அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! முக்கிய செய்திகள்
பண்டிகை முன்பணம் --ரூபாய் 10000
கடந்த ஊதியக்குழுவில் நீக்கப்பட்ட பல்வேறு முன் பணங்களில் பண்டிகைக்கால முன்பணமும் ஒன்று .ஒரு பத்து மாத தவனையோடு வட்டியில்லாமல் வழங்கப்பட்ட இந்த முன்பணம் என்ன காரணத்தினாலோ நீக்கப்பட்டது .இப்பொழுது நேற்று மத்திய நிதியமைச்சகதின் கீழ் இயங்கும் DEPARTMENT OF EXPENDITURE 12.10.2020 தேதியிட்ட உத்தரவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு SPECIAL FESTIVAL PACKAGE எனும் திட்டத்தை அறிவித்துள்ளது அதன்படி முக்கிய பண்டிகைகளுக்கு இந்த PACKAGE மார்ச் 2021 வரை வழங்கப்படும் வழங்கப்படும் தொகை ரூபாய் 10000 பிடிக்கப்படும் அதிகப்பட்ச தவணை 10.இந்தாண்டு தீபாவளிக்கு பெற்றுக்கொள்ளலாம் .
LTC SPECIAL CASH PACKAGE
கொரானா காலத்தில் LTC சலுகைகளை பெறமுடியாதவர்களுக்கு S PECIAL CASH PACKAGE திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ரயில் பயணம் தகுதியுள்ளவர்களுக்கு குடும்பத்தில் ஒருநபருக்கு ரூபாய் 6000 எகனாமிக் AIR தகுதியுள்ளவர்க்ளுக்கு ரூபாய் 20000 அடுத்தநிலை ரூபாய் 36000 (அதிகாரிகளுக்கு ) கிடைக்கும் .எத்தனைபேர் ஒருகுடும்பத்தில் தகுதி உள்ளார்களோ அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட தொகையில் இருந்து மூன்று மடங்கு மற்றும் லீவ் ENCASHMENT சேர்த்து பொருட்களை வாங்கி அதை GST ரசீதுடன் சேர்த்து கொடுக்கவேண்டும் .GST ரசீது முக்கியம் .ஆகவே LTC 2018-2021 ஆண்டுக்கான LTC வசதியை பெறாதவர்கள் இந்த LTC SPECIAL CASH PACKAGE பெற்றுக்கொள்ளலாம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSorry gds to pa pm
ReplyDeleteSorry gds to pa pm
ReplyDelete