அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம்
வெல்லட்டும்! வேலைநிறுத்தம் வெல்லட்டும் ! பரவட்டும் தீ பரவட்டும் ! போராட்ட தீ பரவட்டும் !
வருகிற மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தம் நிச்சயம் இந்த அரசாங்கத்தை ஊழியர்களின் பிரச்சினைகளின் மீது தனது கவனத்தை திருப்பும் என்பதில் ஐயமில்லை ...நமது ஒன்றுபட்ட போராட்ட அறிவிப்பு வந்தபின் அஞ்சல் வாரியம் நமக்குவேண்டுகோள் விடுக்கிறது ...இத்தனை நாட்களாய் பாராமுகமாய் இருந்த அஞ்சல் வாரியம் நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைகிறது என்றால் இது வழக்கமான ஒன்று என யாரும் எளிதில் கடந்துபோக கூடியதல்ல ..கவனிக்கத்தக்கது ..
பழைய வரலாறுகளை திரும்பி பார்த்தால் எத்தகைய நெருக்கடிகளுக்கு இடையில் இந்த இயக்கத்தை நமது தலைவர்கள் வழிநடத்தி இருக்கிறார்கள் என்பது புரியும் .அரசாங்கத்தால் விலைபேசப்பட்டபோதும் எத்தனை தலைவர்கள் அதை நிராகரித்து கடும் விலை கொடுத்து ஊழியர்களின் நலன் காத்தார்கள் என்பது விளங்கும் . வானவில் போன்ற வண்ணமுடைய நமது இயக்கம் என்பதால் கருத்தோட்டங்கள் பலவற்றையையும் ஏற்று ஒருங்கிணைத்து ஒரு ஒற்றுமையை கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல ..
நமது சங்கம் எத்தனை சோதனைகளை கடந்து வந்திருக்கிறது .ஆட்சி மாற்றங்களினால் ஏற்பட்ட அரசின் கொள்கை முடிவுகள் நம்மை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தாக்கியபோது தயங்காமல் தளராமல் போராடிய பெருமை நமக்குண்டு
இன்றைய தினம் நமது சங்கத்தில் பல இளைய தோழர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள் ...அவர்களின் போராட்ட குணம் ,போராட்டத்தில் அவர்கள் காட்டும் ஆர்வம் நம்மை வியக்கவைக்கிறது ...புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கைக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் ....நமது பகுதி கோரிக்கைகளை மட்டுமே முன்னிறுத்தி போராட வேண்டும் என்று நமது தமிழ் மாநிலசங்கமும் எல்லா அரங்கிலும் நமது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறது ...தற்சமயம் புதுப்பிக்கப்பட்ட போஸ்டல் JCA வும் இந்த ஒன்றுபட்ட போராட்டம் நமது துறை சார்ந்த கோரிக்கைகளுக்குக்காகவும் தொடரும் என அறிவித்துள்ளார்கள்
ஆகவே இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிபெற வைப்பது நமது ஒவ்வொருவரின் கடமை .அதுவும் நாடெங்கிலும் தொழிலாளிகள் ஒருகுடையின் கீழ் ,அஞ்சல் துறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டம் --இதை சரியாக பயன்படுத்துவோம் ..இந்த துறையை காக்கவேண்டிய கடமையை நாம் நிறைவேற்றுவோம்
பரவட்டும் தீ பரவட்டும் ! போராட்ட தீ பரவட்டும் !
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment