...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 30, 2015

அன்பார்ந்த GDS ஊழியர்களுக்கு 

                  கடன் வாங்கி RPLI போலி பாலிசி போடாதீர்கள் !

          ஆண்டுக்கு ஆண்டு அதிகாரிகள் GDS ஊழியர்களுக்கு RPLI பிடித்து தர நிர்ணயிக்கும் தொகை அதிகரித்து கொண்டே போகிறது .கிட்டத்தட்ட கடந்த பத்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் RPLI பாலிசி நமது தோழர்களால் சேர்க்கப்பட்டுள்ளது .இருந்தாலும் இந்த ஆண்டு இப்பொழுதே அதிகாரிகளால் கொடுக்கப்படும் நெருக்கடிகளுக்கு பயந்து பல தோழர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் முதல் பிரிமியம் மட்டுமாவது செலுத்தி தங்கள் இலக்கை அடைந்ததாக  காட்டி கொள்கின்றனர் .
                 முதலில் பாலிசி எண்ணிக்கை அதிகரிக்க குறைந்த தொகையில் அதிக பாலிசி போட சொன்னார்கள் .இப்பொழுது அதிக தொகை கொண்ட பாலிசி கேட்கிறார்கள் .இது போதாது என்று SB ,RD கணக்குகள் GDS தோழர்கள் பிடித்து தரவேண்டுமாம் .சமீபத்தில்   வந்த உத்தரவு படி BO களில் Speed post வசதிகள் விரிவாக்க பட்டதில் இருந்து BO களில் எத்தனை ஸ்பீட் போஸ்ட் பதிவு செய்யபட்டிருக்கிறது என்று புது கேள்வி கேட்கிறார்கள் . இது  குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் என்ன செய்வது எல்லாம் மேலிட நெருக்கடிகள் என்கிறார்கள் .உண்மைதான் 

      SSP க்கு நெருக்கடி வரும்போது ASP களுடன் மீட்டிங் நடத்தி அவர் தப்பித்து கொள்கிறார் 
       ASP /IP களுக்கு நெருக்கடி வரும்போது மேளா நடத்தி சமாளித்து கொள்கிறார் 
           இதே நெருக்கடி GDS களுக்கு வரும்பொழுது  கடனை வாங்கி போலி பாலிசை போட தொடங்கி விட்டார்கள் .
                இது தீர்வல்ல --பொது மக்களிடம் அனுகி பாலிசை சேர்க்க முடிந்தால் சேருங்கள் --போலி பாலிசி என்ற பெயரில் கடன்களை வாங்கி கடனாளி ஆகாதீ ர்கள் .
RPLI  குறித்து அதிகாரிகள் மிரட்டினாலோ /விரட்டினலோ எங்களிடம் எழுத்து பூர்வமாக தெரிவியுங்கள் .
.நன்றி 

0 comments:

Post a Comment