடைய தென்  மண்டலச் செயலரும், மாநில  உதவிச் செயலரும்  கை பேசி மூலம் மாலை 05.30 மணியளவில்  மாநிலச் செயலரிடம் தெரிவித்தார்கள்.  எனவே தென் மண்டலத்தில் நம்முடைய முழுநாள் தார்ணா  
போராட்டத்தில்  தோழர்கள்  முழுமையாக கலந்துகொண்டு  போராட்டம்  சிறக்கச் செய்திட வேண்டுகிறோம்.
 

Wednesday, February 25, 2015

மதுரை தர்ணா போராட்டத்திற்கு ஊழியர்களுக்கு எந்த வித விடுப்பும் கொடுக்க கூடாது என்று அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் மதுரையில் இருந்து வாய்மொழி உத்தரவு போடும் அதிகாரி யார் ?

இது குறித்து மண்டல தலைவருக்கு மாநில NFPE ஒருங்கிணைப்பு குழு சார்பாக அனுப்பப்பட்ட கடிதம் 




மதுரையில் நடக்கும் எந்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் ஊழியர்கள் கலந்து கொள்ள கூடாது என்ற வகையில் மீண்டும் 27.02.2015 அன்று அகில இந்திய அறை கூவலுக்கு கூட விடுப்பு தர மறுக்கும் நெல்லை கோட்ட கண்காணிப்பாளருக்கு நாம் எழுதிய கடிதம் --


Tuesday, February 24, 2015



                                              முக்கிய செய்திகள் 

தென் மண்டல தலைவருடனான இரு மாதாந்திர பேட்டி 25.02.2015 அன்று மதுரையில் நடைபெறுகிறது .தோழர்கள் RV .தியாகராஜ பாண்டியன் மற்றும் SK .ஜேக்கப்ராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .அஞ்சல் நான்கின் சார்பாக நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களும் கலந்து கொள்கிறார்கள் .

27.02.2015 அன்று மதுரையில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் கோட்ட செயலர்களிடம் தகவல்களை தெரிவிக்கவும் .


27.02.2015 அன்று மதுரையில் தர்ணா போராட்டத்திற்கு கலந்து கொள்ள விருப்பதால் நெல்லையில் 27.02.2015 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியைவேறு தேதிக்கு  மாற்றி தர கோட்ட கண்காணிப்பாளரிடம் வேண்டுகோள் வைக்க பட்டுள்ளது .




Monday, February 23, 2015

                 மதுரையில் தர்ணா --27.02.2015 வாரீர் !

PREPARE FOR P 3 & GDS STATE LEVEL II PHASE PROG. ON 27 TH FEB.2015 AND FOR PJCA DHARNA


                                   தேனி கோட்ட மாநாடு 

தேனி கோட்டத்தின் 30 வது மாநாடு 22.02.2015 அன்று பெரியகுளத்தில் வைத்து கோட்ட தலைவர் தோழியர் பாண்டியம்மாள் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மாநாட்டை வாழ்த்தி தோழர்கள் SK .ஜேக்கப்ராஜ்RV .தியாகராஜ பாண்டியன் ,AIGDSU சங்கத்தின் அகில இந்திய தலைவர் தோழர் M .ராஜாங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .மாநாட்டில் 
தலைவராக C .நாகேந்திரன் அவர்களும் 
செயலராக  K .சிவமூர்த்தி அவர்களும் 
நிதி செயலராக C .கார்த்திகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் .




                 தோழர் SKJ அவர்களின் சிறப்புரை 
                                                   தோழர் M .ராஜாங்கம் 

                        தோழர் தியாகராஜ பாண்டியன் 

       புதிய நிர்வாகிகள் தேர்வை தோழர் SKJ நடத்தி கொடுத்தார் 
         












Saturday, February 21, 2015

நெல்லையில் நாம் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்த பத்திரிகை செய்திகள் 

                                            நன்றி -தினகரன் 21.02.2015


                                             நன்றி -தினமணி 21.02.2015

நேஷனல் JCA அறைகூவலுக்கு இனங்க நெல்லை NFPE P 3&P 4 சார்பாக 20.02.2015 அன்று நடைபெற்ற  ஆர்ப்பாட்ட காட்சிகள் 









Friday, February 20, 2015

                                    கோட்ட அளவிலான செய்திகள் 

* இந்த மாத மாதாந்திர பேட்டி 27.02.2015 அன்று நடைபெறுகிறது .Subjects ஏதும் இருந்தால் 23.02.2015 -ள் கோட்ட செயலரிடம் தெரிவிக்கவும் .

* RT Notification தயார் நிலையில் இருக்கிறது இன்னும் ஓரிரு நாட்களில்
வெளிவரும் என்று எதிர்பார்க்க படுகிறது 

* LRPA பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் .சுமார் 13  ஊழியர்கள் LRPA பட்டியலில் இடம் பெறுகிறார்கள் .

* Postal JCA  சார்பாக அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று நெல்லையில் NFPE சார்பாக மட்டும் நடைபெறுகிறது .தோழர்கள் அனைவரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளும் படி கேட்டு கொள்ள படுகிறார்கள் .

                                                       நன்றி .

                                                           தோழமையுடன் 
                                            SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------

20.07.2014 அன்று நடைபெற்ற POSTMASTER Grade 1 தேர்வு முடிவுகள் 

நமது கோட்டத்தை சார்ந்த நமது NFPE உறுப்பினர்கள் 

1.தோழர் C .விக்னேஷ் SPM திருக்குறுங்குடி (மாநிலத்தில் இரண்டாவது இடம் )
2. தோழர் G .அருண்குமார் PA பாளையம்கோட்டை 
3. தோழர் G .மணி  (முன்னாள் PA வடக்கன்குளம்) (Now at  திருப்பத்தூர் கோட்டம் ) 
ஆகியோர்களுக்கு நெல்லை NFPE ன் வெற்றி வாழ்த்துக்கள் 





வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்ட அறிவிப்பு எதிரொலி --இந்த மாத சம்பளத்தை முன் கூட்டியே வழங்க மாநில சங்கம் கோரிக்கை 

CIRCLE UNION ADDRESSED CPMG, TN FOR DRAWAL OF PAY AND ALLOWANCES BY 24.02.2015

Thursday, February 19, 2015

அகில இந்திய கூட்டு போராட்டகுழு சார்பாக அறிவிக்கப்பட்ட போராட்ட இயக்கங்களின் முதற்கட்டமாக கோட்ட அளவில் தர்ணா 

     நெல்லையில் NFPE P 3 & P 4 சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம்  

நாள் .20.02.2015         நேரம்       மாலை 6 மணி 
இடம் .பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை தோழர் A .ஆதிமூலம் அவர்கள் 

                                                          கோரிக்கைகள் 

* அஞ்சல் துறையை ஆறு பிரிவாக பிரித்து தனியர்மயமாக்க பரிந்துரைத்த   TSR குழு அறிக்கையை நிராகரிக்க வேண்டும் 

* ஊதியக்குழுவின் முடிவுகளை 01.01.2014 முதல் அமுல் படுத்த வேண்டும் 

*100 % பஞ்சபடியை அடிப்படை சம்பளத்தோடு இணைக்க வேண்டும் 
* 25% ஊதியத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் 
* GDS ஊதிய மாற்றத்தை ஊதிய குழுவின் பரிந்துரைக்குள் கொண்டு வரவேண்டும்
.
   உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்போம் !

                                     வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப்ராஜ்                                                SK .பாட்சா 

MACP பதவி உயர்வுகள் உரிய நேரத்தில் வழங்கிட வேண்டும் --மீண்டும் ஒரு விளக்க ஆணை 

Modified Assured Career Progression (MACP) Scheme for the Central Government Civilian Employees - Instructions regarding.


Modified Assured Career Progression Scheme for the Central Government Civilian Employees - Instructions regarding  the time limits indicated in MACPS for grant of benefits under this scheme as and when the employees become eligible for such benefits. 



No.35034/3/2008-Estt. (D)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
(Department of Personnel and Training)
North Block, New Delhi, the 18th February, 2015

OFFICE MEMORANDUM

Subject : MODIFIED ASSURED CAREER PROGRESSION SCHEME FOR THE CENTRAL GOVERNMENT CIVILIAN EMPLOYEES-instructions regarding,

This Department on the recommendation of Sixth Central Pay Commission in Para 6.1.15 of its report and in supersession of previous Assured Career Progression Scheme, vide O.M. No. 35034/3/2008-Estt.(D) dated 19.05.2009 introduced the Modified Assured Career Progression Scheme (MACPS) for the Central Government Civilian Employees which is operational w.e.f. 01.09.2008. MACP Scheme envisages the three financial upgradations at intervals of 10, 20 and 30 years of continuous regular service to all regularly appointed Group "A", "B", and "C" Central Government Civilian Employees.

2. As per para 6 of DOPT's O.M. No. 35034/3/2008-Estt.(D) dated 19.05.2009, the Screening Committee would follow a time-schedule and meet twice in a financial year preferably in the first week of January and first week of July of a year for advance processing of the cases maturing in that half. Accordingly, cases maturing during the first-half (April/September) of a particular financial year would be taken up for consideration by the Screening Committee meeting in the first week of January. Similarly, the Screening Committee meeting in the first week of July of any financial year would process the cases that would be maturing during the second-half (October-March) of the same financial year.

3. It has come to notice of this Department that the benefits of MACPS are not being granted as per the schedule/provisions in the MACP Scheme leading to dissatisfaction and grievances among the employees. Therefore, Ministrie/Departments are advised to ensure strict compliance to the time limits indicated in MACPS for grant of benefits under this scheme as and when the employees become eligible for such benefits.

sd/-
(Mukta Goel)
Director(E-I)

Wednesday, February 18, 2015

                           எழுத்தர் நேரடி தேர்வு முடிவுகள் 

மௌனம் கலைத்தது மாநில நிர்வாகம் --மாநில சங்க முயற்சிக்கு நன்றி 

Results of Postal Assistant/Sorting Assistant Direct Recruitment Examination TN Circle declared

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் . தமிழக அஞ்சல்  RMS   எழுத்தர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.  தேர்வு  அறிவிக்கப்பட்டு  ஓராண்டு காலத்திற்குப் பின்னர், தேர்வு முடிவுகள் CMC இலிருந்து அனுப்பப் பட்டு 1 1/2 மாதங்கள்  கடந்து  தற்போது  வெளியிடப்பட்டுள்ளது . நமது போராட்ட அறிவிப்பில்  இதுவும் ஒரு கோரிக்கை .   தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைப்பை  CLICK  செய்து பார்க்கவும்.

 PLEASE CLICK HERE TO VIEW THE RESULTS

நெல்லை கோட்டத்தில் தேர்வான தோழர்களுக்கு NFPE ன் வாழ்த்துக்கள் 

                    வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப்ராஜ் 

டார்கெட் நிர்ணயம் /போலி பாலிசி போடு .எப்படியாவது இலக்கை எட்ட வேண்டும் என்பதற்காக  இலாகா விதிமீறல் ,அதிகாரிகளின் கெடுபிடிகள் ,போன்ற பிரட்சினைகளுக்கு தீர்வு கான அஞ்சல் மூன்று மாநில சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட முதற்கட்ட போராட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றது .நெல்லையில் கோட்ட சங்கமும் /அம்பை கிளை சங்கமும் இனைந்து அம்பாசமுத்திரத்தில் ஆர்ப்பாட்டம் 17.02.2015 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது .

                                                          தோழர் வேல்முருகன் கிளை செயலர் 

            தோழர் RV .தியாகராஜ பாண்டியன் ,மண்டல செயலர் 
 தோழர் SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர் ,மாநில உதவி செயலர் 

                            தோழர் SK .பாட்சா  கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

,

Tuesday, February 17, 2015

                      நெல்லை கோட்ட அளவிலான செய்திகள் 

அஞ்சல் மூன்று .GDS சங்கங்கங்கள் சார்பாக நடைபெறும் முதற்கட்ட ஆர்ப்பாட்டம் 17.02.2015 அன்று மாலை 6 மணியளவில் நெல்லை கோட்டம் .மற்றும்   அம்பை கிளையின் சார்பாக அம்பாசமுத்திரத்தில் நடைபெறுகிறது . அனைவரும்  வாரீர் !









           தேனி  கோட்ட மாநாடு --- 22.02.2015



















Friday, February 13, 2015

அன்பார்ந்த தோழர்களே ! 
 நம் துறையை காப்பாற்ற நடைபெறும் வேலை நிறுத்தங்களை வெற்றி பெற வைப்போம் 


Postal JCA - NFPE & FNPO - GDS(NFPE) & NUGDS - agitational Programme

20th February, 2015

Dharna infront of Divisional Offices
***
27th February, 2015
Dharna infront of Regional offices

***
2nd March, 2015

Dharna infront of Circle Offices

***
15th April, 2015

Dharna by all India Leaders at

 Directorate,

New Delhi

*****
from 06th May-2015
  

Indefinite 


Strike

Wednesday, February 11, 2015

                                                முக்கிய  செய்திகள் 

மாநில சங்க அறைகூவலை ஏற்று நெல்லை கோட்டம் சார்பாக அம்பாசமுத்திரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 

நாள் 17.02.2015  நேரம் மாலை 6 மணி
இடம் .அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகம் 
  
சிறப்புரை 
 தோழர்கள் 

   SK .ஜேக்கப்ராஜ் மாநில உதவி செயலர் & கோட்ட செயலர் 
 RV .தியாகராஜ பாண்டியன்  மண்டல செயலர் 

கோரிக்கைகள்  





Tuesday, February 10, 2015

Encashment of earned leave alongwith LTC – Clarification issued by Dopt


No.14028/2/2012-Estl(L)
Government of India
Ministry of Personnel, PG and Pensions
(Department of Personnel and Training)
*****
New Delhi, dated the 9th February, 2015.
OFFICE MEMORANDUM
Subject : Encashment earned leave alongwith LTC- clarification.

The undersigned is directed to refer to DoPT's O.M. No. 31011/4/2008-Estt.(A), dated 23s September, 2008 allowing encashment of earned leave along with LTC and to say that references have been received with regard to the  number of times that a Government servant can avail of the encashment within the same block.

2. It is clarified that the Government servants governed by the CCS (Leave) Rules, 1972 and entitled to avail LTC may encash earned leave upto 10 days at the time of availing both types of LTCs, i.e. `Hometown' and 'anywhere in India'. However, when the one and the same LTC is being availed of by the Government servant and his family members separately in a block year, encashment of leave would be restricted to one occasion only.
3. Hindi version will follow.
Sd/-
(Mukul Ratra )
Director
Tele: 26164314
To

All Ministries/ Department of Government of India (As per standard mailing list)

Friday, February 6, 2015

போஸ்டல் JCA சார்பாக 40 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (05.02.2015) நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த கோரிக்கைகளிலும் முன்னேற்றம் இல்லை .போராட்ட  தயாரிப்பு முழுஅளவில் நடத்த JCA முடிவு 

MEETING OF LEADERS OF POSTAL JOINT COUNCIL OF ACTION WITH DG & POSTAL BOARD MEMBERS ON 05.02.2015

MEETING OF PJCA (COMPRISING NFPE,FNPO, AIPEUGDS(NFPE) AND NUGDS WAS HELD ON 40 POINTS STRIKE CHARTER OF DEMANDS WITH SECRETARY (POST) AT DAK BHAWAN NEW DELHI ON 05,02.2015.

MINUTES OF MEETING WILL BE EXHIBITED ON WEB-SITE AFTER RECEIPT FROM DEPT. OF POSTS.

NO FINAL SETTLEMENT ON ANY ISSUE HAS BEEN REACHED. EVEN THOUGH POSITIVE ASSURANCES HAVE BEEN GIVEN BY SECRETARY (POSTS)

            WE SHOULD CONTINUE OUR CAMPAIGN AND PREPARATIONS FOR INDEFINITE STRIKE FROM MAY 06th, 2015.

REGARDING GDS, SECRETARY (POST)   HAS AGREED TO RE-EXAMINE THE CASE FOR REFERRING THE REVISION OF WAGES AND OTHER SERVICE CONDITIONS OF GDS TO 7th C.P.C. WE HAVE TAKEN A FIRM STAND THAT WE DO NOT WANT SEPARATE COMMITTEE FOR GDS.

 SECRETARY GENERAL NFPE & FNPO, GENERAL SECRETARIES OF AFFILIATED UNIONS INCLUDING GDS UNIONS PARTICIPATED IN MEETING.

Thursday, February 5, 2015

                                                              செய்திகள் 

Rule 38 மூலம் இடமாறுதல் கேட்கும் ஊழியர்களுக்கு அரசின் சமீபத்திய ஆணையின் படி Category படி விண்ணபங்களை பரிசீலிக்க உத்தரவு வந்துள்ளது .அதாவது  OC /OBC /SC /ST என்ற அடிப்படையில் தான்   விண்ணபங்களை மண்டல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் .இந்த நிபந்தனை இந்த உத்தரவு வந்த நாள் முதல் என்றில்லாமல் ஏற்கனவே Rule 38 விண்ணபங்கள் அனுப்பிய பழைய ஊழியர்களுக்கும் பொருந்தும் என புதிய உத்தரவு வந்துள்ளதாம் .
               இனிமேல் RULE 38 படி விரைவில் இடமாறுதல் கிடைக்கும் என்ற புதிய ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் கானல் நீர்தானா ?
         மத்திய சங்கம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .
------------------------------------------------------------------------------------------------------------------------------

பிசினஸ் டெவெலப்மென்ட் என்ற பெயரில் ஊழியர்களை வதைக்காதே --CPMG அவர்களுக்கு மாநில சங்கத்தின் கடிதம் 

CIRCLE UNION ADDRESSED CPMG,TN AGAINST ATROCITIES IN THE NAME OF BUSINESS DEVELOPMENT