...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, December 3, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

நேற்று நடைபெற்ற (02.12.2021)  மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட  முக்கிய பிரச்சினைகள் 

1.ஆன்லைன் பயிற்சிக்கு வருகின்ற ஊழியர்கள் தங்கள் பயிற்சிக்காலத்தில் பயன்படுத்த DATA ரிச்சார்ஜ் முன்பணம் வழங்கிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது .ஆகவே பயிற்சிக்கு உத்தரவு வந்தவுடன் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் முன்பணம் கேட்டு விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

2.பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட இட்டமொழி CASH OFFICE வள்ளியூரில் இருந்து திசையன்விளைக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது 

3.வள்ளியூர் அலுவலக மெயில் சம்பந்தமான பிரட்சினையும் வேலைநேரத்திற்கு மேல் ஊழியர்கள்  பலமணிநேரம் காத்திருக்கவேண்டிய நிலைக்குறித்தும் விவாதிக்கப்பட்டது .நிர்வாகம் இரண்டு முன்மொழிதல்களை மண்டல அலுவலகத்திற்கு அனுப்பிவைத்துள்ளது .இதற்கிடையில் வள்ளியூருக்கு இணைக்கப்ட்டுள்ள துணை அஞ்சலகஙக்ளுக்கு SAMEDAY TRANSIT என்பதை மாற்றி ONEDAY TRANSIT என்பதை குறித்து பரீசீலிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது 

4.GDSஊழியர்களின் OFFICIATING பொறுத்தவரை உபகோட்டம் விட்டு உபகோட்டம் பார்த்திடஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

5.தோழர் ராஜ சூரிய கண்ணன் தபால் காரர் பாளை அவர்க்ளின் DCCS மாற்றப்பட்டுவிட்டது .

6.முன்னீர்பள்ளம் நெட்ஒர்க் ,தச்சநல்லூர் மற்றும் தெற்கு கருங்குளம் அலுவலக பிரச்சினைகள் விவாதிக்கப்ட்டது 

7.NDC ஊழியர்களுக்கு பெட்ரோல் அலவன்ஸ் ரூபாய் 150 என உயர்த்த மண்டல அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்படும் 

8.பாளை தலைமை அஞ்சகத்தில் கூடுதலாக ஒரு GDSPACKER  REDEPLOY செய்யப்படும் 

              தோழர்களே !நாம் ஏற்கனவே தெரிவித்தபடி தங்கள் அலுவலக பிரச்சினைகளை முதலில் கோட்ட அலுவலகத்திற்கு எழுத்துபூர்வமாக எழுதிவிட்டு அதன் நகலை கோட்ட சங்கத்திற்கு அனுப்பிவைக்கவும் .பொதுவாக நிர்வாகம் யூனியன் மூலம் தான் பிரச்சினை எடுக்கப்பட வேண்டுமா ?எங்களிடம் நேரடியாக தெரிவித்தால் நாங்கள் செய்யமாட்டோமா ?என்ற பழைய மனநிலையில் இருந்து சற்றும் மாறவில்லை .பிரச்சினைகளை தேடி நாம் அலையவில்லை பிரச்சினைகளின் தீர்வை நோக்கித்தான் நாம் முயற்சிக்கிறோம் என்பதை அழுத்தமாக நேற்று பதிவுசெய்தோம் .

நேற்றைய மாதாந்திர பேட்டிக்கு புதிய தோழர்கள் நியூட்டன் PA வள்ளியூர் மோகன் தபால் காரர் ஆகியோர்களை அழைத்து சென்றோம் .வருகிற நாட்களிலும் மாதம் ஒரு புதிய குறிப்பாக இளைய தோழர்களை அழைத்து செல்லவிருக்கிறோம் ...

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment