அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
07.10.2020 புதன் கிழமை ஆர்ப்பாட்டம் --
நேரம்--- மாலை 6 மணி இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் தலைமை தோழர்கள் T .அழகுமுத்து --A .சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர்கள் நெல்லை
தீபாவளி நெருங்குகிறது .அஞ்சல் துறைக்கு எத்தனை நாள் போனஸ் என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் கடந்து இன்று போனஸ் கிடைத்தாலே போதும் என்ற சூழ்நிலை நிலவுகிறது .COMPULSORY RETIREMENT மற்றும் COMPULSORY DEPOSIT என முந்தைய மிசா காலத்து கொடுமைகளை காட்டிலும் இன்று ஊழியர்கள் படுகின்ற நெருக்கடிகள் மனஉளைச்சல்கள் சொல்லிமாளாது .இந்தசூழலில் கொரானா பெருந்தொற்று காலத்தில் களப்பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களுக்கான நலன்களை கொடுப்பதிலும் அரசு மற்றும் நிர்வாகம் அலட்சியத்தை காட்டுகிறது .பெருந்தொற்று ஏற்பட்ட ஊழியர்க்ளுக்கு அல்லது அவர்க்ளின் குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அந்த ஊழியர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய சூழலில் ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கை நிர்வாகத்தின் காதுகளுக்கு இன்னும் சென்றடையவில்லை .கொரானா தொற்றால் உயிரிழந்த ஊழியர் தம் குடும்பத்திற்கு கருணை அடிப்படையிலான பணி வழங்கிடவேண்டும் இழப்புத்தொகை ரூபாய் 10 லட்சம் உடனே வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கைகளும் இந்த பேரிடர் காலத்திலும் அஞ்சல் வாரியம் விதிக்கும் டார்கெட் IPPB ஒருபக்கம் AEPS ஒருபக்கம் அஞ்சல் வாரத்தை முன்னிட்டு இந்தமாதம் முதல் நிதி தன்னிறைவு முகாம் -சேமிப்பால் செழிப்பு என்ற அறிவிப்போடு ஒவ்வொரு தலைமை அஞ்சலகம் முதல் கிளை அஞ்சலகம் வரை நாளொன்றுக்கு இத்தனை கணக்குகளை பிடிக்கவேண்டும் என்ற அறிவிப்பு மேலும் GDS ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி சிபாரிசுகள் அனைத்தையும் நிறைவேற்றிடல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நமது NFPE சம்மேளனம் அறிவித்துள்ள முதல் கட்ட போராட்டமான கோட்டமட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்வோம் .புது உற்சாகத்தோடு உத்வேகத்தோடு தோழியர்களும் பெருமளவில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment