அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
நமது கோட்டத்திற்கு RULE 38 யின் மூலம் வருகின்ற 10 தோழர்களும் நமது NFPE பேரியக்கத்தின் உறுப்பினர்கள் என்பதனை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்வதோடு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் .
நேற்றைய இடமாறுதலில் நமது தோழர்களின் விருப்ப விண்ணப்பங்களை பரிசீலித்து அதில் 7 /8 நமது உறுப்பினர்களுக்கு இடமாறுதல்களை அளித்த நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கும் நமது கோட்ட அலுவலக தலைமை யிட ASP(OS ) அவர்களுக்கும் NELLAI NFPE சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் விடுபட்ட ஊழியர்களின் விருப்பமனுக்களை (அம்பை உட்பட } விரைந்து பரீசிலித்து தந்திடுமாறு நேற்று மாலை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறோம் .
LSG கோட்ட ஒதுக்கீடு வந்தவுடன் அனைத்தும் பரிசீலிக்கப்படும்(சமூகரெங்கபுரம் உட்பட ) என எதிர்பார்க்கிறோம் .
நேற்று நடைபெற்ற தபால்கார்களுக்கான சந்திப்பில் நமது SSP அவர்கள் பேசும்போது யாரையும் நாங்கள் டார்ச்சர் செய்யும் எண்ணம் இல்லை அனைத்தும் அன்பின் வேண்டுகோள்கள் தான் என மிக வெளிப்படையாக பேசியது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் தெரிவித்தது உள்ளபடியே நாங்கள் வரவேற்கிறோம் .நிர்வாகத்தின் இந்த அணுகுமுறையைத்தான் நாங்கள் (NFPE ) எதிர்பார்க்கிறோம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment