முக்கிய செய்திகள்
டெபுடேஷன் விஷயத்தில் கோட்ட நிர்வாக உத்தரவு சில இடங்களில் மீறப்படுவதை 16.04.2019 அன்று நமது SSP அவர்களை சந்தித்து முறையிட்டோம் .SSP அவர்களுக்கும் தனது கவனத்திற்கும் இந்த பிரச்சினை வந்ததாகவும் விடுப்பு முடிந்து வந்தவுடன் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் .
கடந்த பெப்ருவரி மாத மாதாந்திர பேட்டியில் விவாதித்ததை தங்கள் பார்வைக்கு தருகிறோம் .
It is requested to instruct the Postmasters to depute officials to next offices only after re-joining the HQ Office. It is seen that same official is being deputed from the place he/she is on deputation.
----------------------------------------------------------------------------------------------------------------
தென் மண்டல கோட்ட செயலர்கள் கூட்டம் மதுரையில் 25.04.2019 அன்று நமது மாநில தலைவர் தோழர் செல்வ கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் வடுகர் என்ற கம்மவார் நாயுடு மகாஜன சங்கம் மதுரை கோபால சுவாமி கோவில் சன்னதி தெரு மேல மாசி வீதி மதுரை 625 001 என்ற இடத்தில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தின் சார்பாக மாநில /மண்டல அளவில் எடுக்கவேண்டிய பிரச்சினைகள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் .
----------------------------------------------------------------------------------------------------------------
புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன .நமது கோட்டத்தில் ஏற்கனவே பதவியுயர்வு பெற்ற 6 தோழர்கள் நமது அஞ்சல் மூன்றில் உறுப்பினர்களாகிவிட்டனர் .மேலும் தபால்காரர் சங்கத்தை பொறுத்தவரை பதவி உயர்வில் வந்த இரண்டு தோழியர்கள் மற்றும் RULE 38 யில் வந்த 2 தோழர்கள் உதயகுமார் மற்றும் மெர்வின் நமது உறுப்பினர்களாகி விட்டார்கள் .RULE 38 இடமாறுதல் மூலம் ஊழியர்கள் JOIN செய்தவுடன் இந்த எண்ணிக்கை குறைந்தபட்சம் மேலும் 25 க்கும் கூடுதலாக கிடைக்கும் என்பதனையும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
-------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment