...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 27, 2020

   அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நமது மத்திய சங்கத்தின் செயற்குழு வருகிற 03.11.2020 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது .இதில் முக்கிய பொருளாக 26.11.2020 அன்று நடைபெறும் பொது வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்கப்படுகிறது .ஒரே கோரிக்கைகளை வைத்து போராடினால் தான் அரசின் கவனம் நம் கோரிக்கைகளின் மேல் திரும்பும் .ஆனால் சமீபகாலமாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்க்கட்சிகள் எந்த தேதியில் போராடுகிறதோ அதே தேதியை நமது சம்மேளனமும் தேர்ந்தெடுத்து பொதுக்கோரிக்கைகளை    PART -A என்றும் நமது  துறை சார்ந்த கோரிக்கைகளை PART -B எனவும் கொடுத்து போராடுகிறார்கள் .PART -A கோரிக்கைகளில் வழக்கம் போல் விலைவாசி அனைவருக்கும் ரேஷன் என்பதுடன்    இந்தாண்டு பஞ்சப்படி நிறுத்தம்     FR 56((j) & (i)     MACP க்கன பெஞ்சுமார்க் புதியபென்ஷன் ரத்து என்ற கோரிக்கைகளும் PART -B பிரிவில்(அஞ்சல் பகுதி ) கோவிட் கால சிறப்பு விடுப்பு      கமலேஷ் சந்திரா கமிட்டி வாரம் 5 நாட்கள் வேலை    CSC என நினைவில்   தோன்றியவைகளை கோரிக்கைகளாகவும்  வைத்துள்ளனர் .நமது மத்திய சங்க செயற்குழுவில் எத்தனை மாநில செயலர்கள் இந்த   பொதுவேலைநிறுத்ததில்  பங்கேற்க ஆதரவு தெரிவிக்கப்போகிறார்கள் எத்தனை மாநிலங்கள்    கூட்டத்தில் ஆதரவும்    மாநிலத்தில் மவுனமும் காக்க போகிறார்கள் என்று தெரியவில்லை .1991 முதல் நாம் இந்த பொது வேலைநிறுத்தங்களில்  பங்கேற்று வந்திருந்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில மாநிலங்களில் மட்டுமேஅஞ்சல் துறையில் இந்த பொதுவேலைநிறுத்தங்களில் ஊழியர்கள்  இறக்கப்படுகிறார்கள் என்பதும் மத்தியஅரசு துறைகளில் நமது அஞ்சல் துறையை தவிர ஏனைய துறைகளில் இந்த போராட்டம் குறித்த செய்திகள் கூட ஊழியர்களிடம் கொண்டுசெல்லப்படுவதில்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை .மத்திய   அரசு ஊழியர்கள்   மகா சம்மேளன அகிலஇந்திய -மாநில நிர்வாகிகள் பலபேர் ஓய்வுபெற்ற ஊழியர்கள் என்பதும்  வேறு விஷயம் .ஆரம்ப நாட்களில் நமது நாட்டில் கடைபிடிக்கப்பட்டுவந்த கலப்புபொருளாதார கொளகை கைவிடப்பட்டு காங்கிரஸ் காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார கொளகைகளை கண்டித்து வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன .நாளடவையில் ஊழியர்களிடம் ஆண்டுக்கொருமுறை வழக்கமான வேலைநிறுத்தம் என்கின்ற சலிப்பை புரிந்துகொண்ட  சங்கங்கள் இடைச்செருகலாக பகுதி கோரிக்கைகள் என பிரித்து ஊழியர்களை மிகவும் சிரமத்தின் நடுவே போராட்டத்தில் இறக்கிவிட்டார்கள் .அதிலும் பல கோட்டங்களில் இந்த பொதுவேலைநிறுத்தங்கள் குறித்து கோட்டமட்டத்தில் செயற்குழு /பொதுக்குழு முடிவுகளின் அடிப்படையிலும் போராட்டத்தில் பங்கேற்கவா  /வெளியில் இருந்து ஆதரிக்கவா என இருவேறு நிலைகளை எடுக்க தொடங்கினார்கள் .தமிழகத்தை பொறுத்தவரை ஊழியர்கள் போராட்டத்திற்கு சளைத்தவர்கள் அல்ல ..ஆனால் நமது துறைசார்ந்த கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் இதுபோன்ற பொது வேலைநிறுத்தத்தில் மட்டுமே பங்கேற்பது சர்மரோகநிவாரணம் என்பதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள் .ஆகவே மத்திய செயற்குழுவில் நமது தமிழகத்தின் குரல் ஊழியர்களின் உண்மை நிலையை எடுத்துரைக்கவேண்டும் என்பதே ஒரு சாதாரண சராசரி ஊழியர்களின் எண்ணம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

2 comments:

  1. Yes cenpersent correct every year it is camon to partisipate one day strick only all over postal employe participated but other cent govt dept not responding this calls central working comitte reexam the strick notice if strick all issue separate to separate date dont link with industril union

    ReplyDelete