...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 18, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                               நமது NELLAI NFPE மகிளா கமிட்டிக்கு வாழ்த்துக்கள் 

நமது தொழிற்சங்க செய்திகளை பகிர்ந்துகொள்ளவும் தங்களது பிரச்சினைகளை தயக்கமின்றி விவாதிக்கவும்  தொழிற்சங்க செயல்பாடுகளில் தோழியர்களை முழுமையாக ஈடுபடுத்தவும் நமது கோட்ட மகிளா கமிட்டி தனக்கென்று தனி வாட்ஸாப் குரூப்பை தொடங்கியயு ள்ளார்கள் 

NELLAI NFPE QUEENS BEES  என்ற பெயரில் மகிளா கமிட்டி முன்னணி தோழியர்களே அட்மினாக இணைந்து இந்த குழு செயல்படுகிறது .இந்த அரும்பணியில்  மிக ஆர்வமாக களமிறங்கியிருக்கும் நமது கோட்ட மகிளா கமிட்டி நிர்வாகிகள் குறிப்பாக கன்வீனர் தோழியர் S.முத்துபேட்சியம்மாள் அவர்களுக்கு NELLAI NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .ஏற்கனவே கடந்த நமது கோட்ட மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் NFPE மகிளா கமிட்டி கோட்ட சங்க நிர்வாகிகளுக்கு இணையான ஒரு அமைப்பாக செயல்படும் என்பதனை மெய்ப்பிக்கும் வகையில் தங்களது சேவையை தொடங்கியுள்ள அனைத்து தோழியர்களுக்கும் மீண்டும் எங்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் ..நமது தோழியர்களில் கவிஞர்கள் கதை ஆசிரியார்கள் பேச்சாளர்கள் வர்ணனையாளர்கள் நடிகர்கள் என பன்முகம் கொண்ட தோழியர்கள் உள்ளார்கள் என்பது நமக்கு கூடுதல் பெருமை .

                                நேற்றைய நன்கொடையாளர்கள் 

1.தோழியர் MP.விஜயா LSG OA  (RETD) (இன்றுவரை நமது கோட்ட சங்க பதிவுகளில் தனது கருத்துக்களை பதிவிட்டுவரும் தொழிற்சங்க ஆர்வலர் )

ரூபாய் 2000

2.தோழர் V.சங்கரன் PA  RETD தச்சநல்லூர் ரூபாய் 500

3.தோழர் A.நயினார் PA  RETD பேட்டை ரூபாய் 500

                                        அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு 

தபால்காரர் மற்றும் MTS சங்கத்தின் மாநில செயற்குழு வருகிற 21.08.2020 வெள்ளியன்று காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது .

                                                வரவேற்கிறோம் 

நமது கோட்டத்திற்கு புதிதாக வந்துள்ள தோழியர் வளர்மதி (APMSB HSGII ) பாளையம்கோட்டை அவர்களை NELLAI NFPE வாழ்த்திவரவேற்கிறது 

                     நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


                                               


0 comments:

Post a Comment