அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
மத்தியஅரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய போனஸ் தொகையினை பூஜா தொடங்குவதற்குள் வழங்கிடவேண்டும் என்றும் முன்னதாக இந்த நடைமுறைகள் அனைத்து ஆண்டுகளிலும் கடைபிடிக்கப்பட்டது என்று நமது மத்தியஅரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் மீண்டும் அரசை வலியுறுத்தியுள்ளது இதனிடையே போனஸ் குறித்த கோப்புகள் அஞ்சல் வாரியத்திடமிருந்து நிதியமைச்சக ஒப்புதலுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
----------------------------------------------------------------------------------------------------------------------
பண்டிகை முன்பணம்....
பண அட்டை சலுகைகள்....
மத்திய அரசு ஊழியர்களுக்கு...!😌
"பொருளாதாரத்தை முடுக்கி விடும் விதமாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக" நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார் !
⚡பொருளாதாரம் இயங்க வேண்டும் என்றால் நுகர்வோர் (மக்கள்) கையில் பணம் இருக்க வேண்டும் என்பதை நிதியமைச்சர் ஒத்துக்கிட்டாரா என்ன ?
⚡நிதியமைச்சர் அறிவிப்பின் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் கையில் ரூ 9675 கோடி பணம்....
செலவழிக்கக் கிடைக்கும்.
⚡ஆனால்.....
இதே நிதியமைச்சர் தான்.... ஊழியர்களின் பஞ்சப்படியாக சம்பளத்தில் தரவேண்டிய
ரூ.37,530 கோடியை தராமல் பிடித்து வைத்திருக்கிறார்
நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK ஜேக்கப் ராஜ் -Tபுஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment