இம்சை அரசிக்கு ஒரு தொழிலாளியின் ரத்தம் கசிந்த பதில்கள்
சீ ..சீ .....
சூரியன் நீ என்றால்
நாங்கள் பிரபஞ்சம் தான்
ராட்சசி நீ என்றால்
நாங்களும் (NFPE )ரட்சகன் தான்
நீ சக்தியல்ல --சூர்பனகை தான்
ஆதாரம் எங்களிடம் ஆயிரம் இருக்கு !
தொழிலாளியின் கண்ணீர் வடிப்புக்கு
நீ காரணம் என்றால்
கண்ணீரை துடைக்கும்
கைக்குட்டை NFPE தான்
இன்று நீ வடிக்கும் நீலி கண்ணீர் உன்
சகாக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை
கருணை அடிப்படையில்
வேலை கேட்டு வந்தவரிடம் நீ
காட்டிய கொடுமை
ஊர் அறியும் -உன்
பேர் தெரியும்
OUTSIDER முதுகில் சவாரி
செய்துவிட்டு -நீ
விண்ணப்பித்த மைலேஜ் தொகை
குஷ்டரோகி கையில்
வடிந்த தேனுக்கு சமமல்லவா ?
வறுமையின் விளிம்பில் நின்ற
OUTSIDER யிடம் நீ பேசிய பேரம்
5 லட்சம் பாலிசியாம் --100கணக்கு
உனது பாலிசியாம் !
ஒருமையில் பேசுவதும்
பெருமையில் வாழ்வதும்
உன் பிழைப்பு என்றால்
பிழைத்து போ !
உழைத்து வாழும் எங்களிடம் ஏன்
உரசி பார்க்கிறாய் ?எங்களிடம் ஏன்
அரசியல் செய்கிறாய் ?
ஆய்வு நடத்தும் இடம் உன்
அரண்மனை என்றால் என்ன ?
அலுவலகம் என்றால் எமக்கென்ன ?
TA பில் போடாமலா இருந்தாயா !
உன் அலுவலகத்தில் சதிகார
கூட்டம் என்றால் ?
அதனை வேட்டையாட
எங்களுக்கென்றும் அவகாசம்
தேவையில்லை !
உன் உப கோட்டத்தில்
எத்தனை தொழிலாளி செத்து போனான்
என்றாவது இறுதி சடங்கில் போனதுண்டா ?
எத்தனை குடும்பங்கள் கள் கணவனை
இழந்து வாடியபோதும்
கைம் பெண்களை அலையவிட்டு
அலைக்கழித்ததை மறக்கமுடியுமா ?
எங்களின் கண்ணீர் இன்னும் இருக்கு
அம்மாவை ஆதரிப்போர் இனியாவது
கேட்டு பார் !
உன் சகாக்களின் சாவின் போது
சக்தி எங்கே போனது ?
சூரியன் எங்கே ஒழிந்து கொண்டது ?
தொடரும் ..........ஜேக்கப் ராஜ் ------
0 comments:
Post a Comment