...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, December 4, 2021

 அன்பார்ந்த GDS தோழர்களே !

திருநெல்வேலி உப கோட்ட அதிகாரிக்கு எதிராக நமது கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு நாம் வைத்த கோரிக்கையில் நமக்கு வெற்றி கிடைத்திருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரி எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை .அவர்கள் எப்பொழுதும் ஊழியர்களை ஒரு குற்றவாளி என்கின்ற எண்ணத்தோடு பார்ப்பதும் சிரிய தவறையும் பெரியதாக எடுத்து தண்டனை வாங்கிக்கொடுப்பதும் அவர்களது இயல்பு . ஆகவே திருநெல்வேலி உபகோட்டத்தில் பணியாற்றும் GDS ஊழியர்களுக்கு சில வழிகாட்டுதல்கள் ..

1.உபகோட்டம் விட்டு உபகோட்டம் யாராவது பணியாற்ற விரும்பினால் நீங்கள் SSP அவர்களுக்கு உங்களது ASP  மூலமாக விருப்ப கடிதங்களை அனுப்பவும் .

2.கிளை அஞ்சலக எல்கைக்குள் குடியிருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் .

3.விடுப்பு எடுக்கும் பட்சத்தில் அவசியம் விடுப்பு விண்ணப்பத்தில் OUTSIDER யார் என்பதை பூர்த்திசெய்துவிட்டு அந்தந்த SO வில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லவும் .விடுப்பு விண்ணப்பிக்காமல் OUTSIDER யை வைத்துவிட்டு செல்லக்கூடாது .

4.அலுவலக நேரத்தில் சரியாக செல்லவும் வேலைநேரம் முடிந்தபிறகுதான் அலுவலகத்தை விட்டு திரும்பவும் கேட்டுக்கொள்கிறோம் 

5.DEVICE வேலை செய்யவில்லை அல்லது நெட் கிடைக்காத நாட்களில் யாரிடமும் பாஸ்புக் RPLI புக் என எதையும் வாங்கி அலுவகத்தில் வைக்காதீர்கள் .

6. எந்த காரணத்திற்காகவாவது உங்களிடம் STATEMENTகேட்டல் உடனே கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை .மெயில் ஓவர்சியர் சொல்லுகிறபடி அல்லது ASPசொல்லுகிறபடி எழுதிக்கொடுத்தல் பிரச்சினை தீரும் என்று நம்பி எழுதிக்கொடுக்காதீர்கள் .அதை படித்துப்பார்த்துவிட்டு அவர்களிடமே இன்று என்னால் ஸ்டேட்மெண்ட கொடுக்கும் மனநிலையில் இல்லை .நாளை தருகிறேன் என்பதையே ஸ்டேட்மெண்ட ஆக கொடுத்துவிடுங்கள் 

7.ஆய்வின் போது உங்களை அவர்கள் ஒருமையில் பேசினாலோ அல்லது ஏசினாலோ தயங்காமல் உங்கள் மொபைல் மூலம் ரெகார்ட் செய்து கொள்ளுங்கள 

8.IR மற்றும் VR இவைகளுக்கு பதில் எழுத உதவி தேவைப்பட்டால் எங்கள் உதவியை நீங்கள் எப்பொழுதுவேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் 

9.குறிப்பிட்ட நேரத்திற்கு மேளா ஆரம்பிக்காமல் எத்தனை மணிநேரம் தாமதமாக மேளா ஆரம்பிக்கப்பட்டதோ அதை எஙக்ளுக்கு தெரியப்படுத்துங்கள் 

10.முக்கியமாக CASH மற்றும் STAMPS மிக சரியாக வைத்திருக்கவேண்டும் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 94421-23416


1 comment:

  1. Ok fine but In the name of unrealistic targets divisional and subdivision heads keep threatening p3 p4 staff today my os from do called me and said சம்பளம் vaangirile iduku enna padil solla

    ReplyDelete