...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 1, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

COMBINED DUTYபிரச்சினை ,பாளை பார்சல் பிரிவில் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் ,திருநெல்வேலி உபகோட்ட அதிகாரியின் அத்துமீறல்கள் மற்றும் பழிவாங்குதல்கள் இவைகளை கண்டித்து நேற்று நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றியை பதிவாக்கியுள்ளது தொடர்மழை கூட நமக்காக சிறிதுநேரம் ஓய்வெடுத்து  ஆதரவு தந்தது .என்றே சொல்லலாம் .ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை உறுப்பினர்களுக்கும் ஆதரவு அளித்த இரண்டு ஓய்வூதியர் சங்க அமைப்புகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

இதுகுறித்து நாளை 02.12.2021அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் முக்கிய பிரச்சினையாக விவாதிக்கப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்புகிறோம் .இதன் அடிப்படையில் தான் நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் .

நெல்லை அஞ்சல் நான்கின் 39வது கோட்ட மாநாடு வருகிற 05.12.2021அன்று பாளையம்கோட்டையில் நடைபெறுகிறது .அஞ்சல் நான்கின் உறுப்பினர்கள் மட்டுமல்ல NFPE சொந்தங்கள் அனைவரும் மாநாட்டில் குடும்பத்தோடு பங்கேற்றிட NELLAI -NFPE சார்பாக அழைக்கிறோம் 

மாநாட்டில் காலை சிற்றுண்டி ,மதியம் சாப்பாடு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது .

மாநாட்டு நன்கொடை அஞ்சல் நான்கு உறுப்பினர்களுக்கு ரூபாய் 500 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது .இன்று நமது நிர்வாகிகள் மாநகர பகுதிக்கு ஊழியர்களை சந்திக்க வருகிறார்கள் .அந்தந்த அலுவலக முன்னனி தோழர்கள் நன்கொடைகளை பிரித்து வைத்திருக்குமாறு நினைவூட்டுகிறோம் .மாநாட்டு வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment