...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 8, 2016

08.03.2016 அன்று பாளையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா 
நாள்--- 08.03.2016    இடம்--- பாளை அஞ்சலக வளாகம் 
தலைமை---- தோழியர் H.பொன்னம்மாள் 
வரவேற்புரை----- தோழியர் சிவனருள் செல்வி 
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்------ தோழியர் முத்து பேச்சி  
நன்றியரை தோழியர்--------- கிருஷ்ண வேணி 
தோழியர்களின் ஊர்வலம் 
  NFPE கோட்ட செயலர் தோழர் SKJ அவர்களின் வாழ்த்துரை 
 தோழர் N .கண்ணன் போஸ்ட் மாஸ்டர் அவர்களின் வாழ்த்துரை 


  நமது அன்பிற்குரிய முதுநிலை கண்காணிப்பாளர் திரு V .P .சந்திர சேகர் அவர்களின் சிறப்புரை 
     முப்பது கோடி முகமுடையாள் -எனில் சிந்தனை ஒன்றுடையாள் --
          ஆடுவோமே ! பாடுவோமே !முண்டாசு கவிஞர்  பாடலுக்கு புதுமை பெண்களின் கோலாட்டங்கள் 
மனமாற்றம் குறு நாடகத்தில் தோழியர்கள் பிரிதா ,செல்வி 


08.03.2016 அன்று நடைபெற்ற மகளிர் தின  நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட கவிதைகள்
                                        நாங்கள் அழகான பூக்கள் 
            பூக்கள் தான் நாங்கள் 
           குடிசையோ மாளிகையோ 
           தானிருக்கும் இடத்தை 
            அழகாக்கும் பூக்கள் 
           அதுபோலத்தான் நாங்கள் ...

          கள்ளிப்பால் உனக்கு தாலாட்டு  கேட்கும் முன்னே 
          ஒப்பாரி கேட்டவர்கள் நம் சகோதரிகள் 
         சி ரிப்பதே தவறென்று விலங்கு போல் 
         வாழ்ந்து விட்டு போனவர்கள் 
          படிப்பது தவறென்று அடுப்பிலே வெந்தவை 
          அவளின் சிந்தனைகள் 
         விதவைகள் எதிர்வந்தால் விளங்காது காரியமென்று 
         விளக்கி வைக்க பட்டவர்கள் 
உன் உயரம் நோக்கி நீ நகர நகர           
ஒழுக்கம் பற்றி விமர்சனம் வரும் 
சேர்த்து வைத்த உறுதி எல்லாம் 
செத்து விடும் தருணம் இது 
இவளால் என்ன செய்யமுடியும்  என நினைத்தவரின் 
கடைசி அஸ்திரம் அது 
சிரித்து கொண்டேஇருக்கிறோம் 
முட்களுக்கு நடுவேரோஜாவாய் ! ----
       தோழியர்       முத்து லட்சுமி  PAபாளையம்கோட்டை HO 
-----------------------------------------------------------------------------------------------------
              அரிதாரம் பூசாத அவதாரங்கள் 
மண்ணுலகில்  மங்கை யராய் 
பிறப்பதற்கு நல்லதொரு 
மாதவம் செய்தோம் 
அஸ்டாவதனமாய்  வீட்டையும் 
அலுவலகத்தையும் 
இரு தோள்களில் சுமக்கும் 
நவீனயுக பெண்கள் நாங்கள்
 ஆக்கும் சக்தியாய் , பணம் தரும் கற்பகதருவாய் 
செவிலியா ய் , மகளாய் 
தாயாய் . மனைவியாய் 
மருமகளாய் ,அலுவலக பெண்ணாய் 
அரிதா ராம்  பூசாமலே 
நித்தம்பலப்பல  வேடம் தாங்கும் 
பெண்டீர் நாங்கள் 
                    தோழியர்  P.தனுஜா  PAபாளையம்கோட்டை 
       தொடரட்டும் நம் ஒற்றுமை வாழ்த்துக்களுடன் ஜேக்கப்ராஜ் 




2 comments:

  1. Anjal attai in vinnai thodum vasagangal. Thodarattum......

    P. Thiruvengadam, PM (Gr.I)Alagapuram PO Salem - 636004

    ReplyDelete
  2. EVERY DAY IS WOMEN,S DAY.BECAUSE NO ONE MAN OR ONE FAMILY
    WIN IN LIFE WITHOUT THEIR HELP.

    ReplyDelete