தோழர் V.கடற்கரையான்டி DY POSTMASTER நாகர்கோவில் அவர்களின் பணி நிறைவு விழா சிறக்க வாழ்த்துகிறோம
நான் 31.08.2020 --- இடம்.நாகர்கோவில
அஞ்சல் சேவையெனும்
அற்புத சேவையை
முத்து நகரில் தொடங்கி
வீரமிகு நெல்லை........
தீரமிகு கோவில்பட்டி தொடர்ந்து
நாஞ்சில் வரை விரிந்து கிடக்கும் எங்கள்
கடற்கரையே நீவிர் வாழ்க!
கள்ளம் கபடமற்ற உள்ளம்
கொண்ட உன்னத தோழர்
கடற்கரை அகலத்தை போல
அகன்ற மனம் கொண்டவர்
அதிகாரியாய் இருந்த நாட்களில் கூட
எதிரியாய் எவருக்கும் தெரியாதவர்
நாட்டிலே பணிமூப்பு பட்டியலில் முதலில் இருந்தவரே!
பதவி ஏற்கும் போதும்
வந்த தடைகளை முறியடித்தவரே!
நீங்கள் சந்தித்த சவால்கள் எத்தனை?
விளக்கங்கள் எத்தனை?
விசாரணைகள் எத்தனை?
அத்தனையும் சர்வ சாதாரணமாக
எதிர்கொண்டவர்
அதிகாரிகளின் தொலைபேசிகளை
அலட்சியமாய் பார்த்தது
அவர்களின் கோபங்களையும்
நிதானமாக ரசித்தது
உங்களை தவிர
வேறு யாராலும் முடியாது
ஊழியர்கள் நலன் காப்பதிலும்
உடனிருப்பவர்களுக்கு
உதவி கரம் நீட்டியதிலும்
நிகரற்றவர் -சமூகத்தில் நிறமற்றவர்
ஏற்றுக்கொண்ட சங்கத்தில்
பற்றுக்கோண்டு பயனித்தாய்
ஏற்றத்தாழ்வு வந்த போதும்
கெட்டியாகவே பதிலலித்தாய்
உங்கள் பணி ஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துகள்
தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை