அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
நித்தமும் நெட்ஒர்க் பிரச்சினை எனும் தீராத அவதி -அன்றாட பணிகளை முடிக்க பல மணிநேர போராட்டம் --இதற்கு விடிவு உண்டா ?இல்லை முடிவுதான் உண்டா ?கலைய வேண்டும் நிர்வாகத்தின் மெத்தனம் --மீண்டும் ஒலிக்கவேண்டும் நமது தோழர்களின் உரிமை குரல்
இந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் இருந்தே நாம் நித்தமும் நெட்ஒர்க் பிரச்சினையில் சிக்கி தவித்து கொண்டிருக்கிறோம் ....நெட்ஒர்க் கோளாறா ?இல்லை FINACLE குளறுபடியா என்ற விவாதத்தில் மேல்மட்ட அதிகாரிகள் தங்கள் பொறுப்பை தட்டி கழித்து வருகிறார்கள் .தங்கள் அதிகார வரையறைக்குள் பணியாற்றுகின்ற ஊழியர்கள் ஒவ்வொருநாளும் இவ்வாறு போராடி போராடி தங்களது அன்றைய நாள் கணக்கை முடிக்கிறார்கள் என்பதை தெரிந்திருந்தாலும் எந்த அதிகாரிகளிடம் இருந்தும் பதில் வருவதில்லை .ஆனால் மேல்மட்டத்தில் விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வருகின்றன ..
நம்முடன் நெட்ஒர்க் ஒப்பந்தம் போட்டிருந்த SIFI யின் ஒப்பந்தம் முடிந்துவிட்டது .FINACLE மென்பொருளை நமக்கு வழங்கிய இன்போசியஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வருகிற ஜூலை மாதத்தோடு நிறைவடைகிறது .மீண்டும் இன்போசியஸ் உடன் ஒப்பந்தம் போட நமது மேல்மட்ட அதிகாரிகள் விரும்பவில்லை ...ஏற்கனவே IPPB கம்பெனியுடன் POSB சேர்க்கப்படுவதாக வந்த செய்தி உறுதியானது மட்டுமல்ல IPPB -POSB யோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நமது PLI /RPLI யும் அதோடு சேர்த்து நமது DATA சென்டர்யையும் சேர்த்து எடுத்துக்கொள்ள பேரம் நடந்துகொண்டிருக்கிறது .ஏற்கனவே CEPT முழுவதும் IPPB கம்பெனியுடன் வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் செல்லவிருக்கிறது .இனி மிச்சமிருக்கும் CSCமட்டுமே நம்மிடம் அதுவும் 2023 வரை தான் இருக்ககூடும் என்கின்ற நிலையில் அஞ்சல் அலுவலகங்களில் நெட்ஒர்க் பிரச்சினையை குறித்து நாம் யாரிடம் பேச போகிறோம் ?எந்த அதிகாரிகளால் நெட்ஒர்க் பிரச்சினையை தீர்த்திட முடியும் ..
இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் ஊழியர்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் PAN UPDATION ,SILENT கணக்குகளை புதுப்பித்தல் மற்றும் CC BRIGDE மற்றும் FINACLE இவைகளுக்கிடையில் இன்னும் DISCHARGE செய்யப்படாத பல ஆயிரம் NSC /KVP பத்திரங்களை DISCHARGEசெய்து முடிக்க கொடுக்கப்பட்ட பணி இவைகள் எல்லாம் 31.03.2022குள் முடிக்கப்படவேண்டும் .இதற்கிடையில் லொகின் மேளா என சூழ்நிலைகளை புரிந்துகொள்ளாத அதிகாரிகளின் கெடுபிடிகள் ......இவை ஒருபுறம்
மறு புறம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் சொல்லும் சப்பை காரணங்களை கேட்டுக்கொண்டு வாடிக்கையாளர் போவார்கள் ? உங்கள் கம்ப்யூட்டரை குப்பையில் தூக்கி போடு --பூட்டு இருந்தால் உங்கள் ஆபீசை மூடுங்கள் என்று அங்கங்கே நாம் கேட்டுக்கொள்ளும் கோப வார்த்தைகள் --இதெற்கெல்லாம் முடிவு உண்டா ?எங்கள் ஊழியர்களுக்கு விடிவுதான் உண்டா ?
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? நாங்கள் சாகவோ ?
இனியொரு விதி செய்வோம் ---தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
அன்பார்ந்த
ReplyDeleteதோழ௹க்கு வணக்கம்.
தயவு செய்து நான் தெரிவிக்கின்ற கருத்து தவறாக இருந்தால் தவிர்த்து விடுங்கள்.
எங்கெல்லாம் கணினி வேலை நிர்வாக மற்றும் குறைந்த வலைத்தள வேகம் காரணமாக பொது மக்களுக்கு சேவை பாதிக்கப்பட்டது என்பதை அந்தந்த பகுதி ஊழியர்கள் நமது சங்க உறுப்பினர்கள் உங்களிடம் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது (watsup. இமெயில்)
அடுத்த நாள் நமது அனைத்து சங்க நிர்வாகிகளுடன் மாலை குறைந்த பட்சம் 2/3 அலுவலகம் சென்று உள்ளூர் முகவர்கள் முக்கிய பிரமுகர்கள் அரசியல் கட்சிகள் குறைந்தது 10 நபர்களிடம் அஞ்சல் சேமிப்பு வங்கி செயல்படாமல் இருப்பதற்கு, நத்தை வேகத்தில் கணினி வேலை செய் தற்கும் காரணம் உழியர்கள் இல்லை என்பதையும் எடுத்துக் கூற வேண்டும்.
இப்படி நமது டிவிஷன் அளவில் நான்கு திசைகளிலும் கூட்டம் நடத்தி பொது மக்களுக்கு தெரிவித்து விட்டு ஒரு விடுமுறை நாளில் மாவட்ட அளவில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் நமது பக்க நியாயத்தை புரிய வைக்க வேண்டும்.
முடிந்தால் அனைத்து தொழில் சங்க(மாநில, மத்திய அரசு தனியார் சங்கம்) தலைவர்கள் முன்னிலையில் பொது கூட்டம் நடத்தி தவறு ஊழியர்கள் பக்கம் இல்லை, நிர்வாக குறைபாடுகள் என்பதை ஊடக மூலம் தெரிவிக்க வேண்டும்.
நிட்சயம் பலன் கிடைக்கும்.
அஞ்சல் துறை சேவை சாமானிய மக்கள் சேவை. அதனை பாதுகாப்பது நமது கடமை.
அனைத்து வங்கி இருப்பு தொகை ஐ விட பல கோடி இருப்பு உள்ளதை தனியார் /உலக பன்னாட்டு நிறுவனங்கள் பங்கு போட அனுமதிக்க வாய்ப்பு கூடாமல், மத்திய அரசு மூலம் நாட்டின் பொதுமக்கள் நல திட்ட களுக்கு vupayokikka
K. PONNURAJ
ReplyDeleteதடங்கல்கள் ஏற்பட்டது. வருந்துகிறேன்.
முந்திய கருத்தின் தொடர்ச்சி.
நமது அஞ்சல் வங்கி PLI. மேலும் RPLI ஆகிய திட்டங்கள் மூலம் நிரந்தர இருப்பு உள்ளது என்பதை நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் அல்லது RTI. மூலம் தெரிந்து அந்தந்த மாநில அளவில் சேமித்த தொகைக்கு ஏற்ப மத்திய அரசு குறைந்த வட்டிக்கு கொடுக்க (உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம் மூலம் வாங்குவது தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.)
அப்போது தான் நமது India உண்மையான சுயசார்பு வல்லரசுகளின் வரிசையில் சேர அஞ்சல் துறை சேமிப்பு உதவும்.
நாடும் MAKE IN INDIA கொள்கை இல் வெற்றி பெறும்.
நமது அஞ்சல் துறை அதிகாரிகள் இதனை உணர்ந்து இலாகா அழியாமல் பார்த்து கொண்டால் வரலாற்றில் இடம் பெறுவர். ஆளும் கட்சிக்கு நற்பெயர் கிடைக்கும்.
எந்த அதிகாரிகளும் ஊழியர்களை குறைத்து மக்களின் சேவை தனியாருக்கு தாரை வார்க்க துணை போனால் அவர்களின் பதவிக்கு விரைவில் உள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். உதாரணம் ஏர் இந்தியா, பிஎஸ்என்எல்.
ஓன்று பட்டால் உண்டு வாழ்வு.
வாழ்க NFPE. வளர்க இந்தியா.
K. PONNURAJ
EX. EDDA
SANKARNAGAR
19-3-2022
எதுவும் தவறு இருந்தால் பொருந்து
கொள்ள வேண்டுகிறேன்.