அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
ஒவ்வொரு ஆண்டும் நமது இலாகா சார்பாக விநியோகிக்கப்பட்டு வந்த காலண்டர் இந்த ஆண்டு சிக்கனத்தை காரணத்தை காட்டி நிறுத்தப்பட்டுள்ளது .அஞ்சலக விடுமுறைகள் RH வங்கி விடுமுறை நாட்கள் என பல தகவல்களை தாங்கி அந்த காலண்டர்கள் வரும் .ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் கூட நமது DEPARTMENT காலண்டர்யை தவிர வேறு காலண்டர்களை அலுவகத்தில் மாட்டிட கூடாது என பார்த்தவுடன் அகற்றிட உத்தரவு போட்டதுண்டு .ஆனால் செலவினங்களை குறைத்திடும் நோக்கத்தோடு அந்த பாரம்பரியம் நிறுத்தப்பட்டுளது. இதை உணர்ந்த நமது மாநில செயலர் இலாகா நிறுத்தினால் நமக்கென்ன அதை நமது மாநில சங்கம் தொடரும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .அதன் படி ஒரு காலண்டரின் விலை 40 என்றும் தேவைப்படுவோர் அந்தந்த கோட்ட /கிளை செயலர்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்கள் .ஆகவே நமது கோட்டத்தில் அலுவலக பயன்பாட்டிற்காக காலண்டர் தேவைப்படுவோர் கோட்ட சங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment