...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 28, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

 நமது நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் திரு .S .கலைச்செல்வன் அவர்கள் இந்தமாதம் பணிஓய்வு பெறுகிறார்கள் .அவர்களுக்கு NELLAI -NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .நமக்கு புதிய கண்காணிப்பாளர் திரு .L .துரைசாமி அவர்கள் வரும்வரை மதுரை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் நம் கோட்டத்திற்கு மிகவும் பரிச்சயமானவர் திரு .K .லட்சுமணன் அவர்கள் கூடுதல் பொறுப்பேற்கிறார் .திரு KL .அவர்களை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம் .

*வருமானவரி தாக்கல் செய்ய கடைசி தேதி 31.12.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 

*போஸ்டல் ஆர்டர் கிளை அஞ்சலகங்கள் மூலம் விற்பனைசெய்வதற்கான வழிவகைகள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் இயக்குனரகம் கருத்துக்களை கேட்டுள்ளது ..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, October 27, 2020

   அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நமது மத்திய சங்கத்தின் செயற்குழு வருகிற 03.11.2020 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது .இதில் முக்கிய பொருளாக 26.11.2020 அன்று நடைபெறும் பொது வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்கப்படுகிறது .ஒரே கோரிக்கைகளை வைத்து போராடினால் தான் அரசின் கவனம் நம் கோரிக்கைகளின் மேல் திரும்பும் .ஆனால் சமீபகாலமாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்க்கட்சிகள் எந்த தேதியில் போராடுகிறதோ அதே தேதியை நமது சம்மேளனமும் தேர்ந்தெடுத்து பொதுக்கோரிக்கைகளை    PART -A என்றும் நமது  துறை சார்ந்த கோரிக்கைகளை PART -B எனவும் கொடுத்து போராடுகிறார்கள் .PART -A கோரிக்கைகளில் வழக்கம் போல் விலைவாசி அனைவருக்கும் ரேஷன் என்பதுடன்    இந்தாண்டு பஞ்சப்படி நிறுத்தம்     FR 56((j) & (i)     MACP க்கன பெஞ்சுமார்க் புதியபென்ஷன் ரத்து என்ற கோரிக்கைகளும் PART -B பிரிவில்(அஞ்சல் பகுதி ) கோவிட் கால சிறப்பு விடுப்பு      கமலேஷ் சந்திரா கமிட்டி வாரம் 5 நாட்கள் வேலை    CSC என நினைவில்   தோன்றியவைகளை கோரிக்கைகளாகவும்  வைத்துள்ளனர் .நமது மத்திய சங்க செயற்குழுவில் எத்தனை மாநில செயலர்கள் இந்த   பொதுவேலைநிறுத்ததில்  பங்கேற்க ஆதரவு தெரிவிக்கப்போகிறார்கள் எத்தனை மாநிலங்கள்    கூட்டத்தில் ஆதரவும்    மாநிலத்தில் மவுனமும் காக்க போகிறார்கள் என்று தெரியவில்லை .1991 முதல் நாம் இந்த பொது வேலைநிறுத்தங்களில்  பங்கேற்று வந்திருந்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில மாநிலங்களில் மட்டுமேஅஞ்சல் துறையில் இந்த பொதுவேலைநிறுத்தங்களில் ஊழியர்கள்  இறக்கப்படுகிறார்கள் என்பதும் மத்தியஅரசு துறைகளில் நமது அஞ்சல் துறையை தவிர ஏனைய துறைகளில் இந்த போராட்டம் குறித்த செய்திகள் கூட ஊழியர்களிடம் கொண்டுசெல்லப்படுவதில்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை .மத்திய   அரசு ஊழியர்கள்   மகா சம்மேளன அகிலஇந்திய -மாநில நிர்வாகிகள் பலபேர் ஓய்வுபெற்ற ஊழியர்கள் என்பதும்  வேறு விஷயம் .ஆரம்ப நாட்களில் நமது நாட்டில் கடைபிடிக்கப்பட்டுவந்த கலப்புபொருளாதார கொளகை கைவிடப்பட்டு காங்கிரஸ் காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார கொளகைகளை கண்டித்து வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன .நாளடவையில் ஊழியர்களிடம் ஆண்டுக்கொருமுறை வழக்கமான வேலைநிறுத்தம் என்கின்ற சலிப்பை புரிந்துகொண்ட  சங்கங்கள் இடைச்செருகலாக பகுதி கோரிக்கைகள் என பிரித்து ஊழியர்களை மிகவும் சிரமத்தின் நடுவே போராட்டத்தில் இறக்கிவிட்டார்கள் .அதிலும் பல கோட்டங்களில் இந்த பொதுவேலைநிறுத்தங்கள் குறித்து கோட்டமட்டத்தில் செயற்குழு /பொதுக்குழு முடிவுகளின் அடிப்படையிலும் போராட்டத்தில் பங்கேற்கவா  /வெளியில் இருந்து ஆதரிக்கவா என இருவேறு நிலைகளை எடுக்க தொடங்கினார்கள் .தமிழகத்தை பொறுத்தவரை ஊழியர்கள் போராட்டத்திற்கு சளைத்தவர்கள் அல்ல ..ஆனால் நமது துறைசார்ந்த கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் இதுபோன்ற பொது வேலைநிறுத்தத்தில் மட்டுமே பங்கேற்பது சர்மரோகநிவாரணம் என்பதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள் .ஆகவே மத்திய செயற்குழுவில் நமது தமிழகத்தின் குரல் ஊழியர்களின் உண்மை நிலையை எடுத்துரைக்கவேண்டும் என்பதே ஒரு சாதாரண சராசரி ஊழியர்களின் எண்ணம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, October 24, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                 தென்மண்டல தலைவருடன் ஒரு சந்திப்பு 

நேற்று மதியம் 2.30 மணியளவில் நமது கோட்ட பிரச்சினை சம்பந்தமாக நமது தென்மண்டல செயலர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களலோடு நமது PMG திரு .நடராஜன் அவர்களை சந்தித்து பேசினோம் .நமது கோரிக்கைகளை மிகவும் பொறுமையோடும் கனிவோடும் கேட்டறிந்து ஆவண செய்வதாக உறுதியளித்தார்கள் .சந்திப்பின் இடையிலேயே நமது PMG அவர்கள் 2006 ஆம் ஆண்டு நமது திருநெல்வேலி கோட்டத்தில் பணியாற்றியபோது அந்த பழையநாட்களை நினைவு கூர்ந்து பேசினார்கள் .ஒரு நாள் இடைவெளியில் நமது PMG அவர்களை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட்ட நமது மண்டல செயலர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நேற்று என்னோடு உடன்வந்த நமது கோட்ட நிதிச்செயலர் பிராபாகரன் அவர்களுக்கும் நன்றி ....

தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, October 23, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

   போனஸ் உத்தரவு வந்துவிட்டது .இலாகா ஊழியர்களை போல நமதருமை GDS ஊழியர்களுக்கும் சேர்த்து ஒரே நாளில் உத்தரவு வந்துவிட்டது .வழக்கம் போலவே வெற்றியை பங்குபோட்டு கொள்ள மற்ற சங்கங்களும் போனஸ் தங்களால் தான் வந்ததாக தம்பட்டம் அடிக்க தொடங்கிவிட்டார்கள் .ஆனால் போனஸ் உத்தரவிற்குள்ளும் ஒரு நியாயமான நமது கோரிக்கை புதைந்துகிடக்கிறது அல்லது புதைக்கபட்டுக்கொண்டிருக்கிறது .ஆம் அதுதான் போனஸ் பார்முலாவை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை ...கடந்த சில வருடங்களாக தீபாவளி நெருங்கும் வேளையில் ஒவ்வொருஆண்டும் போனஸ் பார்முலாவை மாற்ற கோரி கடிதங்கள் கொடுப்பதுண்டு .ஆனால் இந்தாண்டு போனஸ் கிடைத்தாலே போதும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டதும் துரதிஷ்ட்டமான ஒன்று .இன்னும் எத்தனை வருடங்களுக்கு ADHOC போனஸ் என்று 60 நாட்களோடு திருத்தியாவது ? போனஸ் கணக்கீட்டு முறை சரிதானா அதை தொழிற்சங்கங்களுக்கு வழங்கவேண்டும் கணக்கீட்டில் மாற்றம் வேண்டும் என தோழர் RAP .சிங் அவர்கள் பொதுச்செயலாராக இருந்த காலத்தில் தொடங்கி அதனை தொடர்ந்து நம்முடைய தலைவர் அண்ணன் KVS அவர்கள் பொதுச்செயலராக இருந்த காலங்களிலும் வலியுறுத்தப்பட்டது . அதன் பின் ஏனோ இந்த  கோரிக்கையை வலியுறுத்தக்கூட  தயங்குவது ஏன் என்று தெரியவில்லை . கொடுத்தாலே போதும் என்றும் கிடைத்தால் லாபம் என்றும் இருக்கின்ற மனநிலைகளை மாற்றி போனஸ் கணக்கீட்டை மாற்றவேண்டும் என்ற நமது நியாயமான கோரிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க நமது தமிழ் மாநிலச்சங்கம் இந்த பிரச்சினையிலும் முன்கையெடுத்து மத்திய /சம்மேளன அளவிற்கு கொண்டு செல்லவேண்டும் ....

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, October 22, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

மாநில சங்கத்திற்கு குறிப்பாக மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களுக்கு நன்றி !நன்றி ! நமது கோட்ட செயல் தலைவர் N .கண்ணன் அவர்கள் HRA பிரச்சினையை மீண்டும் CPMG அளவில் எடுத்து இன்று CPMG அலுவகத்தில் இருந்து நமது தென்மண்டல அலுவகத்திற்கு விளக்கம் கேட்டு வந்துள்ளது .இந்த பிரச்சினையில் நிர்வாகம் முடியாது என மறுத்தத்தையும் மீண்டும் REOPEN செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது .

LSG  பதவிஉயர்வில் வெளி கோட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நமது தோழர்கள் மீண்டும் மறு ஒதுக்கீட்டில் நமது நெல்லைக்கோட்டத்திற்கே ஒதிக்கீடு பெற்றுள்ளார்கள் .அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .மறு ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றவர்கள் இன்றே தங்களது விருப்ப மனுக்களை கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவும் ..

நமது கோட்ட SSP ஆக திரு .L.துரைசாமி அவர்கள் பொறுப்பேற்கவிருக்கிறார்கள் .1992-1993 காலகட்டத்தில் வள்ளியூர் உப கோட்ட அலுவகத்தில் ஆய்வாளாராக ,மதுரை பயிற்சி மையத்தில் ஆற்றல்மிகு பயிற்றுனராக தென்மண்டல அலுவாக்கத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் .அவர்களின் சேவை நெல்லையில் சிறக்க வாழ்த்துகிறோம் !வரவேற்கிறோம் !

HSG I மற்றும் HSG II  பதவிகளில் LOCAL ARRANGEMENT  குறித்து கோட்ட நிர்வாகம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் உத்தரவிற்கு நன்றி !நன்றி .தேவையில்லாமல் மூத்த தோழர் /தோழியர்களுக்கு இடையூறு செய்திட நடந்த முயற்சிகள் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது .

போனஸ் உத்தரவுகள் வந்துவிட்டன ..ரயில்வே பாதுகாப்பு மற்றும் மத்தியஅரசு ஊழியர்கள் மகா சம்மேளனங்களின் போராட்ட மிரட்டலுக்கு பிறகுதான் இந்த அறிவிப்புகள் வந்துள்ளது என்பது உண்மை .நாடு முழுவதும் ஊழியர்களை திரட்டி ஊழியர்களிடையே நமது கோரிக்கையின் மீதான நியாயங்களை விளக்கி இமயம் முதல் குமரி வரை மத்தியஅரசு ஊழியர்களின் போராட்ட உணர்வை கூர்படுத்தி அதன்மூலம் மத்திய அரசுக்கு ஒருநெருக்கடிகளை தந்தபின் தான் போனஸ் கொடுக்க அரசு இசைந்துள்ளது என்பதனை நினைவில் கொள்ளுவோம் .தானாய் எல்லாம் மாறும் என்பதெல்லாம் பழைய பொய்யடா என்ற பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது ..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Sunday, October 18, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே!

                  அஞ்சல் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டி ஆர்ப்பாட்டம் 

நாள் --20.10.2020 செவ்வாய்   நேரம் மாலை 6.மணி 

இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் (PSD வாயில் )

அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு மற்றும் GDS ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து நடத்தும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம் .ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நாம் ஏற்கனேவே அறிவித்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் .

இதுபோன்ற ஊழியர்களை நேரிடையாக பாதிக்கின்ற விசயங்களில் நம்மை தவிர வேறு எவரும்  போராட்டத்தை முன்னெடுக்கப்போவதில்லை.நாம் போராடுவது நமக்கு மட்டுமல்ல நம்மை  சுற்றியுள்ள அனைவருக்கும் சேர்த்துதான் என்பதும் மறுக்கமுடியாத உண்மை .அதே போல் போனஸ் குறித்தும் ஒரு நீண்ட நெடிய வீரம் செறிந்த வரலாறு நமக்கு உண்டு .நமது மகா சம்மேளனமும் போனஸ் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அரசு தனது முடிவை அறிவிக்காவிட்டால் ஒரு வேலைநிறுத்தத்திற்கு செல்ல நாம் தயாராக இருக்கவேண்டும் என்றும் ரயில்வே தொழிற்சங்கங்களும் போனஸ் அறிவிக்காவிட்டால் நேரடி தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதாக அறிவித்துள்ளது .

---------------------------------------------------------------------------------------------------------------------

பஞ்சப்படி உயருமா ? கிடைக்குமா ?என கடந்த இருதினங்களாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன .அதாவது பஞ்சப்படி கணக்கீடு என்பதன் அடிப்படை வருடம் 2016 என மாற்றப்பட்டு அன்று 100 புள்ளி இருந்ததாக கருதப்பட்டு உயர்வு ஏற்படும் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்படும் என அதற்கான கமிட்டி தனது முடிவை அறிவிக்கவுள்ளது  .தற்சமயம் நமக்கு 2001 ஆண்டு அடிப்படை வருடத்தை  கணக்கிட்டு பஞ்சப்படி வழங்கப்பட்டு வருகிறது .மேலோட்டமாக பார்த்தால் பஞ்சப்படி உயர்வு 2016 ஆண்டின் அடிப்படையில் இருந்தால் உயரத்தான் செய்யும் ஆனால் ஏற்கனவே உள்ள நுகர்பொருளில் சிலவற்றை நீக்க மத்தியஅரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது .அதில் தான் நமக்கு அச்சமும் ஆபத்தும் தெரிகிறது .பழைய அடிப்படையில் நுகர்வோர் குறீயீட்டை  நிர்ணயிக்க லக்னோ மற்றும் கொல்கத்தாவில்  செயல்பட்டுவரும் ஆய்வு மையங்கள் அந்த கணக்கெடுப்பை செய்துவருகிறது .தற்சமயம் INDUSTRIYAL மற்றும் அரசு ஊழியர்க்ளுக்கு முறையே 3 மற்றும் 6 மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் விலை குறீயீட்டின் அடிப்படையில் பஞ்சப்படி வழங்கப்பட்டுவருகிறது .அதில் நுகர் பொருளாக இருக்கும் சில பொருள்களில் மாற்றம் செய்துவிட அரசு முனைந்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன .ஆகவே பஞ்சப்படி தொடர்ந்து நமக்கு கூடுதலாக கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஊழியர்களுக்கு  போக்கவேண்டும் .ஆக நேற்றைய பத்திரிக்கை செய்திகள் ஏதோ முடக்கப்பட்ட பஞ்சபடியை அரசு முன் வந்து தருவதாக தவறுதலாக நினைத்துக்கொள்ளவேண்டாம் .சீர்திருத்தம் என்றாலே சீரழிவு என்று மற்றொரு பொருள் அதற்கு உண்டு என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது .

தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Saturday, October 17, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே 

                                  நமது கோட்டத்திலும் CSC (COMMON SERVICE CENTRES )  வந்துவிட்டது .ஆரம்பத்தில் தலைமை அஞ்சலகத்தில் மட்டுமே செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட CSC இன்று LSG  க்கு மேலான அனைத்து அலுவலகங்களிலும் செயல்படவிருக்கிறது .அனைத்து e -governance சேவைகளையும் கிராம புற மற்றும் remote பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நாம் இந்த சேவையை நடத்தவேண்டும் ..அதற்காக நமது கோட்டத்தில் இன்று சுமார் 50 ஊழியர்களுக்கு மேல் இரண்டுமணிநேரம் google meet மூலம் பயிற்சிகள் கொடுக்கப்படுகிது .மேலும் சிலருக்கு திங்களன்று பயிற்சிகள் நடைபெறுகிறது அனைத்துவகையான recharge தொடங்கி சுமார் 30 கும் மேற்பட்ட சேவைகளை நாம் செய்யவிருக்கிறோம் ..ஏற்கனவே ஆதார் பணிகளில் மற்ற துறைகளைவிட நாம் இழுத்துபிடிதுசெய்து  வருகிறோம் .அதேபோல் தங்கப்பத்திரம் விற்பனையும் நாம் அதிகளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் .ஒருகிராம் விற்றால் நமது துறைக்கு கிடைப்பதோ  50 ரூபாய் கமிஷன் .ஆனால் நாம் அதையும் தாண்டி பணியாற்றி கொண்டிருக்கிறோம் இருக்கிற அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்த முடியாமல் மேலும் மேலும் ஊழியர்கள் மீது சுமைகளை சுமத்திடவே இலாகா துடிக்கிறது .அகிலஇந்திய அளவில் அனைத்து சங்கங்களுக்கும் கடிதங்கள் எழுதி மட்டுமே  தங்கள் எதிர்ப்பை ?காட்டி வருகிறது .அஞ்சல் துறையின் முதன்மை சேவைகள் எங்கோ இன்று இவைகளை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறது ........சிந்திக்கவேண்டிய தருணம் ..அஞ்சலக பகுதிக்கோரிக்கைகள் மீதான கவனத்தை நமது அகிலஇந்திய /சம்மேளனங்கள் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டியதும் நமது கடமை .ஆண்டிற்கொருமுறை அதுவும் பொதுவேலைநிறுத்ததில் மட்டுமே ஊழியர்களை இறக்கிவிட்டு மற்றவிஷயங்களில் தீவிரம் காட்டாமல் இருப்பது ஏற்புடையதல்ல ....

வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, October 16, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

மத்தியஅரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய போனஸ் தொகையினை  பூஜா தொடங்குவதற்குள் வழங்கிடவேண்டும் என்றும் முன்னதாக இந்த நடைமுறைகள் அனைத்து ஆண்டுகளிலும் கடைபிடிக்கப்பட்டது என்று நமது மத்தியஅரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் மீண்டும் அரசை வலியுறுத்தியுள்ளது இதனிடையே போனஸ் குறித்த கோப்புகள் அஞ்சல் வாரியத்திடமிருந்து நிதியமைச்சக ஒப்புதலுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 

----------------------------------------------------------------------------------------------------------------------

பண்டிகை முன்பணம்....

பண அட்டை சலுகைகள்....

மத்திய அரசு ஊழியர்களுக்கு...!😌

"பொருளாதாரத்தை முடுக்கி விடும் விதமாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக" நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார் !

⚡பொருளாதாரம் இயங்க வேண்டும் என்றால் நுகர்வோர் (மக்கள்) கையில் பணம் இருக்க வேண்டும் என்பதை நிதியமைச்சர் ஒத்துக்கிட்டாரா என்ன ?

⚡நிதியமைச்சர் அறிவிப்பின் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் கையில் ரூ 9675 கோடி பணம்.... 

செலவழிக்கக் கிடைக்கும்.

⚡ஆனால்.....

இதே நிதியமைச்சர் தான்.... ஊழியர்களின் பஞ்சப்படியாக சம்பளத்தில் தரவேண்டிய 

ரூ.37,530 கோடியை தராமல் பிடித்து வைத்திருக்கிறார் 

நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK ஜேக்கப் ராஜ் -Tபுஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, October 15, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                             கூட்டு பொதுக்குழு கூட்டம் 

நாள் -20.10.2020 செவ்வாய் கிழமை  நேரம் மாலை 6 மணி 

இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

கூட்டுதலைமை --தோழர் T .அழகுமுத்து கோட்ட தலைவர் P 3  தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் தலைவர் P -4 

பொருள் --1.நமது தபால்தந்தி சம்மேளனத்தின் தந்தை தோழர் பாபுதா ராபாதா -அவர்களின் லாகூர் மாநாட்டு உரை -நூற்றாண்டு துவக்க விழா -கருத்துரை 

                ---2.தமிழக அஞ்சல் மூன்றில் 19 ஆண்டுகளாக மாநில செயலராக பணியாற்றிய மறைந்த தோழர் பாலு அவர்களின் 5 -ம் ஆண்டு நினைவேந்தல் 

             --- 3.அஞ்சல் மூன்றின் கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களின் கவிதை நூல் வெளியிடு 

         ----4.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் ) அனைவரும் வருக !

தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, October 14, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                 நம்மை  விடாது GST ?

SPECIAL FESTIVEL  PACKAGE குறித்து 12.10.2020 தேதியிட்ட உத்தரவிற்கு 13.10.2020 அன்று (SOP _எனும் விளக்க ஆணையை அதே அமைச்சகம் வெளியிட்டுள்ளது .அதன்படி பண்டிகை கால முன் பணம் விண்ணப்பிக்கிறவர்களுக்கு SBI மூலம் ரூபாய் 10000 க்கான UTSAV ப்ரீபெய்ட் கார்டு வழங்கப்படும் .இந்த ப்ரீபெய்ட் கார்டு 2021 மார்ச் வரை பயன்படுத்தமுடியும் .எல்லா பரிவர்தனைகளுக்கும் NOMINAL சார்ஜ் + GST வசூலிக்கப்படும் .எங்கே சுற்றினாலும் GST யி டமிருந்து மட்டும் நாம் தப்பிக்கமுடியாது .சம்பளம் வாங்கினால் வருமானவரி தொழில்வரி இன்று மேலும் GST .......?

 பஞ்சப்படி முடக்கம் கடந்த 01.01.2020 முதல் அமுலில் உள்ளது .இதற்குள் இரண்டு DA பெற்றிருப்போம் .தசரா பண்டிகை நெருங்குகிறது வழக்கமாக வந்துசேரவேண்டிய போனஸ் குறித்து மூச்சும் இல்லை பேச்சும் இல்லை நமது சம்மேளனமும் மகா சம்மேளனமும் நவம்பரில் நடக்கவிருக்கும் பொதுவேலைநிறுத்ததில் தான் முனைப்பாக இருக்கிறார்களே தவிர போனஸ் குறித்து  எந்த நடவடிக்கைகளையும் தீவீரமாக எடுத்திடவில்லை .இப்படி நேரடியாக ஊழியர்களை பாதிக்கும் பிரச்சினைகளிலாவது நமது சம்மேளனம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எங்களது விருப்பம் .போனஸ் குறித்து பழம்பெருமை பேசியது போதும் .(ALL FOR BONUS -NONE FOR BONUS இந்த விவாதங்கள் நமது அமைப்பை பலப்படுத்தின ...ஆனால் இன்றோ கொடுத்தால் வாங்கிக்கொள்வோம் என்ற நிலையில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோமா ?என சுயபரிசோதனை அவசியம் ....

தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, October 13, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! முக்கிய செய்திகள் 

                                     பண்டிகை முன்பணம் --ரூபாய் 10000

கடந்த ஊதியக்குழுவில் நீக்கப்பட்ட பல்வேறு முன் பணங்களில் பண்டிகைக்கால முன்பணமும் ஒன்று .ஒரு பத்து மாத தவனையோடு வட்டியில்லாமல் வழங்கப்பட்ட இந்த முன்பணம் என்ன காரணத்தினாலோ நீக்கப்பட்டது .இப்பொழுது நேற்று மத்திய நிதியமைச்சகதின் கீழ் இயங்கும் DEPARTMENT OF EXPENDITURE 12.10.2020 தேதியிட்ட உத்தரவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு SPECIAL FESTIVAL PACKAGE எனும் திட்டத்தை அறிவித்துள்ளது அதன்படி முக்கிய பண்டிகைகளுக்கு இந்த PACKAGE மார்ச் 2021 வரை வழங்கப்படும் வழங்கப்படும் தொகை ரூபாய் 10000 பிடிக்கப்படும் அதிகப்பட்ச தவணை 10.இந்தாண்டு தீபாவளிக்கு பெற்றுக்கொள்ளலாம் .

                                                      LTC SPECIAL CASH  PACKAGE 

கொரானா காலத்தில் LTC சலுகைகளை பெறமுடியாதவர்களுக்கு S PECIAL CASH  PACKAGE  திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ரயில் பயணம் தகுதியுள்ளவர்களுக்கு குடும்பத்தில் ஒருநபருக்கு ரூபாய் 6000 எகனாமிக் AIR தகுதியுள்ளவர்க்ளுக்கு ரூபாய் 20000 அடுத்தநிலை ரூபாய் 36000 (அதிகாரிகளுக்கு )  கிடைக்கும் .எத்தனைபேர் ஒருகுடும்பத்தில் தகுதி உள்ளார்களோ அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட தொகையில் இருந்து மூன்று மடங்கு மற்றும் லீவ் ENCASHMENT சேர்த்து பொருட்களை வாங்கி அதை GST ரசீதுடன் சேர்த்து கொடுக்கவேண்டும் .GST ரசீது முக்கியம் .ஆகவே LTC 2018-2021 ஆண்டுக்கான LTC வசதியை பெறாதவர்கள் இந்த LTC SPECIAL CASH  PACKAGE  பெற்றுக்கொள்ளலாம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, October 10, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

அஞ்சல் துறை  அஞ்சல் வாரத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது .நாமெல்லாம்  தோழர் பாபு தாரா பாதா முகர்ஜி அவர்களின் லாகூர் மாநாட்டின் தலைமையுரையின் நூற்றாண்டை வரவேற்றுக்கொண்டிருக்கிறோம் .எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு நமது கோட்டத்தில் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் மஹாராஜநகர் அஞ்சலகம் மின்னொளியில் ஜொலிக்கின்றன .அரசு ஒருபக்கம் அஞ்சல் வாரத்தை கொண்டாடட்டும் .நமது பார்வைக்கோ இந்த அலங்காரங்கள் எல்லாம் தோழர் பாபு தாரா பாதா அவர்களின் முழக்கத்திற்கு கிடைத்த வரவேற்புகள் என மனதிற்குள் நினைக்க தோன்றுகிறது ...

அன்றைய காலக்கட்டத்தில் அதிகாரிகள் காட்டிய இனவெறி அதாவது ஆங்கிலேயன் அடுத்து ஆங்கிலோ -இந்தியர் கடைசியாக இந்தியர் என ஊழியர்களை வகைப்படுத்தி பிரித்து வெள்ளைக்காரனுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை சீனியாரிட்டியில் சலுகை வருடாந்திர ஊதிய உயர்விலும் பாகுபாடு ஏன் கிரெடேஷன் பட்டியல் கூட பென்சிலால் எழுதப்பட்டு அதிகாரிகளுக்கு தேவைப்படுவோருக்கு அதை அழித்தோ திருத்தியோ எழுதிக்கொள்ளும் வழக்கம் என்பதுவரை மிக சர்வசாதாரணமாக இருந்தது .இந்த பின்னணியில் தான் தொழிலாளி கையேந்தும் பிச்சைகாரனல்ல என்று முழங்கினார் நம் தலைவர் --அன்றைய கால காட்டத்தில் (வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் )ஒன்றுபடுங்கள் என்பது தேச துரோக வார்த்தையாக இருந்தது .நமது தலைவரும் நம்மை ஒன்றுபடுங்கள் என்றுதான் அழைத்தார் ...அதற்ககாதான் நிர்வாகம் அவருக்கு கொடுத்த பரிசு பணிநீக்கம் ......நீங்கள் மிருகங்கள் அல்ல எது  நடந்தாலும் கண்டும் காணாமல் செல்வதற்கு -நாம்  மனிதர்கள் பல விசேஷ குணாதியசங்கள் நமக்கு உண்டு பின்பு ஏன் கையேந்தி நிற்கவேண்டும் என ஊழியர்களை சிந்திக்கவைத்தவன் ---(நேற்றைய ஒரு நிகழ்வில் தலைவர் KVS அவர்கள் ஆற்றிய ஒரு உரையில் இருந்து ....)

நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.பபுஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, October 7, 2020

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .

                                                        ஆர்ப்பாட்டம் -வெல்லட்டும் 

நாள் -07.10.2020   புதன்கிழமை 

இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

நேரம் -மாலை 6 மணி 

கூட்டுத் தலைமை -தோழர்கள் T .அழகுமுத்து (P 3) 

A .சீனிவாசசொக்கலிங்கம் (P 4)

அஞ்சல் பகுதி கோரிக்கைகளை முன்னிறுத்தி குறிப்பாக இந்தாண்டு வழங்கப்படவேண்டிய போனஸ் விரைந்து அறிவித்திட ,கொரானா காலத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கிட ,GDS ஊழியர்களுக்கு விடுபட்ட பரிந்துரைகளை நிறைவேற்றிட ,அனைத்து காலி பணிஇடங்களையும் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டம் வெல்லட்டும் .இந்த ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

                                                        போராட்ட வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, October 6, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                              07.10.2020 புதன் கிழமை ஆர்ப்பாட்டம் --

நேரம்--- மாலை 6 மணி  இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் தலைமை தோழர்கள் T .அழகுமுத்து --A .சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர்கள் நெல்லை 

தீபாவளி நெருங்குகிறது .அஞ்சல் துறைக்கு எத்தனை நாள் போனஸ் என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் கடந்து இன்று போனஸ் கிடைத்தாலே போதும் என்ற சூழ்நிலை நிலவுகிறது .COMPULSORY RETIREMENT மற்றும் COMPULSORY DEPOSIT என முந்தைய மிசா காலத்து கொடுமைகளை காட்டிலும் இன்று ஊழியர்கள் படுகின்ற  நெருக்கடிகள் மனஉளைச்சல்கள் சொல்லிமாளாது .இந்தசூழலில் கொரானா பெருந்தொற்று காலத்தில் களப்பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களுக்கான நலன்களை கொடுப்பதிலும் அரசு மற்றும் நிர்வாகம் அலட்சியத்தை காட்டுகிறது .பெருந்தொற்று ஏற்பட்ட ஊழியர்க்ளுக்கு அல்லது அவர்க்ளின் குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அந்த  ஊழியர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய சூழலில் ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கை நிர்வாகத்தின் காதுகளுக்கு இன்னும் சென்றடையவில்லை .கொரானா தொற்றால்  உயிரிழந்த ஊழியர் தம் குடும்பத்திற்கு கருணை அடிப்படையிலான பணி வழங்கிடவேண்டும் இழப்புத்தொகை ரூபாய் 10 லட்சம் உடனே வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கைகளும் இந்த பேரிடர் காலத்திலும் அஞ்சல் வாரியம் விதிக்கும் டார்கெட் IPPB ஒருபக்கம் AEPS ஒருபக்கம் அஞ்சல் வாரத்தை முன்னிட்டு இந்தமாதம் முதல் நிதி தன்னிறைவு முகாம் -சேமிப்பால் செழிப்பு என்ற அறிவிப்போடு ஒவ்வொரு தலைமை அஞ்சலகம் முதல் கிளை அஞ்சலகம் வரை நாளொன்றுக்கு இத்தனை கணக்குகளை பிடிக்கவேண்டும் என்ற அறிவிப்பு மேலும்  GDS ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி சிபாரிசுகள் அனைத்தையும் நிறைவேற்றிடல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நமது NFPE சம்மேளனம் அறிவித்துள்ள முதல் கட்ட போராட்டமான கோட்டமட்டத்தில் நடைபெறும்  ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்வோம் .புது உற்சாகத்தோடு உத்வேகத்தோடு தோழியர்களும் பெருமளவில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

                                                     


Saturday, October 3, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ..

நெல்லை மாநகரத்திற்குள் குறிப்பாக பாளையம்கோட்டை பெருமாள்புரம் மஹாராஜநகர் உள்ளிட்ட முக்கிய அஞ்சலக்ளுக்கு SECOND MAIL  தொடர்ந்து தாமதமாக வருவதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம் .பல அலுவலகத்தில் இருந்து SECONDMAIL எத்தனை மணிக்கு எவ்வளவு நேரம் கழித்துவந்தாலும் அதுவரை தாபலகாரர்களை காத்து கிடக்க வைப்பது முறையல்ல .நிலைமை இவ்வாறுஇருக்க  நமது ஓட்டுனர்களை குறிவைத்து அவர்களுக்கு வேலைநேரம் முடிந்தபிறகும் மீண்டும் பொறியியல் கல்லுரிக்கு செல் என கூடுதல் வேலைப்பளுவை சுமத்துவது ஏற்புடையது அல்ல ..தினமும்  ஆயிரக்கணக்கில் குவியும் தபால்களை குறித்தநேரத்தில் குறித்த இடத்தில கொண்டுசேர்ப்பதற்கு கூடுதலாக இன்னோரு ஷேடுலை தற்காலிகமாக அமுல்படுத்துவதில் என்ன தவறு ? ஓட்டுனர்களை எதிரிகளாகவும்  அடிமைகளாகவும் நிலைக்கும் மனநிலையை சம்பந்தப்பட்டவர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும் .இதுகுறித்து 01.10.2020 அன்று நமது ASP (OD ) அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம் .மாற்றங்கள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம் ..

நன்கொடையாளர்களுக்கு நன்றி நன்றி 

திருமதி .ராஜலக்ஷ்மி மஹாராஜாநகர் --500  திருமதி ப்ரீத்தா --500 திருமதி ரம்யா 200

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை