அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
நேற்று (17.12.2020 ) அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் கொண்டுசெல்லப்பட்டு அனைத்து பிரச்சினைகளிலும் நமது கண்காணிப்பாளர் அவர்கள் உடனடி தீர்விற்கும் தன்னால் தீர்க்கமுடியாத தனது அதிகாரத்திற்கு உட்படாத கோரிக்கைகளுக்கு மண்டல நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவும் உறுதியளித்தார்கள்
1.வருகிற ஜனவரி முதல் மாதாந்திர பேட்டி நமது வேண்டுகோள்களின் படி அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களுக்கு கூட்டாக பேட்டி நடைபெறும் என்றும் கொரானா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு சங்கத்திற்கு இருவர் என்பதை மாற்றி மீண்டும் மூன்று நிர்வாகிகள் அனுமதிக்கப்படுவார்கள்
2.நமது கோட்டத்தில் மட்டும் DSM தோழர்களுக்கு புதிதாக அமுல்படுத்தப்பட்ட சில நடைமுறைகளை கைவிடவேண்டும் என்று கேட்டபோது நமது SSP அவர்கள் அதன் நியாயத்தை ஏற்றுக்கொண்டு விசிட் ரிப்போர்ட் முறையை ரத்து செய்திட சம்மதித்தார்கள் .இரவு பகல் -பாராமல் பணியாற்றிடும் DSM ஊழியர்களின் அளப்பரியற்ற சேவைக்கு நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியது என்றும் வெகுவாக DSM ஊழியர்களின் அர்ப்பணிப்பை குறித்து தெரிவித்தார்கள்
3.வள்ளியூர் மற்றும் திசையன்விளை பகுதிகளில் கூடுதலாக ஒரு எழுத்தர் நியமிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது
4.சமூகரெங்கபுரத்தில் தோழர் நியூட்டன் அவர்களுக்கு பிடிக்கப்பட்ட HRA குறித்து பாளை கணக்கு பிரிவிற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதையும் விரைவில் இதற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்கள் .
5.MMS கோரிக்கைகளில் ஒன்றான மெயில் பியூன் கொடுப்பது குறித்து SSRM அவர்களிடம் பேசுவது என்றும் --GBRS கோளாறை சரிசெய்யாமல் நமது ஓட்டுனர்களுக்கு தேவையில்லாமல் மனஉளைச்சல் தரும் பிரச்சினை --ஓட்டுனர்களுக்கு பயணப்படி கணக்கிடுவதில் ஸ்டார்டிங் பாயிண்ட் என்பது MMS பாளையில் இருந்துதான் இருக்கவேண்டுமே என்றும் RMS அலுவலகம் அல்ல என்றும் பழைய DA பில்களில் உள்ள விஷயங்களை குறித்தும் பேசப்பட்டது
6.MACP .LSG ACCOUNTATANT POSTING ,RULE 38 இடமாறுதல்கள் LRPA பட்டியல் இவைகள் அணைத்திற்கும் நடைபெற்ற கமிட்டியின் முடிவுகள் ஓரிருநாளில் வெளியிடப்படும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
.
.
0 comments:
Post a Comment