...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, April 26, 2019

தமிழக அஞ்சல் மூன்று தென் மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம். 
~~~~~~
தமி்ழக அஞ்சல் மூன்று தென் மண்டல கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டம் இன்று (25.4.19) காலை 10.00 மணி தொடங்கி மதுரை மேல மாசி வீதி  வடுகர் (எ) கம்மவர் நாயுடு மகாஜன சங்கக் கட்டிடத்தில் மாநிலத் தலைவர் தோழர்.M. செல்வகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 
தென்மண்டலத்தில் உள்ள கோட்ட/கிளைச்செயலர்கள் ஒவ்வொருவரும் விரிவாக தங்கள் பகுதிப் பிரச்னைகளை எடுத்து வைத்துப் பேசினார்கள். 
 நமது கோட்டத்தின் சார்பாக நான் (ஜேக்கப் ராஜ் ) கலந்துகொண்டு நமது நெல்லை கோட்டம் தொடர்பான 5 கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி அதன் கடிதமும் கொடுக்கப்பட்டது .
1.தோழர் துளசிராமன் இடமாறுதல் மேல்முறையீடு மண்டல அலுவலகத்தில் இன்னும் முடிவெடுக்காமல் இருப்பது 
2.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும் கட்டிடங்களில் சில பகுதியை உடனே பராமரித்தல் .அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு சிவில் பணியினை விரைவாக தொடங்க வேண்டும் 
3.திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் IQ பராமரிப்பு -கோட்ட அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் விரைந்து பணியை தொடங்க வேண்டும் 
4.ஜவஹர் நகர் மற்றும் காந்திநகர் அலுவலகங்களுக்கு சொந்தமாக வாங்கப்பட்ட நிலத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவது 
5.அஞ்சல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் ,ஆதார் ,FINACLE ,CSI,IPPB உள்ளிட்ட பணிகளுக்கு புதிய TIME FACTOR நிர்ணயிக்க அகிலஇந்திய சங்கம் /சம்மேளனம் மூலம் வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் கொடுக்கப்பட்டது 
                   பொதுவான கோரிக்கையாக ஆதார் பணிகளை B கிளாஸ் அலுவலகத்திற்கும் விலக்கு அளிப்பது மற்றும் சமீபத்தில் ஆதார் பணிகளுக்காக தலைமை அஞ்சலகங்களில் வேலைநேர நீட்டிப்பை ரத்து செய்வது என்ற கோரிக்கைகளும் பல கோட்ட செயலர்களால் வலியுறுத்தப்பட்டது 
இந்தக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட பிரச்னைகள் ஒரு 
வார காலத்திற்குள் கோரிக்கை மனுவாக தயாரிக்கப்பட்டு மண்டல PMG அவர்களிடம் அளிக்கப்பட்டு 
இதன் மீது குறுகிய காலத்தில் தீர்வு கோரப்படும். நிச்சயம் இதில் தீர்வு ஏற்படும். 
 பிரச்னைகளில் தீர்வு ஏற்படவில்லையெனில் நிச்சயம் கோட்ட/மண்டல அளவிலான போராட்டங்கள் 
நடத்தப்பட்டு அதற்கான தீர்வு ஏற்படுத்தப்படும். 
           நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் 
         SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


0 comments:

Post a Comment