...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 26, 2015

           அஞ்சல் கூட்டு போராட்ட குழுவின் சார்பாக மதுரையில் தர்ணா 

                           வாரீர் !          வாரீர் ! 

நாள் 27.02.2015      நேரம் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை 
இடம் .மதுரை மண்டல அலுவலக வாளகம் 

நேற்றைய PMG அவர்களுடன் நடந்த பேட்டியின் போது ஒரே குரலாய் உரிமை குரல் கொடுத்த P 4 மண்டல செயலர் தோழர் ராஜ்மோகன் .நெல்லை கோட்ட செயலர் தோழர் பாட்சா ,R 3 தோழர்கள்  தோழர் பாண்டிய ராஜன் ,பாலமுருகன் R 4 தோழர்  செல்வராஜ்   SBCO மாநில செயலர் தோழர் கார்த்திகேயன் ,கேசவன் உள்ளிட்ட அனைத்து NFPE தோழர்களுக்கும்,மேலும் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கிய  மதுரை P 3கோட்ட செயலர் தோழர் சுந்தரமூர்த்தி அவர்களுக்கும்  எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .

                  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு --
                  ஒற்றுமையே நமது பலம் --என்ன விலை                  கொடுத்தேனும் நம் 
                   ஒற்றுமை காப்போம் 

                                         வாழ்த்துக்களுடன் 
 தியாகராஜ பாண்டியன்      SK .ஜேக்கப்ராஜ் 
மண்டல செயலர்                   மாநில உதவி செயலர் 

மாநில சங்கத்தின் செய்தி கீழே !


PERMISSION GRANTED BY PMG, SR FOR CONDUCTING DHARNA AT R.O. PREMISES

அன்புத் தோழர்களுக்கு , வணக்கம் ! இன்று  இரு மாதங்களுக்கு ஒரு முறையான மதுரை மண்டல PMG அவர்களுடனான பேட்டி    நடைபெற்றது. நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் மண்டலச் செயலர் தோழர். தியாகராஜபாண்டியன் அவர்களும்  மாநில உதவிச் செயலர் தோழர். ஜேக்கப்ராஜ் அவர்களும்  கலந்துகொண்டார்கள்.  பேட்டியின் போது  நம்முடைய  மாநிலச் செயலர்  அளித்த கடித நகலை  PMG அவர்களிடம்  அளித்து முழு நாள்  தார்ணா  போராட்டத்தை  மண்டல அலுவலக வளாகத்தில் நடத்திடவும் , கோட்டங்களில்   தோழர்களுக்கு  விடுப்பு அளிக்க வேண்டியும்  பேசினர் . 

அதன் முடிவாக  உரிய விடுப்பு  கோட்டங்களில் அளிக்க அனுமதிப்பதாகவும்  மண்டல அலுவலக வளாகத்தில் தார்ணா  நடத்திட அனுமதிப்பதாகவும் PMG, SR  அவர்கள்  தெரிவித்துள்ளார்கள். இந்த செய்தியை  உடன் நம் வலைத்தளத்தில்  பிரசுரிக்குமாறு  நம்முடைய தென்  மண்டலச் செயலரும், மாநில  உதவிச் செயலரும்  கை பேசி மூலம் மாலை 05.30 மணியளவில்  மாநிலச் செயலரிடம் தெரிவித்தார்கள்.  எனவே தென் மண்டலத்தில் நம்முடைய முழுநாள் தார்ணா  
போராட்டத்தில்  தோழர்கள்  முழுமையாக கலந்துகொண்டு  போராட்டம்  சிறக்கச் செய்திட வேண்டுகிறோம்.
 

0 comments:

Post a Comment