...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 31, 2022

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

01.04.2022  முதல் அஞ்சல் சேமிப்பு திட்டங்களான MIS /SCSS/TD கணக்குகளுக்கான வட்டி தொகையினை அஞ்சலக சேமிப்பு கணக்கிலோ அல்லது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலோ தானாகவே வரவு வைக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாக்க படுகிறது .

01.04.2022  முதல் SUNDRY  OFFICE ACCOUNT நிறுத்தப்டும் .இதனால் இதுகாறும்  MIS /SCSS/TD இவைகளுக்கான காலாந்திர வட்டி எடுக்கப்படாமல் இருந்தால் அது   SUNDRY  OFFICE ACCOUNT யில் சேர்ந்திடும்போது அதற்கான கூடுதல் வட்டி இல்லாமல் இருந்தது .இனிமேல் அவ்வாறு இல்லாமல் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கு செல்வதால் அதற்கான வட்டியும் கிடைக்கும் .இதை நாம் நமது வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம் 

..இனிமேல் ஒரு அலுவலகத்தில் இருந்து வேறு அலுவலகத்திற்கு மாறுதல் செய்யும் போது அந்த கணக்கில் எந்த OUTSTANDING வட்டி தொகையும்  இல்லை என்பதை உறுதிசெய்தபின்தான் அந்த கணக்கை ஒரு அலுவலகத்தில் இருந்து வேறு அலுவலகத்திற்கு மாற்றமுடியும் .இது 02.04.2022முதல் அமுலுக்கு வருகிறது .இதை தலைமை அஞ்சலக APM உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் 

இந்த புதிய நடைமுறை  சேமிப்பு பிரிவில் பணியாற்றும் தோழர்களுக்கும் SPM தோழர்களுக்கும் அவசியம் தெரிந்திருக்கவேண்டிய முக்கிய ஆணை ..மேலும் விவரங்களுக்கு நாம் மேலே பதிவிட்டுள்ள வீடியோவை பார்க்கவும் 

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, March 25, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 

                                வெல்லட்டும் வேலைநிறுத்தம் வெல்லட்டும் பரவட்டும் தீ பரவட்டும் ! போராட்ட தீ பரவட்டும் 

வருகிற மார்ச் 28 மற்றும் 29  தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தம் நிச்சயம் இந்த அரசாங்கத்தை ஊழியர்களின் பிரச்சினைகளின் மீது தனது கவனத்தை திருப்பும் என்பதில் ஐயமில்லை ...நமது ஒன்றுபட்ட போராட்ட அறிவிப்பு வந்தபின் அஞ்சல் வாரியம் நமக்குவேண்டுகோள் விடுக்கிறது ...இத்தனை நாட்களாய் பாராமுகமாய் இருந்த அஞ்சல் வாரியம் நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைகிறது என்றால் இது வழக்கமான ஒன்று என யாரும் எளிதில் கடந்துபோக கூடியதல்ல ..கவனிக்கத்தக்கது ..

                        பழைய வரலாறுகளை திரும்பி பார்த்தால் எத்தகைய நெருக்கடிகளுக்கு இடையில் இந்த இயக்கத்தை நமது தலைவர்கள் வழிநடத்தி இருக்கிறார்கள் என்பது புரியும் .அரசாங்கத்தால் விலைபேசப்பட்டபோதும் எத்தனை தலைவர்கள் அதை நிராகரித்து கடும் விலை கொடுத்து ஊழியர்களின் நலன் காத்தார்கள் என்பது விளங்கும் . வானவில் போன்ற வண்ணமுடைய நமது இயக்கம் என்பதால் கருத்தோட்டங்கள் பலவற்றையையும் ஏற்று ஒருங்கிணைத்து ஒரு ஒற்றுமையை கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல ..

                     நமது சங்கம் எத்தனை சோதனைகளை கடந்து வந்திருக்கிறது .ஆட்சி மாற்றங்களினால் ஏற்பட்ட அரசின் கொள்கை முடிவுகள் நம்மை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தாக்கியபோது தயங்காமல் தளராமல் போராடிய பெருமை நமக்குண்டு 

                          இன்றைய தினம் நமது சங்கத்தில் பல இளைய தோழர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள் ...அவர்களின் போராட்ட குணம் ,போராட்டத்தில் அவர்கள் காட்டும் ஆர்வம் நம்மை வியக்கவைக்கிறது ...புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கைக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் ....நமது பகுதி கோரிக்கைகளை மட்டுமே முன்னிறுத்தி போராட வேண்டும் என்று நமது தமிழ் மாநிலசங்கமும் எல்லா அரங்கிலும் நமது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறது ...தற்சமயம் புதுப்பிக்கப்பட்ட போஸ்டல் JCA வும் இந்த ஒன்றுபட்ட போராட்டம் நமது துறை சார்ந்த கோரிக்கைகளுக்குக்காகவும் தொடரும் என அறிவித்துள்ளார்கள் 

                     ஆகவே இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிபெற வைப்பது நமது ஒவ்வொருவரின் கடமை .அதுவும் நாடெங்கிலும் தொழிலாளிகள் ஒருகுடையின் கீழ் ,அஞ்சல் துறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டம் --இதை  சரியாக பயன்படுத்துவோம் ..இந்த துறையை காக்கவேண்டிய கடமையை நாம் நிறைவேற்றுவோம் 

பரவட்டும் தீ பரவட்டும் ! போராட்ட தீ பரவட்டும் 

தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, March 24, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

                                  வணக்கம் .இன்று நமது கூட்டு போராட்டக்குழுவின் சார்பாக தென்பகுதிகளில் வேலைநிறுத்த விளக்க சுற்றுப்பயணம் தொடங்குகிறது .In CHARGE  யில் உள்ள SPM தோழர்கள் /தோழியர்கள் சனிக்கிழமை கோட்ட அலுவலகத்திற்கு தாங்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளும் தகவலை தெரிவிக்கவும் .அதற்கான மாதிரி படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது ..கோட்ட அலுவலகம் வழிகாட்டுதல் படி யாராவது ஒரு ஊழியர் உங்கள் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டால் அவர்களிடம் உங்கள் சார்ஜ் யை முறைப்படி கொடுத்துவிட்டு வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளவும் .

நேற்றைய நன்கொடையாயாளர்கள் தோழியர்கள் ரத்தினகீர்த்திகா ,பார்வதி முகிலா சிதம்பரம் ராமலட்சுமி வளர்மதி வண்ணாரப்பேட்டை கலாதேவி DO ராஜகுமாரி  அனைவருக்கும் நன்றி 

தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் --E .அருண்குமார் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, March 23, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

                          வருகிற 28.03.2022 மற்றும் 29.03.2022 இரண்டு நாட்கள் நாடெங்கிலும் நடைபெறும் வேலைநிறுத்தம் குறித்தான சுற்றறிக்கை உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறோம் ...நாளை 24.03.2022  அன்று புறநகர் பகுதிகளில் நமது வேலைநிறுத்த சுற்றுப்பயணம் நடைபெறுகிறது ..

                                  இந்த மாத மாதாந்திர பேட்டிக்கான சப்ஜெக்ட்ஸ் ஏதும் இருந்தால் வருகிற 30.03.2022 க்குள் அனுப்பவும் .

                             நேற்றைய நன்கொடையாளர்கள் தோழியர் ஆனந்தகோமதி ,ஜோதி ராமையா ,இசக்கி தபால்காரர் ,சேக் பீர் முகைதீன் ,கோபாலன் சுமதி (ராதா புரம் ] கௌரி திலகவதி மற்றும் முத்துபேட்சியம்மாள் அனைவருக்கும் நன்றி .அதற்கான ரசீதுகள் உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகின்றன ...

நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -E .அருண்குமார் கோட்ட செயலர்கள் நெல்லை 


Tuesday, March 22, 2022

                                    நாம் போராளிகள் 

 அவர்களை அப்படியே 

விட்டு விடுங்கள் 

எதுவும் சொல்லாதீர்கள் !

அவர்கள் அப்படி தான் !


நாம் வேலை நிறுத்தம்

செய்யும் போதுதான் 

அவர்கள் வேலை செய்ய 

புறப்படுவார்கள் !


ஆண்டுமுழுவதும் நாம் 

வேலை செய்வோம் 

அன்று  மட்டுமே அவர்கள் 

விழுந்து விழுந்து வேலை செய்வதாய் 

 நடித்து கொண்டிருப்பார்கள் 


நாம் அரசை எதிர்த்து 

ஆர்ப்பரிக்கும் போதெல்லாம்

அவர்கள் நம் மீது வெறுப்பை

உமிழ்வார்கள் 


நாம் அரசின் கொள்கைகளை எதிர்த்து 

அணி திரட்டுவோம் 

அவர்கள் நமக்கு எதிராக 

செயல்பட தொடங்குவார்கள் 


நேற்று தொடங்கி -நாளை 

முடியப்போவதில்லை நமது போராட்டம்

என்றென்றும் தொடரும் இந்த 

வர்க்க போராட்டம் 


நாம் போராளிகளாக திரிவோம் 

அவர்கள் ராஜ விசுவாசியாக திரியட்டும் 

வேலைநிறுத்தம் முடியும் அவர்களை

எதுவும் சொல்லாதீர்கள் !


நாம் போராளிகள்

அவர்கள் ராஜ விசுவாசிகள் 

ஆம் நாம் பிறவி போராளிகள் 

                                                                          ------- ஜேக்கப் ராஜ் ---------








     அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !   வணக்கம் 

                       GDS ஊழியர்களுக்கு பதிலிகள் போடுவது சம்பந்தமாக 11.02.2022 அன்று இலாகா வெளியிட்ட ஆணைக்கு நாடெங்கிலும் கிளம்பிய எதிர்ப்பினை அடுத்து 21.03.2022 அன்று அதற்கான விளக்க ஆணையை இலாகா பிறப்பித்துள்ளது .எந்த ஊழியர்களுக்கும் பதிலிகள் இல்லை என்று விடுப்பை மறுக்கக்கூடாது என்றும்  பதிலிகளை நியமிக்கும் போது அதற்கான justification இருக்கிறதா என பார்க்கவேண்டும் என்று விளக்கம் கொடுத்துள்ளது .இந்த விளக்க ஆணை இலாகா அல்லது அரசு தானாக வந்து கொடுக்கவில்லை .தலமட்டம் முதல் அகில இந்தியா வரை நாம் எழுப்பிய உரிமையின் குரல் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது .ஒன்றுபட்ட போராட்டம் வென்று காட்டும் நிச்சயம் என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா ?

நமது அஞ்சல் மூன்றின் தமிழ் மாநில மாநாட்டிற்கு நமது தோழர்கள் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகிறார்கள் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் நேற்றைய நன்கொடையாளர்கள் V.சரவணன் S.துர்காதேவி P .கிருஷ்ணவேணி V.விஜயலக்ஷ்மி ரகுமாதவன் P.சுந்தரவள்ளி P.ராமகிருஷ்ணன் B.குமாரி N .கண்ணன் கிருஷ்ண குமாரி K.துளசி D.ஹேனா S.ராஜலக்ஷ்மி JAB .மேரி .இதில் யார் பெயரும் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும் 

நடைபெறவிருக்கின்ற இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக நாம் இரண்டுநாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம் .தோழர்கள் ஆனந்தராஜ் செல்வம் அருண்குமார் ஆகியோர் நம்முடன் சேர்ந்து வருகிறார்கள் 24.0.2022 அன்று புறநகர் பகுதி 25.02.2022அன்று மாநகர் பகுதி 25.02.2022 அன்று மாலை பாளை மற்றும் அம்பை தலைமை அஞ்சலகத்தில் கூட்டு போராட்ட குழுவின் சார்பாக போராட்ட விளக்கக்கூட்டம் நடைபெறும் 

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --E.அருண்குமார் கோட்ட செயலர்கள் நெல்லை 

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .

                           நிதியாண்டின் இறுதி நாட்களில் நாம் இருக்கிறோம் .     நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகள் எல்லாம் இருக்கின்ற நாட்களில் டார்கெட் எட்டப்பமா ?எந்தெந்த பிரிவுகளில் நாம் நாம் சிறப்பாக செய்தியிருக்கிறோம் என்ற கணக்கெடுப்பு .மார்சு இறுதி நாளில் அவசர அவசரமாக இருக்கின்ற தொகையை செலவு செய்ய நிர்வாகம் தனக்கு தகுந்தாற்போல் செலவு செய்யும் .சில அதிகாரிகள் செலவு செய்யாமல் திருப்பியும் அனுப்புவார்கள் .இந்த நிலை மாறவேண்டும் .ஒரு C கிளாஸ் அலுவலகம் முதல் அனைத்து அலுவலகங்களுக்கும் தேவைகள் இருக்கும் .உடைந்த நாற்காலிகள் ,கம்ப்யூட்டர் சாதனங்கள் ,ஸ்டேஷனரி என ஓராண்டிற்க்கான உங்கள் தேவைகளை இன்றே நீங்கள் ஒவ்வொருவரும் கோட்ட அலுவலகத்திற்கு எழுத்துமூலமோ அல்லது இமெயில் மூலமோ தெரிவித்துவிட்டு அதன் நகலை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .அதற்கான மாதிரி கடிதமும் உங்களுக்குக்காக கொடுக்கப்பட்டுள்ளது ..

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, March 18, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !   

                                   நித்தமும் நெட்ஒர்க் பிரச்சினை எனும் தீராத அவதி -அன்றாட பணிகளை முடிக்க பல மணிநேர போராட்டம் --இதற்கு விடிவு உண்டா ?இல்லை முடிவுதான் உண்டா ?கலைய வேண்டும் நிர்வாகத்தின் மெத்தனம் --மீண்டும் ஒலிக்கவேண்டும் நமது தோழர்களின் உரிமை குரல்  

                            இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் இருந்தே நாம் நித்தமும் நெட்ஒர்க் பிரச்சினையில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறோம் ....நெட்ஒர்க் கோளாறா ?இல்லை FINACLE குளறுபடியா என்ற விவாதத்தில்  மேல்மட்ட அதிகாரிகள் தங்கள் பொறுப்பை தட்டி கழித்து வருகிறார்கள் .தங்கள் அதிகார வரையறைக்குள் பணியாற்றுகின்ற ஊழியர்கள் ஒவ்வொருநாளும் இவ்வாறு போராடி போராடி தங்களது அன்றைய நாள் கணக்கை முடிக்கிறார்கள் என்பதை தெரிந்திருந்தாலும் எந்த அதிகாரிகளிடம் இருந்தும் பதில் வருவதில்லை .ஆனால் மேல்மட்டத்தில் விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வருகின்றன ..

நம்முடன் நெட்ஒர்க் ஒப்பந்தம் போட்டிருந்த SIFI யின் ஒப்பந்தம் முடிந்துவிட்டது .FINACLE மென்பொருளை நமக்கு வழங்கிய இன்போசியஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வருகிற ஜூலை மாதத்தோடு நிறைவடைகிறது .மீண்டும் இன்போசியஸ் உடன் ஒப்பந்தம் போட நமது மேல்மட்ட அதிகாரிகள் விரும்பவில்லை ...ஏற்கனவே IPPB கம்பெனியுடன் POSB சேர்க்கப்படுவதாக வந்த செய்தி உறுதியானது மட்டுமல்ல IPPB -POSB யோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நமது PLI /RPLI யும் அதோடு சேர்த்து நமது DATA சென்டர்யையும் சேர்த்து எடுத்துக்கொள்ள பேரம் நடந்துகொண்டிருக்கிறது .ஏற்கனவே CEPT   முழுவதும் IPPB கம்பெனியுடன்   வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் செல்லவிருக்கிறது .இனி மிச்சமிருக்கும் CSCமட்டுமே நம்மிடம் அதுவும் 2023 வரை தான் இருக்ககூடும் என்கின்ற நிலையில் அஞ்சல் அலுவலகங்களில் நெட்ஒர்க் பிரச்சினையை குறித்து நாம் யாரிடம் பேச போகிறோம் ?எந்த அதிகாரிகளால் நெட்ஒர்க் பிரச்சினையை தீர்த்திட முடியும் ..

இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் ஊழியர்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் PAN UPDATION ,SILENT கணக்குகளை புதுப்பித்தல் மற்றும் CC BRIGDE மற்றும் FINACLE இவைகளுக்கிடையில் இன்னும் DISCHARGE செய்யப்படாத பல ஆயிரம் NSC /KVP பத்திரங்களை DISCHARGEசெய்து முடிக்க கொடுக்கப்பட்ட பணி இவைகள் எல்லாம் 31.03.2022குள் முடிக்கப்படவேண்டும் .இதற்கிடையில் லொகின் மேளா என சூழ்நிலைகளை புரிந்துகொள்ளாத அதிகாரிகளின் கெடுபிடிகள் ......இவை ஒருபுறம் 

மறு புறம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் சொல்லும் சப்பை காரணங்களை கேட்டுக்கொண்டு வாடிக்கையாளர் போவார்கள் ? உங்கள் கம்ப்யூட்டரை குப்பையில் தூக்கி போடு --பூட்டு இருந்தால் உங்கள் ஆபீசை மூடுங்கள் என்று அங்கங்கே நாம் கேட்டுக்கொள்ளும் கோப வார்த்தைகள் --இதெற்கெல்லாம் முடிவு உண்டா ?எங்கள் ஊழியர்களுக்கு விடிவுதான் உண்டா ?

               பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? நாங்கள் சாகவோ ?

இனியொரு விதி செய்வோம் ---தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Wednesday, March 16, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

                                                   இறுதி வெற்றி நமதே !

நமது முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர் தோழர்                                         RN .பராசர் அவர்களுக்கு அவரது ஓய்வு நாள் அன்று கொடுக்கப்பட்ட விதி 14 குற்றப்பத்திரிக்கை பிறகு விதி 9   யின் கீழ் கொண்டுவரப்பட்ட  நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் ..தொழிற்சங்க பணி செய்திட அவர் மேற்கொண்ட அயற்பணி விண்ணப்பித்ததில் ஏற்கனவே அயற்பணியில் அவர் இருந்ததை மறைத்து விண்ணப்பித்தார் என்ற அற்ப காரணத்தை சொல்லி மதுரா SSP தொடுத்திட்ட வழக்கு இன்று CPMG UP அவர்களின் பரிந்துரையின் பேரில் இந்திய குடியரசு தலைவர் அவர்களால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது .அற்ப காரணங்களுக்காக தொழிற்சங்க நிர்வாகிகளை முடக்கிவிடலாம் என தப்பு கனக்குபோடும் அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம் .நமது பொதுச்செயலர் தோழர்  RN .பராசர்  அவர்களுக்காக களம் கண்ட அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --E.அருண் குமார் கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, March 15, 2022

                                             அஞ்சல் கூட்டுப் போராட்ட குழு நெல்லை கோட்டம் 

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

                                  எதிர்வரும் மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தில்  பங்கேற்பது  குறித்து நமது அஞ்சல் துறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு NFPE --FNPO   சங்க நிர்வாகிகள் புதுடெல்லியில் கூடி மீண்டும் POSTAL JCA எல்லா மட்டங்களிலும் அமைப்பது என்றும் நமது துறை சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்ட போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுத்தார்கள் .

                     அதன் அடிப்படையில்  14.03.2022 திங்கள் மாலை பாளை தலைமை அஞ்சலகத்தில்  (NFPE ,FNPOமற்றும் AIGDSU  ) கோட்ட செயலர்கள்  கூட்டம் நடைபெற்றது .இதில் NFPE சார்பாக தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் E .அருண்குமார் மற்றும் T .புஷ்பாகரன் அகியோர்களும் FNPO சார்பாக தோழர் G.சிவகுமார் S .ராம்குமார் பால கிருஷ்ணன் ஆகியோர்களும் AIGDSU சார்பாக தோழர் I.ஞான பாலசிங் ஆகியோரும் கலந்துகொண்டனர் 

  நடக்கவிருக்க இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் நெல்லை கோட்டத்தில் முழுமையாக நடத்துவது என்றும் அதனை தொடர்ந்து  கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது  

1.நெல்லை அஞ்சல் கூட்டு போராட்ட குழுவின் தலைவராக தோழர் சிவகுமார் .G. கன்வீனராக தோழர் SK .ஜேக்கப் ராஜ் பொருளாளராக தோழர் I.ஞானபாலசிங்  ஆகியோர் செயல்படுவார்கள் 

2.வேலைநிறுத்த சுற்றறிக்கை அம்பைகிளைகள் (NFPE -FNPO மற்றும் AIGDSU )  ,RMS  R3 R4   PSD திருநெல்வேலி  P4  மற்றும் SBCO  ஆகிய அனைவரையும் இனைத்து வெளியிடுவது 

3.வேலைநிறுத்த சுற்று பயணங்கள் சேர்ந்து செல்வது 

24.03.2022  வியாழன் புறநகர் பகுதிகள் 

25.03.2022  வெள்ளி மாநகர் பகுதிகள் 

25.03.2022வெள்ளி மாலை 5.45 மணிக்கு பாளை தலைமை அஞ்சலகத்தில் வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் 

28.03.2022 அன்று முதல் நாள் வேலைநிறுத்தம் அன்று அனைத்து சங்கங்களையும்  உள்ளடக்கிய ஆர்ப்பாட்டம் --ஊர்வலம் 

 தோழர்களே !நடக்கவிருக்கும் போராட்டம் நமது துறையை காக்கும் போராட்டம் .ஏற்கனவே IPPB எனும் கம்பெனி நமது சேமிப்பு பிரிவினை கொள்ளை கொண்டு போக நெருங்குகிறது ,CEPT  எனும் தொழிற் நுட்ப அமைப்பு முற்றிலும் IPPB  பிடிக்குள் போக போகிறது ..ஆம் அஞ்சல் துறை தனியார் பிடிக்குள் செல்லாமல் இருக்க இனி ஒன்றுபட்ட போராட்டம் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டு  செயல்படுவோம் ஆதரவளிப்போம் !

விரிவான சுற்றிக்கையுடன் விரைவில் சந்திப்போம் !

நன்றி --அஞ்சல் கூட்டு போராட்ட குழு நெல்லை 

Monday, March 14, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

அஞ்சல் வாரிய இடமாறுதல் கொள்கை 17.01.2019 குறித்தான விளக்க ஆணை ---நாள் 03.03.2022

*விதி 38 யின் கீழ் இடமாறுதல் பெற ஓராண்டு சேவை போதுமானது .முந்தைய உத்தரவில் probation காலத்தில் இடமாறுதல் விண்ணப்பிக்க முடியாது என்பது மாற்றப்பட்டுள்ளது 

*இனிமேல் category மற்றும் mode of recruitment (அதாவது direct recruit or promotive என மாநிலங்களுக்குள் நடக்கும் இட மறுதல்களுக்கு பார்க்க தேவையில்லை .பிற மாநிலஙக்ளுக்கு செல்லும் போது  category மற்றும் mode of recruitment பார்க்கவேண்டும் 

*இனி மாதாந்திர அடிப்படையில் இடமாறுதல்கள் பரிசீலிக்கப்படுவதால் temporary transfer என்ற முறை வேண்டுமா என்பதற்கு rule 38 என்பது நிரந்தரமானது temporary transferஎன்பது short term பயனுக்கானது .ஆகவே temporary transfer  முறையும் தொடரும் 

*ஏற்கனவே waiting list உள்ளவர்களின் நிலை அதே நிலையில் தொடரும் .2018க்கு முன்னதாக விண்ணப்பித்தவர்க்ளுக்கு விண்ணப்பிக்கப்பட்ட தேதியும் 2019முதல் 2021வரை விண்ணப்பித்தவர்களுக்கு சேவையின் காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் 

*விதி 38  க்காக கணக்கில் எடுத்துக்கொள்ள முந்தையமாதம்  வரையுள்ள vacancy கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் composinate மற்றும் sports கோட்டாவிற்க்கான ஒதுக்கீடுகள் கழித்து தான் கணக்கில் எடுக்கப்படும் 

rule 38யின் விண்ணப்பிக்க இனி ஒரு வருடம் சேவை முடித்தால் போதும் மற்றும் மாதந்தோறும் விண்ணப்பிக்கலாம் என்கின்ற உத்தரவு நமக்காகவா ?இல்லை SSAமூலம் தேர்ச்சி பெற்றுவரும் மற்றவர்களுக்காகவா ?

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை