...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 10, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

அஞ்சல் துறை  அஞ்சல் வாரத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது .நாமெல்லாம்  தோழர் பாபு தாரா பாதா முகர்ஜி அவர்களின் லாகூர் மாநாட்டின் தலைமையுரையின் நூற்றாண்டை வரவேற்றுக்கொண்டிருக்கிறோம் .எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு நமது கோட்டத்தில் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் மஹாராஜநகர் அஞ்சலகம் மின்னொளியில் ஜொலிக்கின்றன .அரசு ஒருபக்கம் அஞ்சல் வாரத்தை கொண்டாடட்டும் .நமது பார்வைக்கோ இந்த அலங்காரங்கள் எல்லாம் தோழர் பாபு தாரா பாதா அவர்களின் முழக்கத்திற்கு கிடைத்த வரவேற்புகள் என மனதிற்குள் நினைக்க தோன்றுகிறது ...

அன்றைய காலக்கட்டத்தில் அதிகாரிகள் காட்டிய இனவெறி அதாவது ஆங்கிலேயன் அடுத்து ஆங்கிலோ -இந்தியர் கடைசியாக இந்தியர் என ஊழியர்களை வகைப்படுத்தி பிரித்து வெள்ளைக்காரனுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை சீனியாரிட்டியில் சலுகை வருடாந்திர ஊதிய உயர்விலும் பாகுபாடு ஏன் கிரெடேஷன் பட்டியல் கூட பென்சிலால் எழுதப்பட்டு அதிகாரிகளுக்கு தேவைப்படுவோருக்கு அதை அழித்தோ திருத்தியோ எழுதிக்கொள்ளும் வழக்கம் என்பதுவரை மிக சர்வசாதாரணமாக இருந்தது .இந்த பின்னணியில் தான் தொழிலாளி கையேந்தும் பிச்சைகாரனல்ல என்று முழங்கினார் நம் தலைவர் --அன்றைய கால காட்டத்தில் (வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் )ஒன்றுபடுங்கள் என்பது தேச துரோக வார்த்தையாக இருந்தது .நமது தலைவரும் நம்மை ஒன்றுபடுங்கள் என்றுதான் அழைத்தார் ...அதற்ககாதான் நிர்வாகம் அவருக்கு கொடுத்த பரிசு பணிநீக்கம் ......நீங்கள் மிருகங்கள் அல்ல எது  நடந்தாலும் கண்டும் காணாமல் செல்வதற்கு -நாம்  மனிதர்கள் பல விசேஷ குணாதியசங்கள் நமக்கு உண்டு பின்பு ஏன் கையேந்தி நிற்கவேண்டும் என ஊழியர்களை சிந்திக்கவைத்தவன் ---(நேற்றைய ஒரு நிகழ்வில் தலைவர் KVS அவர்கள் ஆற்றிய ஒரு உரையில் இருந்து ....)

நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.பபுஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment