...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 18, 2016

அன்பார்ந்த தோழர்களே !
       உரக்க சொல்லுவோம் ஊழியர்களுக்கு 
         இந்திய தொழிற்சங்க அமைப்புகள் குறிப்பாக அரசியல் கட்சிகளை மையமாக வைத்து செயல்படும் தொழிற்சங்கங்கள் வருகிற செப்டம்பர் 2 ம் தேதி ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன .அவைகள் 12 அம்ச கோரிக்கைகளை வடித்தெடுத்து கொடுத்திருக்கிறார்கள் .இது ஒன்றும் புதிதல்ல --1991 களில் புதிய பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்த தொடங்கிய காலம் முதல் ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற பொது வேலைநிறுத்தம் நடைபெறுவது வ(ப )ழக்கமாகிவிட்டது .இதுகுறித்து 1992 களில் வந்த விமர்சனங்கள் கடுமையாக இருந்தன .இருந்தாலும் NFPE சம்மேளன கவுன்சலில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அஞ்சல் பகுதியும் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்க தொடங்கிவிட்டன .சிலர் சொல்வதைப்போல இது ஊதியக்குழுவில் மாற்றம் வேண்டி நடைபெறும் போராட்டம் அல்ல --GDS ஊழியர்களின் கமிட்டி மீது அழுத்தம் கொடுக்க    நடைபெறும் போராட்டம் அல்ல --காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள்தான் இன்றைய கோரிக்கைகள் என்பதனை போராடும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும் .ஆசை வார்த்தை கூறி உங்களை போராட்டத்திற்கு அழைக்கவில்லை --எதார்த்தத்தை சொல்லுகிறோம் .-வெகுஜன இயக்கங்களில் நாம் பங்கேற்பது நாமும் ஒருவகையில் தொழிலாளிதான் என்பதனை பறைசாற்றுவதற்கு சமம் .
இதோ கோரிக்கை பட்டியல் ( பிரதான கோரிக்கைகள் ) 
 உண்மையை உரக்க சொல்லுவோம் ஊழியர்களுக்கு! 
1.ஊக வணிகத்தை தடைசெய் !
2.காண்ட்ராக்ட் முறையில் நடத்தும் வேலைவாய்ப்பை நிறுத்துக !
3.தண்டனைக்குரிய /கடுமையான தொழிலாளர் சட்டங்களை திணிகாதே !
4.பொதுவான சமூகப்பாதுகாப்பு திட்டத்தை நடைமுறை படுத்துவது !
5.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை 18000 ஆக மாற்று !
6.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச பென்ஷன் 3000 என்பதனை உறுதிப்படுத்து !
7.பொதுத்துறை நிறுவனங்களின்  பங்குகளை விற்காதே !
8.காண்ட்ராக்ட் அடிப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை நிரந்தர படுத்து !
9.போனஸ் பெறுவதற்கான உச்சவரம்பை நீக்குக !
10.தொழிலாளர் சட்டங்களை பாதுகாத்திடு !
11.ரயில்வே /பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீட்டை புகுத்தாதே !
                   வெல்லட்டும் !நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் வெல்லட்டும் !
                                            
                                       நெல்லை கோட்ட செய்திகள் 
கடந்த 04-08.2016 அன்று நடைபெற்ற MACP கான DPC முடிவுகள் மண்டல அலுவலக ஓப்புதலோடு 17.08.2016 அன்று வந்துவிட்டது .இன்று  MACP பதவி உயர்வுக்கான  உத்தரவுகள் வெளிவரும் .
                  வாழ்த்துக்களுடன் 
                                          SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல்மூன்று









0 comments:

Post a Comment