...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, August 19, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                               முக்கிய செய்திகள் 

நமது கோட்டத்தில் MACP  I .II & III பதவியுயர்விற்கான கமிட்டி நேற்றுகூடியது .நமது SSP அவர்கள் சேர்மனாகவும் தூத்துக்குடி கண்காணிப்பாளர் மற்றும் நாகர்கோயில் சீனியர் போஸ்ட்மாஸ்டர் ஆகியோர்கள் உறுப்பினர்களாகவும் கொண்ட இந்த கமிட்டி நடப்பு காலம் வரையிலான பதவியுர்வு வரை  பரிசீலித்தது .

*HSG II UNFILLED  இடங்களில் பணியமர்த்தப்படும் LSG ஊழியர்கள் ரெகுலர் HSG II  ஊழியர்கள் வந்தால் தொடர்ந்து அந்த பதவிகளில் நீடிக்கமுடியாது என்றாலும் நாம் நினைக்கிறபடி  HSG II ஊழியர்கள் புதிதாக வந்துவிடப்போவதில்லை .இடமாறுதலில் பழைய PM GRADE II  இன்றைய HSG II ஊழியர்கள் வருவது மட்டுமே  சாத்தியம் .

IPPB மெகா மேளா AEPS பரிவர்த்தனை குறித்து சில உபகோட்ட அதிகாரிகள் கொஞ்சம் கடுமையாகவே நடந்துகொள்வதாக தெரிகிறது .இந்த காலகட்டம் கோரானாவால் நாடே ஏன் உலகமே முடங்கிக்கிடக்கும் சூழலில் தபால்காரர்கள் GDS ஊழியர்களை இப்படி மேளா மேளா என துன்புறுத்துவது குறித்து தமிழக அஞ்சல் நான்கு சங்கம் CPMG  அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளது .

                                                நேற்றைய நன்கொடையாளர்கள் 

1.பெயர் சொல்ல விரும்பாத தோழியர் --ரூபாய் 3000

2. தோழர் ஷேக் மாதர் பணிஓய்வு சேரன்மகாதேவி ரூபாய் 1000

 அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment