அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
போனஸ் உத்தரவு வந்துவிட்டது .இலாகா ஊழியர்களை போல நமதருமை GDS ஊழியர்களுக்கும் சேர்த்து ஒரே நாளில் உத்தரவு வந்துவிட்டது .வழக்கம் போலவே வெற்றியை பங்குபோட்டு கொள்ள மற்ற சங்கங்களும் போனஸ் தங்களால் தான் வந்ததாக தம்பட்டம் அடிக்க தொடங்கிவிட்டார்கள் .ஆனால் போனஸ் உத்தரவிற்குள்ளும் ஒரு நியாயமான நமது கோரிக்கை புதைந்துகிடக்கிறது அல்லது புதைக்கபட்டுக்கொண்டிருக்கிறது .ஆம் அதுதான் போனஸ் பார்முலாவை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை ...கடந்த சில வருடங்களாக தீபாவளி நெருங்கும் வேளையில் ஒவ்வொருஆண்டும் போனஸ் பார்முலாவை மாற்ற கோரி கடிதங்கள் கொடுப்பதுண்டு .ஆனால் இந்தாண்டு போனஸ் கிடைத்தாலே போதும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டதும் துரதிஷ்ட்டமான ஒன்று .இன்னும் எத்தனை வருடங்களுக்கு ADHOC போனஸ் என்று 60 நாட்களோடு திருத்தியாவது ? போனஸ் கணக்கீட்டு முறை சரிதானா அதை தொழிற்சங்கங்களுக்கு வழங்கவேண்டும் கணக்கீட்டில் மாற்றம் வேண்டும் என தோழர் RAP .சிங் அவர்கள் பொதுச்செயலாராக இருந்த காலத்தில் தொடங்கி அதனை தொடர்ந்து நம்முடைய தலைவர் அண்ணன் KVS அவர்கள் பொதுச்செயலராக இருந்த காலங்களிலும் வலியுறுத்தப்பட்டது . அதன் பின் ஏனோ இந்த கோரிக்கையை வலியுறுத்தக்கூட தயங்குவது ஏன் என்று தெரியவில்லை . கொடுத்தாலே போதும் என்றும் கிடைத்தால் லாபம் என்றும் இருக்கின்ற மனநிலைகளை மாற்றி போனஸ் கணக்கீட்டை மாற்றவேண்டும் என்ற நமது நியாயமான கோரிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க நமது தமிழ் மாநிலச்சங்கம் இந்த பிரச்சினையிலும் முன்கையெடுத்து மத்திய /சம்மேளன அளவிற்கு கொண்டு செல்லவேண்டும் ....
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment