...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 20, 2014

பாஸ்போர்ட் வின்னப்பங்கள்  அஞ்சல் அலுவலகங்களில் பெறப்படும் --
நமது CCR  PMG அவர்கள் தகவல்  


ஜூலை மாதம் வந்தால், சென்னை வாசிகள் தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நல்வசதி கிடைக்கும்.
இதற்காக தபால் துறையும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எப்படி இச்சேவை சுமுகமாக்குவது என திட்டங்களை வகுத்து வருகிறது. மேலும், எந்தெந்த தபால் நிலையங்களில் இந்த சேவையை அளிக்கலா என்று ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.
இது குறித்து தபால் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்: "பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டி வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள ஊழியர்களிடம் விண்ணப்ப படிவத்தை பெற்று விபரங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிலிருக்கும் தகவல்களை ஊழியர் ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்வார். விண்ணப்பதாரர்கள், தங்கள் வயதுச் சான்று, இருப்பிடச் சான்று போன்ற ஆவணங்களை எடுத்துச் செல்வது அவசியம். தபால் ஊழியர்களுக்கு, விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் விண்ணப்பதாரருக்கு அதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் பாஸ்போர்ட் மையங்களில் நடைபெறும் நேர்காணலுக்கான தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
முதற்கட்டமாக இத்திட்டம், சென்னை, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் மொத்தம் 25 தபால் அலுவலகங்களில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குறிப்பாக 10 தபால் நிலையங்களில் இந்த சேவை வழங்கப்படவுள்ளதாகவும். மக்கள் வரவேற்பை பொறுத்து படிப்படியாக இச்சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தபால் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
கட்டண விபரம்:
தபால்நிலையங்களில், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வாடிக்கையாளர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் சேவையைப் பெற இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கட்டணத்தை ஆன்லைனிலும் செலுத்தலாம் இல்லையெனில் பாரத ஸ்டேட் வங்கி மூலமும் செலுத்தலாம் என போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பதிவு செய்யும் பணியை மட்டுமே தபால்துறை ஊழியர்கள் செய்வார்கள் என்றும் விண்ணப்பதாரர் விபரங்களை சரிபார்க்கும் பணியை தபால்துறை மேற்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.
மேலும் தபால் ஊழியர்கள் பல விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யு எதுவாக அவர்களுக்கு பிரத்யேக கணினி பயன்பாட்டு பெயர் மற்றும் ஐ.டி. வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Source : Tamil The Hindu

0 comments:

Post a Comment