...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, June 9, 2016

அன்பார்ந்த தோழர்களே !
        மத்தியஅரசு ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்பை அரசு பார்க்கின்ற விதம் வேறு .அதுவே  ரயில்வே ஊழியர்களும் சேர்ந்து விடுகின்ற  போராட்ட அறிவிப்பு என்றால் அரசு நடக்கிற விதமும்  வேறு --பேச்சுவார்த்தையில் பயன்படுத்துகிற பதமும்  வேறு .ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையில் மாற்றம் வேண்டி நாம் வைத்த கோரிக்கைகள் எந்த அளவிற்கு அதிகாரிகள் குழுவால் ஏற்றுகொள்ளப் பட்டுளது என்பது 11.06.2016 க்கு பிறகு தெரிந்துவிடும் .அதை முன் கூட்டியே கனித்துதான் 09.06.2016 அன்றே போராட்ட நோட்டீஸ்  கொடுக்கப்பட்டுள்ளது  .
     1974 ரயில்வே போராட்டம் சொல்லும் பாடம் என்ன ?
  ஊதிய விகிதம் ,ஊதிய விகிதத்தில் இருக்கும் தேக்கநிலை நீக்கப்பட வேண்டும் ,லோகோ தொழிலாளர்களின் பணிநேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ,ரயில்வே ஊழியர்கள்  17 லட்சம் பேர்  மே 8 1974 முதல் மே 27 வரை 20 நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர் .அன்றைய  மத்திய அரசு  அவர்கள் போராட்டத்தை ஒடுக்க பல வழிகளை கையாண்டது  .தலைவர்களை   கைதுசெய்தும் .ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தும் ,ஊழியர் குடியிருப்புகளில் புகுந்து குடும்ப உறுப்பினர்களை தாக்கியது என பல்வேறு அடைககுமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு போராட்டத்தை ஒடுக்கியது ..கோரிக்கைகளில் உடனடியாக வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் 1977 இல் போனஸ் உள்ளிட்ட அழியாபுகழ்   கோரிக்கைகள் தீர்விற்கு அது வழிகோலியது .பின்னாளில்  அது ஆட்சி மாற்றம் ஏற்படவும்  வித்திட்டது 
அன்றைய AIRF தலைவராக இருந்த திரு .ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களை காலம்  ரயில்வே  துறையின் மாண்புமிகு ஆக்கி அழகு பார்த்தது .போராட்ட பாதிப்புகள்  முற்றிலும்  களையப்பட்டது .
அன்றைய தோழர்களின் இரத்தம் 
இன்றைய ஊழியர்களின் வியர்வையை துடைத்தது 
 போராட்ட வாழ்த்துக்களுடன் -------------------ஜேக்கப்ராஜ் ------------------
-----------------------------------------------------------------------------------------------------------








               

0 comments:

Post a Comment