...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 26, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                    நமது மாநில சங்கத்தின் வழிகாட்டுதலின் படி நமது முன்னாள் அஞ்சல் மூன்றின் பொதுச்செயலாளர் அண்ணன் KVS அவர்களின் முயற்சியால் GDS TO போஸ்ட்மேன் தேர்விற்கான ஆன்லைன் வகுப்புகள் மாநில அளவில் வருகிற ஞாயிறு முதல் நடைபெறவிருக்கிறது .அதில் கலந்துகொள்ளவிரும்புகிறவர்கள் 

தங்களது பெயர் -------------------  பதவி -----------------------------தொலைபேசி ---------------வயது ---------------------கல்வித்தகுதி ----------------போன்ற தகவல்களுடன் எனக்கு (ஜேக்கப்  ராஜ் )  94421-23416 என்ற எண்ணிற்கு அனுப்பிவைக்கவும் .

.இதுவரை நமது கோட்டத்தில் சுப்புலக்ஷ்மி (உவரி ) சிவசங்கரி (கோபாலசமுத்திரம் ) முத்துச்செல்வி (அம்பை அங்காடி ) ரவி (குன்னத்தூர்) மைதீனிபீவி (தெற்குப்பட்டி ) சீதா (புலியுர் குறிச்சி )காந்திமதி (முன்னிறர் பள்ளம் )அம்பிகா (கட்டா ரங்குளம் )ஜெயராணி (உக்கிரன்கோட்டை ( செல்வ லக்ஷ்மணன் (சுத்தமல்லி ) ஆகியோர் இணைந்துள்ளனர் .இது மாநிலந்தழுவிய வகுப்பு என்பதால் விரைந்து ஆர்வமுள்ள GDS ஊழியர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் ..

*நமது கோட்ட அலுவலகத்தில் இருந்து செயல்படும் வாட்ஸாப்ப் குரூப்பில் ஆதார் பணிகளை செய்திடவும் IPPB மற்றும் AEPS பரிவர்த்தனை செய்திடவும்  ஒரு பதிவை போட்டுவிட்டு  கடைசியாக PMS/SPMS  WILCOME TO DO/EXPLAIN  IN  PERSON  TO SSP  ;IF THE MINIMUM IS NOT DONE  என்ற எச்சரிக்கையோடு அனுப்பப்பட்ட செய்திகள் குறித்து நமது தோழர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்கள் .ஊழியர்களை விரட்டி மிரட்டி இலக்கினை எட்டிட நினைப்பது தேன்கூட்டில் கைவைப்பதற்கு சமம் .நமது கோட்டத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு .கடந்த 2015 யில் இருந்து பார்த்தால் நமது கோட்டத்தில் எந்த உருட்டல் மிரட்டல் இல்லாமலே நாம் நமது இலக்கை அடைந்திருக்கிறோம் .வணிகத்தை  பொறுத்தவரை நாம் சிறப்பாக செய்துகொண்டிருக்கும் வேளை யில் இதுபோன்ற அதிகார மிரட்டல்கள் தேவைதானா ? SPM ஊழியர்களை நேரில் வந்து கோட்ட அலுவலகத்திற்கு விளக்கம் கொடுக்கவேண்டும் என்பதல்லெல்லாம் ஏற்புடையது தானா ? சிந்திப்போம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment