...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 15, 2015

இலக்கினை எட்ட ரூபாய் 10 க்கு அதிக அளவில் கணக்கை தொடங்கி ஏமா ற்றகூடா து --அஞ்சல் வாரியம் உத்தரவு 

DTE ALSO ISSUED ORDERS AGAINST UNETHICAL PRACTICE OF SPLITTING OF ACCOUNTS INTO LOWER DENOMINATION

அன்புத் தோழர்களே  வணக்கம் ! ஏற்கனவே  நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் அறிவித்து நடத்திய 17.02.2015 மற்றும் 27.02.2015 இரு கட்ட போராட்டங்களின் விளைவாக  கடந்த  24.02.2015 அன்று நம்முடைய CPMG  அவர்கள் ,  பல்வேறு கோட்ட மட்ட அதிகாரிகள் தமக்கு அறிவிக்கப்பட்ட இலக்கினை பொய்யாக அடைந்திட  ரூ. 10/-  RD  கணக்குகள் ஆயிரக் கணக்கில்  போடச்சொல்லி  துன்புறுத்துவது  சட்ட விரோதமானது என்று கூறி " NO UNETHICAL PRACTICE OF SPLITTING THE ACCOUNTS/POLICIES WILL BE TOLERATED"   என்று  சுற்றறிக்கை  அனுப்பியது உங்களுக்கு நினைவிருக்கும் . அதன் நகல் கீழே  பார்க்கவும். 

தற்போது  நம்முடைய இலாக்காவில் இருந்தும்  இதே உத்திரவை வெளியிட்டுள்ளார்கள். அந்த சுற்றறிக்கை நம்முடைய  CHIEF  PMG யால் அனைத்து  கோட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.  இதனையும் மீறி எந்த குட்டி அதிகாரியாவது  தவறு செய்தால்  அது குறித்த முழு விபரம்  மாநிலச் சங்கத்திற்கு  ஆதாரத்துடன் தெரிவிக்கவும்.  
DD 
இதன் மீது  நம்முடைய CHIEF   PMG,  DTE   மற்றும்  நிதியமைச்சகத்திற்கு  புகார் அனுப்பி  உரிய  நடவடிக்கை  கோரப்படும்.

1 comment:

  1. By this order does the bos have stopped opening lower denomination 10 rs accounts and ips, asps sspos have stopped in indicting in sb melas do open more lower denomination accounts By this order who tries to deceive or to be deceived our comrades are not going to be deceived. They are fed by with the attitude and the unhelpfulness of the trade union and have decided to become nonmember

    ReplyDelete