...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 16, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

                                                   இறுதி வெற்றி நமதே !

நமது முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர் தோழர்                                         RN .பராசர் அவர்களுக்கு அவரது ஓய்வு நாள் அன்று கொடுக்கப்பட்ட விதி 14 குற்றப்பத்திரிக்கை பிறகு விதி 9   யின் கீழ் கொண்டுவரப்பட்ட  நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் ..தொழிற்சங்க பணி செய்திட அவர் மேற்கொண்ட அயற்பணி விண்ணப்பித்ததில் ஏற்கனவே அயற்பணியில் அவர் இருந்ததை மறைத்து விண்ணப்பித்தார் என்ற அற்ப காரணத்தை சொல்லி மதுரா SSP தொடுத்திட்ட வழக்கு இன்று CPMG UP அவர்களின் பரிந்துரையின் பேரில் இந்திய குடியரசு தலைவர் அவர்களால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது .அற்ப காரணங்களுக்காக தொழிற்சங்க நிர்வாகிகளை முடக்கிவிடலாம் என தப்பு கனக்குபோடும் அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம் .நமது பொதுச்செயலர் தோழர்  RN .பராசர்  அவர்களுக்காக களம் கண்ட அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --E.அருண் குமார் கோட்ட செயலர்கள் நெல்லை 

2 comments:

  1. NFPE GHINDHABAD.
    அடக்குமுறை என்றும் வென்றதில்லை என்பதற்கு 20 ஆண்டுகள் வியட்நாம் போர். மேலும் ஆப்கனிஸ்தான் தோல்வி, இவற்றின் மூலம் வல்லரசுகளின் எண்ணங்கள் தற்போது சமாதானம், அமைதி வழியில் திரும்பி உள்ளன.
    தேவையற்ற, ஆதாரமற்ற தண்டனைகள் கொடுத்த வல்லரசுகள் நிம்மதி இழந்து பொருளாதார வீழ்ச்சி அடைந்து திருந்தி இப்போது நிம்மதி அடையும் நேர‌ம்.
    (ஆனால் அதற்குள் மறைந்த உயிர்கள் எண்ணிக்கை சில இலட்சம்.)
    இது தெரியாமல் தொழில் சங்க தலைவர்களை இலாகா விதியை சரியாக புரியாமல், தண்டிக்கும் அதிகாரிகள் திருந்த முயற்சிக்க வேண்டும்.
    ஒன்றை அதிகாரிகள் உணர வேண்டும். 1989-90. ஆண்டுகளில் தபால் தந்தி இலாகாவை பிரிக்க ஆளும் வர்க்கம் முயற்சியில் ஈடுபட்ட போது அஞ்சல் துறை தலைவர்கள் உறுதியான போராட்டம் மூலம் தான் இன்று இந்த தண்டனை வழங்கிய அதிகாரி பதவியில் இருக்கிறார்.
    எங்களை கழட்டி விட்ட பிஎஸ்என்எல். அதிகாரிகள் நிலை விருப்ப ஓய்வு.
    கட்டாயம். அஞ்சல் துறை அதிகாரிகள் இப்போது உணரவில்லை எனில் உங்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே புகுந்து ஆளு‌ம் வர்க்கம் இழப்பை உண்டாக்கும்.
    ஓன்று படுஓம். வென்று சாதனை புரி ஓம்.
    இந்திய அஞ்சல் துறையை மேம்படுத்த உறுதி கொள்ஓம்.
    இந்தியா நல்லரசு ஆகி வல்லரசு என முன்னேற நிட்சயம் அஞ்சல் ஊழியர்கள் துணை நிற்பார்கள்.
    வாழ்க nfpe வளர்க அஞ்சல் துறை.
    உங்கள் comrade
    K. PONNURAJ
    Ex. Edda.
    SANKARNAGAR.
    Tirunelveli.
    17-3-30

    ReplyDelete