...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 31, 2013

                                தென் மண்டல தொழிற்சங்க பயிற்சி  முகாம் 

நமது  மாநில சங்கத்தின்  சார்பாக  தென் மண்டல அளவிலான 

தொழிற்சங்க பயிற்சி  முகாம்  ( STUDY CAMP ) 09.8.2013 அன்று 

மதுரையில்  காலை 10 மணி முதல் மாலை  5 மணி வரை நடைபெறுகிறது .

முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் கோட்ட செயலரிடம் 

தங்கள் பெயர்களை பதிவு செய்யுமாறு  கேட்டு கொள்கிறோம் .

கலந்து கொள்ளும் தோழர்களுக்கு  சார்பாளர் கட்டணம்  கோட்ட சங்கம் 

சார்பாக  செலுத்தப்படும் .ஆகவே  இந்த  அரிய  வாய்ப்பை  பயன்படுத்தி 

கொள்ளுங்கள் 
------------------------------------------------------------------------------------------------------------------------
தென் மண்டல கோட்ட /கிளை செயலர்கள்  கூட்டம் 
 வருகிற  10.8.2013 அன்று  தென் மண்டல செயலர்கள்  
கூட்டம்  மதுரையில்  நடைபெறுகிறது .மண்டல அளவிலான 
பிரட்சினைகள்  இருந்தால்  கோட்ட சங்கத்திற்கு  உடனே 
தெரியபடுத்தவும் 
                                                            வாழ்த்துக்களுடன் 
                                                    SK .ஜேக்கப்ராஜ் 

. தோழியர்  R .கீதா    அவர்கள்  இன்று  பணிநிறைவு  பெறுகிறார்கள்   
அவர்களுக்கு  கோட்ட  சங்கத்தின்  சார்பாக வாழ்த்துக்கள் 
முன்னதாக  30.07.2013 அன்று  அவர்கள்  நமது  ஊ ழியர்களுக்கு  இனிய 
விருந்து  கொடுத்தார்கள் .அதன்  தொகுப்பு  இதோ! 
அவர்களுக்கு  கோட்ட  சங்கத்தின்  சார்பாக வாழ்த்துக்கள் 






SOUTHERN REGION TRADE UNION STUDY CAMP AND DIVL/BR.SECS MEETING AT MADURAI

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !

நமது குடந்தை மாநில மாநாட்டில் அறிவித்த படி, மாநிலச் சங்கம் பொறுப்பேற்றவுடன் இரண்டு மாதங்களுக்குள்  மண்டல ரீதியிலான கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தை கூட்டி , தேங்கிக் கிடக்கும் ஊழியர் பிரச்சினைகளை  ஒருங்கிணைத்து, அந்தந்த மண்டல அதிகாரிகளிடமும், மாநில உயர் அதிகாரியிடமும்  MEMORANDUM அளித்து , ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் தீர்வினை வேண்டியும் , அப்படி தீர்க்கப்படவில்லை எனில் மண்டல ரீதியில்  தொடர் போராட்டங்களை  நடத்திடுவதாகவும்  மாநிலச் சங்கம் முடிவெடுத்துள்ளது. 

அதன் படி , முதலில் மிக அதிகமாக பிரச்சினைகள் உள்ள தென் மண்டலத்தில் , எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அதன் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தினை கூட்டுவது என்று முடிவினை எடுத்தோம். அந்த கூட்டத்தினை ஏற்று நடத்துவது என்று மதுரை கோட்ட அஞ்சல் மூன்று சங்கம்  மனம் உவந்து முன்வந்துள்ளது  என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

மேலும் , புதிதாக  இலாக்காவில் சேர்ந்துள்ள இளைஞர்களுக்கு  தொழிற் சங்க வரலாறு மற்றும் இலாக்கா  நடத்தை விதிகள்,  ஊழியர் பாதுகாப்பு விதிகள், தகவல் அறியும் உரிமை சட்டம் , CONTRIBUTORY  NEGLIGENCE  குறித்த விதிகள்  , CCS  CCA  RULES 1965 உள்ளிட்ட விதிகளில் ஊழியர்களின் பாது காப்பு அம்சங்கள் குறித்து தென் மண்டல அளவில்  ஒரு  தொழிற் சங்க பயிற்சி வகுப்பு  நடத்திடவும் முடிவெடுத்தோம். அதனையும்  மதுரை கோட்ட அஞ்சல் மூன்று சங்கமே எடுத்து நடத்திட  விழைந்துள்ளது  என்பது பாராட்டத் தக்கது. 

இந்த நிகழ்ச்சி  இளைஞர்களுக்கு மட்டுமல்ல , நம் சங்கத்தின் முன்னோடி களுக்கும் தான்.  அதிகாரிகளின்  விதி மீறிய,  தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் இருந்து ஊழியர்களை பாது காக்க இந்த வகுப்பு  ஒரு கேடயமாக அமைந்திடும் என்பது திண்ணம். 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09 ம்  தேதி  விடுமுறை தினத்தன்று   இந்த தொழிற் சங்க பயிற்சி வகுப்பும்  ஆகஸ்ட் மாதம் 10 ம்  தேதி கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டமும்  நடைபெற முடிவெடுக்கப் பட்டுள்ளது.  

எனவே  தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் இதனையே முன்னறிவிப்பாக எடுத்துக் கொண்டு  பயிற்சி வகுப்புக்கு  தங்கள் பகுதியில் இருந்து பெருமளவில் இளைஞர்களையும்  சங்க முன்னோடிகளையும் கலந்து கொண்டிட  ஆவன செய்திட வேண்டுகிறோம்.  இரண்டு நாட்கள் விடுமுறை வருகிறது என்று  வெளியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் முன் கூட்டியே கேட்டுக் கொள்கிறோம்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கிற தோழிய/ தோழர்களுக்கு  குறைந்த பட்ச DELEGATE  கட்டணம் வசூலிக்கப் படும். அந்தப் பணத்தில்  காலை சிற்றுண்டி , 11 மணியளவில் தேநீர், மதிய உணவு, மாலை தேநீர், மற்றும்  வகுப்பு முடிந்தவுடன் ஊருக்கு செல்வதற்கு முன்னர் எளிய சிற்றுண்டி வழங்கப் படும். வகுப்புகளில் குறிப்பெடுக்க SCRIBBLING PAD , பேனா  உள்ளிட்டவை அளிக்கப் படும் . 

மறுநாள் நடைபெறும் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில் , தென் மண்டலத்தில் உள்ள அனைத்து  அஞ்சல் மூன்று கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறுதல் இன்றிக் கலந்து கொண்டிட வேண்டுகிறோம் . அவர்கள்  வரும்போது , உடனடியாக முழு விபரத்துடன் MEMORANDAM  தயாரித்து  மண்டல / மாநில அதிகாரிகளுக்கு அளிக்கும் வகையில் அவர்களது  கோட்ட மட்டத்தில்  மாதாந்திரப் பேட்டியில்  எடுக்கப் பட்டும் தீர்க்கப்படாத ஊழியர்கள் பிரச்சினைகளையும், பொதுப் பிரச்சினை களையும்  விரிவாக  அவர்களது சங்க லெட்டர்  PAD  இல் TYPE  செய்து எடுத்து வருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.  

தயவு செய்து வாய்மொழியாக மட்டுமே  சொல்லிச் செல்லலாம் என்றுஎண்ண  வேண்டாம் என்றும் அன்புடன் வேண்டுகிறோம்.  அது முழுமையாக பிரச்சினைகளை மாநிலச் செயலருக்கு  அளிக்காது என்பதனையும் புரிந்துகொள்ள வேண்டுகிறோம். 

நிகழ்ச்சிகள் நடைபெறும்  இடம், நேரம் ,  எடுக்கப் படும் வகுப்புகள் , வகுப்புகளை எடுப்போர் குறித்த விபரங்கள் ஓரிரு நாட்களில்   சுற்றறிக்கையாக வெளியிடப்படும்.  இதனைப் பார்க்கும் தோழர்கள் , இந்த விபரத்தினை தயவு செய்து  தென் மண்டலத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் உடன் தெரிவிக்க வேண்டுகிறோம். 

குறிப்பு : 
தொழிற் சங்க பயிற்சி வகுப்புகளுக்கு  கண்டிப்பாக  தோழியர்களையும் அழைத்து வரவும் . இது ஒரு நல்ல வாய்ப்பு . நிச்சயம்  உபயோகப் படுத்திக்  கொள்ளவும். 

தோழமை வாழ்த்துக்களுடன் 
உங்கள் மாநிலச் செயலர் .

1 comment:

Monday, July 29, 2013


INSPECTORS POSTS EXAM  2013 - VACANCY POSITION OF TN CIRCLE

Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai videMemo. No. REP/9-2/13 dated 25.07.2013 has declared the following vacancies for Inspector Posts Examination 2013 to be held on 07.09.2013and 08.09.2013:
 

OC
SC
ST
Total
12
11
Nil
23



                                                                           S.K.JACOBRAJ
                                                                           DIVISIONAL SECRETARY

நமது  அஞ்சல்  குடும்பத்தில்  பல குழந்தைகள்  PA நேரடி  தேர்வில் 


இரண்டாம்  நிலைக்கு  தேர்வு  செய்யப்பட்டுள்ளனர் .அவர்களுக்கு 

COMPUTER  தேர்வு  குறித்த  தகவல்கள்  இதோ !

Details / Pattern of Postal / Sorting Assistant (PA/SA) Phase 2 Exam 2013(Computer / Typing Test)

Written By Admin on 28 July 2013 | Sunday, July 28, 2013

Details / Pattern of Postal / Sorting Assistant (PA/SA) Phase 2 Exam 2013(Computer / Typing Test)


Friends...now as Postal Department started publishing the List of Shortlisted candidates for Paper-II based on the performance in Paper-I(Aptitude Test), its time now to understand the details of Paper-II (Computer Typing/Data Entry Test) & Practice it.

Results of Andhra Pradesh, Gujarat, Karnataka, Maharashtra, Tamil Nadu, Assam, Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, North East, Odisha, West Bengal and Kerala Postal Circles already stands published in the official website.

Results of Delhi, Jammu & Kashmir, Panjab, Uttar Pradesh, Uttrakhand, Bihar, Haryana, Himanchal Pradesh and Rajasthan Circles are expected soon.



Pattern of Paper-II(Computer/ Typing Test):

The Typing Test shall be for a duration of 30 minutes (15 minutes each for Typewriting and data entry) consisting of one passage of 450 words in English or 375 words in Hindi to be typed with a minimum speed of 30/25 words per minute respectively & Data entry of some figures and letters each carrying equal marks on Computers.



The typing test and test of data entry operations will be conducted on Computer key board but not on type writer.


Note: The final merit shall be prepared on the basis of the aggregate marks obtained by the Applicants in the Aptitude Test (Paper I) only subject to their qualifying in Computer/Typing test ( Paper II). ie, there will be no marks for Typing/Data entry test. You have to just qualify the minimum criteria in Paper-2 and final merit list shall be prepared on the basis of marks of Paper-I only.


In our next post we will be providing you the Typing Software and Data Entry Software for practice. 

If you have any queries comment below!!!!!

Information Compiled by: http://currentaffairs4examz.blogspot.in/

Sunday, July 28, 2013



நமது இந்த மாத Monthly Meeting Subjects... 

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP “C”
TIRUNELVELI DIVISONAL BRANCH
TIRUNELVELI – 627002

NO/P3/MM/Dated at Tirunelveli 627002 the 27-07-2013. 

To
The Supdt., of Post Offices,
Tirunelveli -627002.

Sir,
          Sub: Subjects for monthly meeting–reg.

     The following subjects may please be included in the monthly meeting.

1.     The offices which are receiving more than 400 eMos may please be supplied with laser printers, if it is not possible hired printers may please be arranged for the specific period.
2.      Request to early passing of TA bills.
3.      Request to provide one wash basin to Tirunelveli Town SO.
4.      Request for shifting of Mundradaippu SO to a better one.
5.      Request to sanction treasury allowance to Treasurer, Vannarapettai SO from the year Sep-2011 onwards.
6.      Request for volunteers called for the post of ATR, Palayankottai H.O., ( the post is going to vacant from 06-08-2013).
7.     Request to make alternate mail arrangement for Gandhi Nagar S.O. and M.S. University S.O.
8.     Request to consider long pending transfer cases.
9.     Request to grant treasury allowance C/O treasurer Kadayam SO.
10.                        Request to depute one technician to change over the oil in the Generator @  V.K. Puram SO.
11.                        Request to supply counter chairs to Kallidaikurichi SO.
12.                        Request to change server in Viravanallur SO.

The following officials will attend the meeting.

1.     S.K. Jacobraj Divisional Secretary & P.A., Tirunelveli Town.
2.     A. Athimoolam Divisional President & SPM Suttammally SO
3.     N.Velmurugan Br. Secretary & P.A. Ambasamudram HO.


Thanking you

                                                                                       Yours faithfully,


                                                                                                 (S.K.JACOB RAJ)
DIVISIONAL SECRETARY

AIPEU GROUP-C TIRUNELVELI

Saturday, July 27, 2013

CIRCULAR



TREATMENT ON EMERGENCY CAN BE MADE IN NON EMPHANELLED PRIVATE HOSPITAL


C. G. Employees and their dependents can avail treatment in a non empanelled Private hospitals in emergency conditions and get reimbursement

(G.I MH OM No. F. No. S. 14025/14/2012-MS, dated 11.06.2013)


Revision of rates for reimbursement of medical expenses incurred in emergency conditions under CS (MA) Rules, 1944

The undersigned is directed to state that the issue of revision of rates for reimbursement of medical expenses incurred on availing medical treatment in emergency conditions under CS (MA) Rules, 1944, when treatment is taken in a non-empanelled private hospital, has been under consideration of the Government for some time.

2. It has now been decided that, reimbursement of medical expenses incurred by a Central Government employee covered under CS(MA) Rules, 1944 on availing medical treatment for himself and his dependent family members in emergency conditions, would be allowed as per the prevailing non –NABH CGHS rates as applicable to a CGHS covered city and non-NABH rates applicable to the nearest CGHS covered city in case of non-CGHS city, as the case may be, or the actuals, whichever is less.

3. For the medical treatment in such cases where package rates are prescribed under CGHS, the non-NABH rates of the CGHS covered city and non-NABH rates of the nearest CGHS city (in case of non-CGHS covered city) or the actuals, whichever is less, will be applicable.

4. This OM supersedes all earlier orders issued from time to time under CS (MA) Rules, 1944 on this subject for allowing reimbursement of medical expenses in emergency conditions when treatment is taken in a non-empanelled private hospital.

5. This OM will come into effect from the date of issue.

6. This issue with the concurrence of the Integrated Finance Division vide their Dy. No. C-282, dated 22.05.2013.
Share this article :

DVL

                                 கோட்ட சங்க செய்திகள்


நமது  கோரிக்கையை  ஏற்று  கங்கைகொண்டன் மற்றும் சங்கர்நகர்

அலுவலகங்களுக்கு  மெயில் வரும் நேரத்தை மாற்றி கொடுத்த

கோட்ட நிர்வாகத்திற்கு  நன்றி. புதிய மெயில்  

29.07.2013  முதல் அமலுக்கு  வருகிறது. மேலும் சங்கர்நகர் 

 சேமிப்பு பிரிவு அலவன்ஸ்  ரூபாய் 300 ஆக மாற்றிகொடுத்த

கோட்ட   நிர்வாகத்திற்கு  மேலும்  நன்றி.
------------------------------------------------------------------------------

நமது  உறுப்பினரின்  படைப்புகளை  பாரீர்

  தோழர் G.செல்வராஜன்  PA VALLIOOR அவர்களின்     வெற்றிகனியமுது

எனும்  கவிதை தொகுப்பு வெளிவந்துஉள்ளது.இது நமது

தோழரின்  இரண்டாம் படைப்பு. தொடரட்டும்  அவரது இலக்கிய பயணம்.         

MM

                                மாதாந்திர  பேட்டி 

அன்பு தோழர்களே ! 

                       இந்த மாத  மாதாந்திர பேட்டி 30.07.2013 அன்று  காலை 11 மணிக்கு

நடைபெறுகிறது. SUBJECTS ஏதும் இருந்தால் கோட்ட சங்கத்திற்கு 

உடனே தெரிய படுத்தவும்.

Friday, July 26, 2013

new

               நெல்லைகோட்டத்தில்     ஜூலை 2013முதல் நம் அழைப்பை  ஏற்று

       புதிதாக NFPE இல்     இணையும்    27    தோழர்களை/  தோழியர்களை  நாம்

             வாழ்த்தி  வரவேற்கிறோம்      

அஞ்சல் மூன்று  புதிய  உறுப்பினர்கள்

       1..S .வள்ளிநாயகம்    2..    P.சக்திவேல்
3C.சந்துரு       4..A .அமலாரீனா    5.. M.ராம்குமார்     6..பிரீதாசலோமி

7...ரத்தின்கீர்த்திகா     8..R .சுதாஹரி 9.N முத்துகுமார சாமி  .   10.V.கோபாலகிருஷ்ணன்  11..C .விக்னேஷ்  

12..E.ரம்யா         13. C.சர்மிளா
-------------------------------------------------------------------------------
அஞ்சல்  நான்கு புதிய உறுப்பினர்கள்

1.S.அழகு      2.A.ராஜகோபாலன்  3.A.வெங்கடசுப்ரமணியன்

4.G.ஜான்சன் தம்பிதுரை       5.P.பெருமாள்   6.A.சமுத்திரம்   

7.A.பெருமாள்    8.K.தங்கலட்சுமி  9.V.வெங்கடநாராயணன்

10.R.முத்துசாமி   11.V.தங்கராஜ்     12.A.முருகேசன்  1.3. S.ஆறுமுகம்.

14.P.மூக்கையா

புதிய  உறுப்பினர்கள்  சேர்க்கையில்  ஒத்துழைப்பு  கொடுத்த  

அனைத்து  நண்பர்களுக்கும்  நன்றி .  நன்றி.

                                               வாழ்த்துக்களுடன் 

                                                                       SK.ஜேக்கப்ராஜ்

                       

it

EXEMPTION FROM FILING ITR (INCOME TAX RETURN) NOT EXTENDED THIS ASSESSMENT YEAR 2013-14 – CBDT

       Income Tax Department issues press release to clarify that unlike previous year Salaried Employees with Total Income up to Rs.5 lakhs too have to file ITR (Income Tax Return) this year viz., Assessment year 2013-14.

       The full text of Press Release issued by CBDT (Cenral Board of Direct Tax) is as follows:

       The CBDT has, vide notification dated 1-05-2013, made E-filing of Return compulsory for Assessment Year 2013-14 for persons having total assessable income exceeding Five lakh rupees.

       The CBDT vide its earlier notifications had exempted salaried employees having total income up to Rs. 5 lakhs including income from other sources up to Rs. 10,000/- from the requirement of filing return of income for assessment year 2011-12 and 2012-13 respectively. The exemption was available only for the assessment year 2011-12 and 2012-13. The exemption was giving considering ‘paper filing of returns’ and their ‘processing through manual entry’ on system.

          However, this year the facility for online filing of returns has been made user-friendly with the advantage of pre-filled return forms. These E-filed forms also get electronically processed at the central processing centre in a speedy manner. Hence, the exemption provided during the last two years is not being extended for assessment year 2013-14. Taxpayers are encouraged to file their returns electronically. E-filing is an easy, fast and secure method of filing of income tax return. Moreover, Digital signature is not mandatory for these taxpayers and they can transmit the data in the return electronically by downloading ITRs, or by online filing and thereafter submit the verification of the return in From ITR-V acknowledgement after signature to Central Processing Centre.

        The processing for E-filed returns is faster. From 25th July to 31st July 2013 (Except 27th and 28th July being holidays), Special Return Receipt Counters are opened in IT Offices  (FOR SALARIED TAX PAYERS) 

Thursday, July 25, 2013

CON

 ஏழாவது ஊதிய குழு வேண்டி  டிசம்பர் 2013 இல் மத்திய அரசு ஊழியர்கள்

மகா சம்மேளனம்  சார்பில் வேலை நிறுத்தம்

STRIKE BALLOT DECIDED BY CONFEDERATION

CONFEDERATION DECIDES TO TAKE STRIKE BALLOT FOR INDEFINITE STRIKE

Dear Comrades,

The first meeting of the National Secretariat of the Confederation was held at New Delhi on 22.07.2013. Com. K. K. N. Kutty, National President, presided. 

Com. S. K. Vyas, Advisor, in his opening remarks, explained the background of events which led to the formation of a Joint Council of Action of Railway (AIRF) Defence (AIDEF) and Confederation and also pointed out its weaknesses and limitations. He stressed the need to further strengthen the unity. He opined that on the 15 point charter of demands, Confederation must conduct its own independent campaign and agitational programmes. If the Railway and defence Federations come forward for serious agitational programmes including indefinite strike we must join such campaign and strike action.

Com. K. Raghavendran, Ex-Working President, Confederation also addressed the meeting. Thereafter discussion on all agenda items took place.

The following are the main highlights and decision of the National Secretariat meeting

1.      Review of 24th National Conference held at Kolkata from 4th to 6th May 2013

2.      15 Pointes charter of demands and future course of action.

The meeting decided to organize independent campaign and agitational programmes culminating in indefinite strike. The specific decisions were:

(i) To organize state level joint strike conventions of C-o-C with the participation of all affiliated unions/Associations/Federations during the month of August 2013. Where ever the C-O-C functioning is not satisfactory or has no participation of district units, efforts must be taken to revamp the committee.
(ii)  To organize mass Relay dharna at different places in all important stations during the first week of September 2013 (from 02.09.2013 to 07.09.2013).
(iii)To conduct nationwide strike ballot during the last week of September 2013 (On 25, 26 and 27th September)Model of the ballot will be sent later.
(iv)To convene the Central Working Committee/Central Executive committee meetings of all affiliated unions/Associations/Federations before the 1st week of October 2013. All India Office Bearers of the Confederation may be invited to attend the meeting.

3.      Joint programme of AIRF, AIDEF and Confederation:
It was decided to make all out effort to further strengthen the Joint council of action (JCA) and also to launch serious agitational programmes culminating in indefinite strike before December 2013.

4.      Formation of State Committees and District Committees
It was decided to reorganize the COCs which are defunct or not functioning satisfactorily. This is to be done when the state level strike campaign conventions are organized. Participation of representatives of all affiliates should be ensured in the conventions.

5.      Conducting of All India Mahila Convention of the Confederation.
It was decided to conduct two day’s All India Mahila Convention at New Delhi in the 3rd week of October 2013. C-O-C Delhi has agreed to host the Mahila Convention. Delegate fee shall be Rs.600/- per delegate. Participation of maximum number of Lady comrades from all states/affiliates should be ensured.

6.      Organising Trade Union Education Camp:
It was decided to hold the Trade Union Education Camp at Mumbai in November/December 2013. Number of participants shall be 150 (maximum). Delegate fee Rs. 600/- per delegate Postal, ITEF, Audit & Accounts and Atomic Energy delegates accommodation shall be arranged by their respective Federations. C-O-C Mumbai shall function as the Reception committee. Date and Venue will be intimated later.

7.      Publication of journal
Decided to publish a monthly journal. Name of the journal shall be “CONFEDERATION NEWS” (subject to availability at RNI) Editorial Board shall consist of Com. S. K. Vyas (Advisor) Com. K. K. N. Kutty (President) Com. M. S. Raja (Working President) Com. M .Krishnan (Secretary General) com. K. P. Rajagopal (Secretary) and Com. Vrigu Bhattacharjee (Financial Secretary).

8.      Financial Review:
Financial Secretary shall present the actual picture in the next meeting. Meanwhile letters should be sent to all affiliated unions to remit the arrears of quota immediately.

9.  National Convention of Central Trade Unions on 6th August 2013.
The available National Secretariat members/leaders at Delhi will attend the convention on 6th.

President, Com. K. K. N. Kutty in his concluding remarks, briefed decisions taken in the meeting. The meeting ended at 5 PM.

IMPLEMENT THE DECISIONS

All office Bearers, State Committees, other C-O-Cs and Affiliated Unions/ Associations/ Federations are requested to implement the above mentioned decisions of the National Secretariat meeting, WITHOUT FAIL.

This may be treated as most urgent/important,

Fraternally yours,
                                                                                               
(K. K. N. Kutty)                                                                            (M. Krishnan)
President                                                                                Secretary General

UR

நெல்லை கோட்ட 

அஞ்சல்மூன்று,அஞ்சல்நான்கு,மற்றும் GDS

தோழர்களே!  உத்தர்கான்ட் நிவாரண நிதிக்கு இந்த 


மாதஊதியத்தில்  உதவிடுங்கள்.

பாசமிகு தோழர்களே! தோழியர்களே!!
நமது உத்திரகான்ட் மாநில மக்கள் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கால் தங்களின் உடைமை ,வீடு இழந்ததுடன் தங்கள் சொந்த பந்தங்களையும் இழந்து தவித்து வருவது தெரிந்த ஒன்று. அம்மாநில மக்களுக்கு உதவ கருணை மிகுந்த நமது உறுப்பினர்கள் அனைவரும் ஜூலை மாத சம்பளத்தில் தாரளமாக நன்கொடை வழங்க தங்கள்தலைமை  அஞ்சலக அதிகாரிக்கு தங்கள்  ஜூலை மாத  சம்பளத்தில் இருந்து  பிடித்தம் செய்து கொள்ள அனுமதி கொடுத்து கடிதம் அனுப்பவும்.  மாதிரி கடிதம் தங்கள் அலுவலக அஞ்சல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
                                                                 வாழ்த்துக்களுடன்

                                                                   SK.ஜேக்கப்ராஜ்


                                                                            

Wednesday, July 24, 2013

FLY

Payment of Arrears of family pension

In case of death of a pensioner, all money payable to the pensioner on account of pension are payable to the nominee of the deceased pensioner. In the absence of any valid nomination made by the pensioner, the arrears of his/her pension are paid to the legal heir. However, dependents of some pensioners expressed difficulties in obtaining the legal heir-ship certificates and represented that the necessity of production of legal heir-ship certificates may be waived where the amount of arrears payable is small. 

In such cases a provision had been made in 1985 for Payment of Lifetime Arrears of Pension on the basis of any documentary proof regarding the relationship and heir-ship of the claimant if the gross amount of arrears does not exceed Rs.25,000. If the gross amount did not exceed Rs.5,000 and case represented no peculiar features, the Accounts Officer was authorised to make the payment on his own authority. 

The Government has further looked into the matter and decided to increase the limits of Rs.5000 and Rs.25000 to Rs.50,000 and Rs.2,50,000 respectively. 

At present in the event of death of a family pensioner, the right to receive any arrears of family pension automatically passes on to the eligible member of the family next in line. Where there is no member in the family who is eligible to receive family pension after the death of the family pensioner, the payment of arrears of family pension is made on the basis of succession certificate. Now, it has also been decided that the payment of arrears of family pension up to Rs.2,50,000 may be made where no member of family is eligible to receive family pension. 

Detailed instructions are available at Department of Pension & Pensioners’ Welfare’s website www.persmin.nic.in. 
So

pa

Direct Recruitment PA/SA Examination - LATEST UPDATE ( as on 23-JUL-2013)

Written By Admin on 23 July 2013 | Tuesday, July 23, 2013


Direct Recruitment PA/SA Examination - LATEST UPDATE

UPDATE as on 23-JUL-2013

I . The List of shortlisted candidates for the Computer Typing / Data Entry (PAPER II) for Kerala Postal Circles is added in the given link below.

II . PAPER II for Andhra Pradesh, Gujrat, Karnataka, Maharashtra, Tamil Nadu, and Kerala Postal Circles is scheduled on 10th and 11th August 2013.The Admit cards for the same have been dispatched. If not received by 31 July 2013 then it can be downloaded from this website from August 01, 2013



Source : http://www.eonlineapply.com/dop/

MINUS

MINUS BALANCE குறித்து பிரட்சினைகள் வந்தால் அதை எதிர்கொள்வது
குறித்து மாநில செயலரின் கருத்துக்கள்

MINUS BALANCE RECOVERY ORDERS AND A DRAFT REPLY TO COUNTER THE CHARGES

அன்புத் தோழர்களே ! வணக்கம் ! நம்முடைய இலாக்காவில்  கணினி மயமாக்கப்படும் போது அவசர கதியாக சேமிப்பு  வங்கிப் பிரிவில் DATA ENTRY செய்ததை  எவரும் மறந்துவிட முடியாது . ஒவ்வொரு தனி நபரின் கணக்குகளும்  மிகச் சரியாக  கணினியில்  மாற்றம் செய்திடவேண்டும் என்பதை மனதில் கொள்ளாமல் , இலாக்காவில் சொன்னார்கள் என்று மேல் அதிகாரிகளும் , மேல் அதிகாரி சொன்னார் என்று கீழ் அதிகாரிகளும் , " வெள்ளைக் காக்கை பறக்கிறது என்றால் .. ஆமாம்.. ஆமாம் நான் கூட பார்த்தேன் .. நாலு காக்கை பறப்பதை "   என்பது போல ,  அதற்கான துறைசார்ந்த அறிவைச் செலுத்தாமல் கீழ் மட்ட ஊழியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி  சேமிப்பு வங்கிக் கணக்குகளை குப்பைக் காடாக்கிய கொடுமை  நம் துறை தவிர வேறு எந்த துறையிலும் நடந்திருக்க சாத்தியக் கூறு இல்லை.  

கடந்த 10 ஆண்டுகளாக இவை சரி செய்யவே முடியவில்லை .  விளைவு , BO,  SO, SO SB , SBCO , ICO(SB), MAIL OVERSEER, IPO, ASP , SPOS.,  என்று  ஆயிரம் CHECKING MECHANISM  இருந்தும் கூட  கோடிக்கணக்கில்  பல அலுவலகங் களில் MULTIPLE FRAUD.   போதாதற்கு CORE BANKING  கூத்துகளில்...................... கணக்குகளின் இருப்புகள் சரி செய்யப்பட வேண்டிய  அவசரம் மீண்டும் ...... பார்த்தால்  மீண்டும் கோடிக் கணக்கில் MINUS BALANCE.................

இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டுமே ... எப்படி செய்வது ?  இருக்கவே இருக்கிறான் ... எதையும் சுமக்கும் பொதிக் கழுதை....   அப்பாவி  அஞ்சலக எழுத்தன்.... பிடித்து மாட்டு ...  பணத்தைக்  கட்டு ...  இல்லையானால்  விதி 16, விதி 14........  பணி ஒய்வு பெறுபவரா ? ........ நிறுத்து  ஓய்வுக் கால பலன்களை ...  "ஐயோ வேண்டாம் .............. ஆளை விட்டுவிடு ..  நான் VR இல் செல்கிறேன்" என்றால் .. அதுவும் கிடையாது ... நீ இங்கேயே  சாக வேண்டும் இல்லையேல்  பணத்தைக் கட்ட வேண்டும் .... இதுதான் இன்றைய  நிர்வாகத்தின்  மோசமான  பார்வை ...

பயந்த ஊழியர்கள்  பலர் ................. எவன்   எவனோ சுருட்டியதற்கு  தங்கள்  உழைப்பில் வந்த பணத்தைக் கட்டினர் ....... ....இதற்கு வழியே இல்லையா ? என்று புலம்பித் தவிப்போர்  பலர் ... "தொழிற்சங்கம்  என்ன செய்கிறது ?" என்று கேள்வி கேட்டு தங்களுக்காக  போராடும் அமைப்பையே  வெறுத்து ஒதுக்கி விரக்தியின் பிடியில்  பலர் ....... 

 "கொட்டுவது  தேளின் குணம் .........  தடுப்பது மனிதனின் குணம்" ....... தேள் ஏன் கொட்டுகிறது  என்று கேட்க முடியுமா ? .........அதிகார அமைப்பு பெரும்பாலும் அப்படித்தான்....... ஒரு சில  நல்லவர்களைத் தவிர ... அவர்களும் கூட அதிகார அமைப்பின் கட்டுக்குள் ... நாங்கள் என்ன செய்வது .. மேலே சொல்லுகிறார்கள்  ...  நாங்கள் செய்து தானே ஆக வேண்டும் ... என்று  தட்டிக் கழிப்பது  கண்கூடு.

இவற்றை எதிர்கொள்ள  சட்டம் இருக்கிறதா ?  நிச்சயம்  இருக்கிறது ... ஆனால் நம்மில் பலருக்கு தெரிவதில்லை ............ தெரிந்து கொள்ள ......... தொழிற்சங்கம்  நடத்தும்  பயிற்சி வகுப்புகளுக்கும்  வருவதில்லை ......முன்னணித் தோழர்கள் கூட  இப்படித்தான் ......... இந்த நிலை தொடர்ந்தால் , எதிர் வரக்கூடிய  தனியார்  மய சூழலில்....... மீண்டும் அடிமை வாழ்வு தான் .......

MINUS BALANCE என்று கூறி  நேரிடையாக  சம்பளப் பிடித்தம் செய்திட முடியாது ...  சட்டப் படி SHOW CAUSE NOTICE வழங்கப் பட வேண்டும் ... இப்படி SHOW CAUSE NOTICE வழங்காமல்  ஊதியத்தில் பிடித்தம் செய்திட உத்திரவிடப் பட்டால்  உடன் உங்கள் கோட்ட/ கிளைச் செயலரை அணுகுங்கள் ... அவர்கள் நிச்சயம்  உங்கள் கோட்ட அதிகாரியிடம்  சட்ட விதிகளை எடுத்துக் காட்டி , இது தவறான அணுகுமுறை  என்பதை நிலை நிறுத்துவார் ... 

SHOW CAUSE NOTICE வழங்கப் பட்டால் , உடன் உங்கள் செயலரை அணுகி அதற்கு உரிய வகையில்  பதில்  தயார் செய்து அனுப்ப  உதவிடக் கோருங்கள் ..... உங்களுக்கு .... உங்கள் மீதான  தவறு சரிவர நிரூபிக்கப்  பட ... அதற்கான ஆவணங்கள் உங்களிடம் காட்டப் பட வேண்டும் ...................  அதன் நகல்கள் உங்களுக்கு வழங்கப் பட வேண்டும் ... MINUS BALANCE க்கு  உரிய  DEPOSITOR இடம் இருந்து  உங்கள் கோட்ட அதிகாரி  உரிய தொகையை வசூல் செய்திட சட்ட ரீதியாக  நடவடிக்கை எடுத்திட வேண்டும் ....................   இவை எதுவும் செய்யாமல்  உங்களிடம்  எந்தத் தொகையும் பிடித்தம் செய்திட  சட்டம்  அவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கிட வில்லை ....

உங்களின் ....... தொழிற் சங்கத்தின்......  எல்லாவித முயற்சிகளையும் மீறி .......... அடாவடியாக  உங்களின் சம்பளத்தில்  பிடித்தம் செய்திட உத்திரவிடப்பட்டால் நிச்சயம் நீதி மன்றம்  உங்களுக்கு பாது காப்பு வழங்கும் .......... அதற்கு செல்ல உங்களுக்கு  தொழிற் சங்க நிர்வாகிகள்  உதவி செய்வார்கள் ............ அதற்கு  கூட்டாக ............ தனியாக .......கோட்டச்  சங்கம் சேர்த்து ... என்று பலவகையில்  வழக்கு  தொடுத்து  தடையாணை  வாங்கிட .... அந்தந்த  சூழலுக் கேற்ப .......... அந்தந்த CASE க்கு ஏற்ப ....  வழி வகை உள்ளது ... 

மாதிரிக்கு  இரண்டு விதமான CASE களின்.. அந்தந்த சூழலுக்கு ஏற்புடைய     MODEL REPLY    கீழேஅளித்துள்ளோம்  ..............  படித்துப் பார்த்து  உபயோகப் படுத்திக் கொள்ளவும் .......................  உங்கள்  கோட்ட/ கிளைச் செயலரின் உதவியையும்  கேட்டு பெறவும் ........

மேலும்  இது போன்ற ஒரு MINUS BALANCE RECOVERY CASE இல் நீதி மன்றத்தால் தடையாணை பெறப் பட்டதால் , RECOVERY நிறுத்தப் பட்ட  உத்தரவையும் உங்கள் பார்வைக்கு  வைக்கிறோம் .... 

முயன்றால் முடியும் ... தொழிற் சங்க உணர்வு கொள்ளுங்கள் ..... உதவிகளை கேட்டுப் பெறுங்கள்....உங்களுக்கு உதவிடத்தானே  நம் தொழிற் சங்க அமைப்பு?  அன்றில் வேறு எதற்கு ?....   உணர்வு கொள்வோம் .... ஒன்று கூடுவோம் ... உயிரோட்டத்துடன்  தொழிற்சங்கப் பாதையில்  தோழர்களை பயணிக்க செய்வோம் ...

என்றும் உங்களுடன்...
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று .